கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 April, 2018

ரஜினியும் கமலும் கடைசியில் இப்படித்தான் ஆவார்களா...?


சமீபத்து விஷயங்கள் பழைய கதைகள், இதிகாச கால கதைகள் என பல முந்தைய நிகழ்வுகளோடு ஒத்துப்போவது ஆச்சரியமாக இருக்கும்

இன்றைய காலகட்டத்தில் அரசியலில் இறங்கும் அனைவருக்கும் மக்கள்சேவை, தொண்டு, சமுகப்பணி என்ரெல்லாம் தாண்டி முதல்வர் நாற்காலியே பிரதான இலக்காக இருக்கிறது....

தற்போதைய அரசியலில் அதிர்ஷ்டம் மூலம் ஆட்சிக்கு வந்தவர்களும், ஆண்டாண்டாய் ஆட்சிக்கட்டிலில் அமர காத்திருப்போரும், போராடி போராடி ஒதுங்கிவிட்டோரும் வீற்றிருக்கும் இந்த அரசியல் களத்தில் கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு ரஜினியும் கமலும் களம் இறங்கியுள்ளனர்.....  இவர்கள் ஆட்சிபிடிப்பார்களா அல்லது கீழ்கண்ட கதைபோல்தான் ஆகுமா என்று தெரியவில்லை...

ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.


ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’


‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.


‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’


‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”


குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.


‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.


மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.


சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.


குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.


எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு....

இதுபோல இருபுறத்தில் இருந்தும் பயணித்துவரும் ரஜினியும் கமலும் களத்தில் இருப்பவர்களோடு மோதி வீழ்வார்களா அல்லது திறமையாக ஆட்சியை பிடிப்பார்களா பார்ப்போம்...

8 comments:

  1. இதுவும் கடந்து போகும்...!

    ReplyDelete
  2. விட்டில் பூச்சியின் நிலைதான்

    ReplyDelete
  3. பேராசை பெரு நட்டம் என்பார்கள்
    பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. உண்மையாக மக்கள் பணி செய்பவர்களே களத்தில் நிற்கமுடியும்

      Delete

  4. நீங்க ஆட்சின்னு சொன்னது ஆச்சி தமிழிசையைத்தானே அவரை பிடிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...