கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

03 April, 2018

தலைவர் பார்த்து படிச்சதை குற்றம் சொல்றாங்களா...?

ரமேஷ்... சுரேஷ்...
ஒரு பாலை வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.

பொழுது சாய்ந்திடவே ஓரிடத்தில் தங்கள் கூடாரத்தினை
அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.

இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே
ரமேஷ் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக்
கேட்டான், “மேலே பார். என்னதெரிகிறது?” என்று.

சுரேஷ் சொன்னான்....
“கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன” என்று.

ரமேஷ் கேட்டான், “அப்புறம்?”
“வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி
பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.”

“அப்புறம்?”

“ஜோதிட சாஸ்திரப் படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு நகர்ந்துள்ளது...

“அப்புறம்?”
“வானிலை சாஸ்திரப் படி சொன்னால் நாளை மேக மூட்டமிருக்கது.”

“நண்பா நமது கூடாரத்தை யாரோ திருடி கொண்டு போய்விட்டார்கள்என்பது தெரியவில்லை உனக்கு..!


*****************************************
”தினமும் புலம்புவீங்களே, 
இன்னிக்கு எப்படி, காஃபிஸ்ட்ராங்கா இருக்கா?”

“சூப்பர்டி செல்லம்! எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்க்?”

“அதுவா, ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்!”

*****************************************


பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.”

வீட்டுக்காரம்மா: ” பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…
எனக்கு காது கேட்காது.”

*****************************************


“கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?”

“சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்”

*****************************************ஒருத்தி: “இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?”

மற்றவள்: “ஏன் கேட்குறே?”

முதலாமவள்: “என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,

அவங்களுக்கு காட்டத்தான்”

*****************************************


“யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,

தலைவர் என்ன பதில் சொன்னார்?”
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு”

*****************************************


எதுக்கு இடுப்பில் இரண்டு கையும்வச்சிகிட்டு தும்மறீங்க?

நான் தான் சொன்னேனெ எனக்கு இடை விடாத தும்மல்னு!

*****************************************ஐயையோ! ஸ்கேன்ல
உங்க குடலையே காணோமே…?

நீங்க தானே டாக்டர் காலி வயித்துல
ஸ்கேன் எடுக்க சொன்னீங்க…!

*****************************************

5 comments:

 1. பழைய பார்முக்கு வந்தாச்சு போல

  பதிவை ரசித்தேன்

  ReplyDelete
 2. படங்கள் எல்லாம் திறமையை வெளிக் கொணர்ந்து வந்திருக்கிறது.. அட்டகாசம்

  ReplyDelete
 3. அழகிய படங்களுடன் அருமையான பதிவு

  ReplyDelete
 4. படங்கள் அற்புதம் !!
  ரசிக்கத்தக்க நகைச்சுவை துளிகள்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...