கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 April, 2018

எப்போ வந்த ரஜினி படத்துக்கு.... இப்படி ஒரு விமர்சனமா..?


பன்னிகுட்டி ராமசாமி முகநூல் பதிவு..  Maram R

நேத்து ஏதோ ஒரு சேனல்ல... அண்ணாமலை படம் ஓடிட்டு இருந்துச்சு.. ரொம்ப நாள் கழிச்சு ரிமோட் கைல இருந்ததால சரி கழுதைய பாப்போமேன்னு பாத்தேன். 

அண்ணாமலை வில்லன்கிட்ட சேலஞ்ச் பண்ணி ஒரே பாட்டுல பெரிய பணக்காரர் ஆகுறார்.. அதுக்கு 15 வருசம் ஆகுதாம். ஆனா அதுவரைக்கும் வில்லனை ஒண்ணுமே செய்யாம விட்டு வெச்சிருக்கார். 15 வருசம் முடிஞ்சு ஏலத்துல ரேட்டை ஏத்தி விடுறதுன்னு வேலைய ஆரம்பிச்சி வில்லனை கவுத்துறார். இத அப்பவே பண்ணி இருக்கலாமே அதுக்கு ஏன்யா 15 வருசம் வெயிட் பண்ணாரு.. 

இதுல பணக்காரன் ஆனதும் எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ர்ருனே வெச்சிருக்கார்.. ஏன்னே தெரியல..எங்கயோ போறார், எங்கயோ வரார்.. ஆனா பொண்டாட்டி குஷ்பூவ கூட கண்டுக்காம டென்சனா சுத்துறார். ஏன்யா பணக்காரன்லாம் என்னதான் பிசினஸ் டென்சனா இருந்தாலும் மத்த நேரம்லாம் எப்படி எஞ்சாய் பண்றானுங்க.. இவரு ஏன் என்னேரமும் மண்டை வீங்குன மாதிரியே இருக்காரு.. இதுல வில்லன் கம்பெனில பிராடு பண்ணி வெளிய வந்த நிழல்கள் ரவிய உடனே தன்னோட கம்பெனில சேத்து வெச்சி தங்கச்சியவும் கட்டி குடுக்குறாரு.. ஏன்யா ஒரு ஹீரோ இவ்ளோ வெவரங்கெட்ட தனமாவாய்யா இருப்பான்..? 

வில்லனோட ரகசியத்த புடுங்குறதுக்காக கம்பெனில சேத்தீங்க சரி.. அதுக்காக என்ன ஏதுன்னு விசாரிக்காமஒரு பிராடு பயலுக்காயா பொண்ண கொடுப்பீங்க.. ச்சை.. என்னய்யா படம் எடுக்குறானுங்க...


இந்த பதிவிற்கான சில பின்னுட்டங்கள்...!

Poongavana Perumal RanuvaPettai Ravi இத்தன வருசம் கழிச்சி நீங்க வெச்சி செய்வீங்கனு அவங்க எதிர்பாத்திருக்க மாட்டாய்ங்க


Maram R படம் வந்தப்போ பேஸ்புக் இல்லைங்கிற குறைய வேற எப்படி போக்குறதாம்...


Geetha Priya அது என்னன்னா... அந்த அசோக்க எழுப்பிட்டு அந்த சேர்ல உக்காந்து சிகரெட் புடிச்சி ஊதிட்டு... அப்றம்தான் பழிவாங்குவாராம்... அதுக்குதான் 15 வருஷம் ... அப்றம் இவ்ளோ லட்சியத்தோட கண்ணுமண்ணு தெரியாத உழைச்சத்துனால கொஞ்சம் உர்ருன்னு ஆய்ட்டாரு... பின்ன இன்னும் மாடு மேய்க்குற லெவல்லயே இருப்பாரா... பிஸ்னெஸ் மேக்னட்லாம் அப்டிதாய்யா இருப்பாங்க...


Maram R கண்ணு மண்ணு தெரியாம உழைச்சாலும் அதான் பணம் வந்துடுச்சில்ல.. அப்புறம் கொஞ்சம் சிரிக்கலாம்ல..ப செந்தில் குமார் அப்படியே அந்த பழைய ஓட்டாத அந்த சைக்கிள மட்டும் எப்படி துரு புடிக்காம புத்தம் புதுசா பள பள பளன்னு பல வருசமா மெயிண்டெய்ன் பன்னாருன்னு கேளுங்கப செந்தில் குமார் பெயிண்ட் அடிச்சு தொடச்சு வைக்க எதுக்கு சைக்கிளு.. அத வாடகைக்கு உட்டிருந்த ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூவா கெடச்சிருக்கும். 25 வருசம் முன்னாடி எவ்ளோ பெரிய தொழில்.. அட தொழிலுக்கு முதலீடா இருந்திருக்கும்ல


Ganesh Bala அந்த ஏலத்துல கவுக்கற ஒரு சமாச்சாரத்தாலயே வில்லன் வீட்டைக்கூட ஜப்தி பண்ற ரேஞ்சுக்கு அழிஞ்சிடுவாரு. தலீவரு வேற ஒண்ணுமே கஷ்டப்படாம ஜெயிச்சிருவாரு. இதுக்காய்யா தொடைதட்டி சவா விட்டீருன்னு அப்பமே தோணிச்சு. சொன்னேன். எவனும் கேக்கத் தயாரா இல்ல. ஆல் ரசினி வெறியன்ஸ்.

Murugan ஒரு பக்கம் ஏழைய கலாய்க்குற.. ஒரு பக்கம் அண்ணாமல படத்தை உட்காந்து பொறுமையா பாக்குற.. யாருய்யா நீ.. உனக்கு என்னதான் பிரச்சனை?..


Ag Sivakumar /ரொம்ப நாள் கழிச்சு ரிமோட் கைல இருந்ததால சரி கழுதைய பாப்போமேன்னு பாத்தேன்/

அடேங்கப்பா.. ரொம்பத்தான் சலிச்சுக்கறாரே.....

3 comments:

  1. மறந்து போன படத்தை பார்க்க தூண்டுறீங்களே இது நியாமாங்க

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...