கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 April, 2018

ஆட்டோவும்... பின்னே ஆட்டோ ஓட்டுனர்களும்...


சமீபத்தில் வேதாரண்யம்.. மதுர.வடுகநாதன் என்பவரின் கடிதம் கண்ணில் பட்டது.. அது அவருடைய அனுபவமான தான் பயணித்த ஆட்டோவை பற்றி  எழுதியிருந்தார்... அந்த கடிதமானது.. 


”சமீபத்தில் ஆட்டோவில் பயணித்த போது, ஆட்டோ டிரைவர், தன் எதிரே இருந்த சிறிய பாக்ஸில் இருந்து புத்தகங்கள் சிலவற்றையும், இரண்டு நாளிதழ்களையும் எடுத்து என்னிடம் கொடுத்து, 'இறங்கும் வரைக்கும், இதப் படிச்சுட்டு வாங்க...' என்று கொடுத்தார்.


அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கி பார்த்தேன்; மூலிகை மருத்துவம், உடற்பயிற்சி, வாழ்வில் முன்னேற வழிகள் என, எல்லாமே வாழ்க்கைக்கு உதவும் புத்தகங்கள்.


மேலும், அந்த ஆட்டோ டிரைவர், 'புத்தகம், பேப்பருக்காக மாசம், 400 ரூபா செலவு பண்றேன் சார்... என் வண்டியில ஏறுறவங்களுக்கு பயணம் போரடிக்காம இருக்கும்; நாலு விஷயத்தை தெரிஞ்சுக்குவாங்க... இதனால, எனக்கும் ஒரு ஆத்ம திருப்தி...' என்றார்.


பிறருக்கு ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் எனும் எண்ணங்கொண்ட அவரை மனதாரப் பாராட்டினேன்.” இப்படி முடிந்திருந்தது அவருடைய அனுபவம்...


உண்மையில் பாரட்டக்குறியதுதான் அந்த ஆட்டோ ஓட்டுனரின் செயல்.. ஆனால் பொதுவாக நாம் பார்க்கும் ஆட்டோ ஓட்டுனர்னர் கொஞ்சம் அதிகபாடியான பயத்தை கொடுப்பவர்களாகத்தால் இருக்கிறார்கள்... முறைப்பு, கொஞ்சம் ரவுடித்தனம் இதெல்லாம் சர்வசாதரனமாக பார்க்க முடிகிறது...


பணம் மட்டுமே குறிக்கோளாக ஆட்டோ ஓட்டுனர்களின் செயல்பாடுகள் இருக்கிறது... ஆட்களை பிடிப்பது.... முந்தி செல்லவது.. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவது இப்படியாய் தான் பல ஆட்டோக்களை பார்த்திருக்கிறோம்... மேலும் ஆட்டோ டிரைவர்கள் நல்லவர்கள் தான் யாருக்கு என்றால் பயணத்தின் போது ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான்... மற்ற யாரையும் அவர்கள் மதித்ததாக எனக்கு தெரியவில்லை.


ஒருகாலத்தில் 10 ஆட்டோக்கள் மட்டுமே ஓடிக்கோண்டிருந்த இடங்களில் அசுர வளர்ச்சியாய் ஆயிரம் ஆட்டோக்கள் ஓடிக்கோண்டிருக்கிறது.... எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் என்னவோ மதிப்பிழந்து விட்டது காக்கைகள் போல.... நான் பார்த்து சாலை விதிமுறைகளை மீறுவதில் இவர்களுக்கு அதிகப்பங்கு இருக்கிறது...


பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சொல்லும் ஆட்டோக்கள் இருக்கிறதே... பீரோவில் துணிகளை அடுக்கிவைத்தது போல இருக்கும் இருபுறமும் புத்தகபைகளை தொங்கவைத்துக்கொண்டு... பார்ப்பதற்கு கொஞ்சம் அச்சம் ஏற்படுவது எனக்குமட்டும்தான என்று தெரியவில்லை. மேலும் இதற்கு காரணம் பெற்றோர்களின் சிக்கனமா?... ஆட்டோ ஓட்டுனர்களின் அதிக ஆசையா என்று புலப்படவில்லை..?

இன்னும் இந்த ஷேர்ஆட்டோ இருக்கிறதே அப்பப்பா இதை பத்தி தனியா சொல்லத்தேவையில்லை... ஷேர் ஆட்டோ ஏறும் எந்த பயணிகளுக்கு மரியாதை கிடைக்கும் என்பது உத்திரவாதம் இல்லை. எனக்கு தெரிந்த வழித்தடத்தில் 10 பேர் பயணிக்கும் வேண்டியதில் 9 பேர் இருந்தால் கூட வண்டியை எடுக்காமல் அந்த ஒருவருக்காக காத்திருக்கும் கொடுமைகளை பார்த்திருக்கிறேன்

அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறைச்சொல்லவில்லை... ஒரு சில நல்ல ஆட்டேர டிரைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக பெரும்பான்மை தவறுகளை மறைத்துவிட முடியாது... 



ஆட்டோ வாசகங்கள்.. ஆட்டோக்கள் பின்புறத்தில் எழுதிவைக்கும் வாசனங்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.. அதிகபட்ச ஆட்டோக்களில் ”சீறும் பாம்பை நம்பு.. சிரிக்கும் பெண்னை நம்பாதே“ என்ற வாசகமே அதிகம் பார்த்த ஞாபகம்... ஒருவேளை அதிக ஆட்டோ ஓட்டுனர்கள் காதல் தொல்வி கண்டவர்களாக இருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது...


உன் வாழ்க்கை உன் கையில்...அம்மா பற்றிய வாசகங்கள்... பஞ்ச் வசனங்கள்... காணநேர்ந்த இடங்களில் தற்போது அனைத்து ஆட்டோக்களிலும் RTO புகார் தெரிவிக்க என்று RTO தெலைபேசி எண்ணையே எழுதி வைத்திருக்கிறார்கள்... பிரசவத்துக்கு இலவசம் என்ற வாசகத்தையும் தற்போது காணமுடிவதில்லை... (அப்படி இருந்த காலத்தில் அப்படி யாரையாவது இலவசமாக அழைத்துக்கொண்டு போனார்களா என்று தெரியவில்லை)


மக்களின் தேவையை நிவர்த்திசெய்ய புற்றீசல்போல் காணும் இடமெங்கும் நிறைந்திருந்து சேவையாற்றுகிறது.... உண்மையாக... வித்தியாசமாக.... பயணிகளை, வெளியிருக்கும் பொதுமக்களையும் மரியாதையுடன் அணுகும் ஆட்டோ ஓட்டுனர்களை காண நேர்ந்தால் வஞ்சனையின்றி உடனே பாராட்டிவிடுவோம்...

2 comments:

  1. ஆட்டோக்கரங்கன்னாலே இன்னமும் மக்கள் மத்தியில் பயம் இருப்பது உண்மை..

    காலத்துக்கு ஏத்தமாதிரி ஆட்டோக்காரங்களும் மாறிக்கிட்டு வருவது நல்லது

    ReplyDelete
  2. ஆன்மிக டிரைவர் ஒட்டும் ஆட்டோவில் மட்டும் ஏறிடாதீங்க

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...