27 February, 2018

குழந்தை செய்யும் வேலையா இது...!




நாயே...!
என்று திட்டிவிட்டார் முதலாளி

அடுத்த நொடியே
முடிவு செய்வு விட்டேன்...

கடைசி வரை
நன்றியோடு இருக்க வேண்டும் என்று...!

***************************************


காதலில் தோல்வி...!
களவாடப்பட்டுவிட்டன
என் அத்தனை
கனவுகளும்...!

***************************************


வீடுமுழுவதும் 
பார்த்து.. பார்த்து... அழகாய் 
வர்ணமடித்து வைத்தேன்...

ஆனால் இப்போதுதான் 
அழகாயின
அவைகள்...!
 
என் குழந்தையின்
கிறுக்கல்கள்...!


***************************************



கை காட்டியும்
நிற்காமல் போன
பேருந்தில் இருந்து....

ஏமாற்றத்தோடு
இறங்கிவந்தது
என் மனசு...!

***************************************




ஓய்வுக்காக அமர்ந்த வேளையில்
காற்றில் பறந்துவந்து
என் மீது விழுந்தது
ஒரு காகிதத்தாள்...!


எடுத்துபார்க்கையில்
அதட்டினாள் மனைவி....
தூக்கி எறியுங்கள் அது
அழுக்கு என்று...!

கொஞ்சநேரம் பார்த்தப்பின்
தூக்கி எறிந்து விட்டேன்....

தற்போது 
என்னில் ஒட்டிக்கொண்டு விட்டது
அதிலிருந்து சில வரிகள்...!

*************************************
வருகைக்கும்... வாசித்தமைக்கும்...
மிக்க நன்றி...!

24 February, 2018

ஜெயலலிதா அவர்களா இப்படி சொன்னது...?



''ஒரு ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆள, தகுதியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார். அதில் பல பேர் கலந்து கொண்டனர். கடைசியாக இருவர் மட்டுமே மிஞ்சினர்.

அந்த இருவரிடமும் ஒரே அளவான தங்கக் கட்டிகளைக் கொடுத்து, "இதை நீங்கள் செம்மையாக பயன்படுத்த வேண்டும். எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை 3 மாதங்களுக்குப் பிறகு அரசவையில் வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்" என்று கூறினார் அரசர்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர். முதல் நபரைப் பார்த்து தங்கத்தை எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்று அரசன் வினவினார்.

தனது மகனையும், மகளையும் அவையின் முன் நிறுத்திய அந்த நபர் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த நகைகளை மகள் அணிந்து கொண்டிருப்பதையும், அழகிய தங்கப் பேழை ஒன்றை மகன் வைத்திருந்ததையும் அரசனுக்கு காட்டினான். அவற்றைக் கண்டு வியந்த அவையினர் அரசர் கொடுத்த தங்கக் கட்டிகளை, இவர் நன்றாக பயன்படுத்தி உள்ளார். எனவே, நாட்டினை நன்றாக ஆள்வார் எனக் கூறினர்.

"உங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டும் தானா?" என அரசன் வினவினார். அதற்கு அந்த நபர் "இல்லை. இல்லை. எனது மற்ற பிள்ளைகளை எல்லாம் நான் தலை முழுகி விட்டேன்" என்று கூறினான்.

சரி. இரண்டாவது நபர் என்ன செய்துள்ளார் என பார்க்கலாம் என்று அரசர் அவனை அழைத்தார். அந்த இரண்டாம் நபர் தன்னுடன் 100 பேரை, அழைத்து வந்திருந்தார்.

"தங்கக் கட்டியை என்ன செய்தீர்கள்? இவர்கள் எல்லாம் யார்?" என்று அரசர் வினவினார். அதற்கு அந்த இரண்டாம் நபர், "இவர்கள் எல்லாம் இந்த ஊரில் ஏழைகளாக இருந்தவர்கள். நீங்கள் கொடுத்த தங்கக் கட்டிகளை இவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வியாபாரம் செய்து இவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர்" என்று கூறினார்.

தன் நலன், தன் குடும்ப நலன் என்று பார்க்காமல் ஏழை எளியோருக்கு உதவிய இரண்டாம் நபரே நாட்டை ஆளத் தகுதியான நபர் என, அரசரும் அந்த அவையில் இருந்தவர்களும் முடிவு செய்தனர்.

இந்தக் கதையில் வரும் இரண்டாம் நபரைப் போலத் தான் எனது தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது'' என்றார் ஜெயலலிதா.

#நாட்டை ஆளத் தகுதியான நபர் யார்? என்ற மையக் கருவுடன் நலதிட்டம் வழங்கும் விழாவில் ஜெயலலிதா அவர்கள் சொன்ன ஒரு குட்டிக்கதை.

12 February, 2018

இந்த வாசகத்தை கண்டிப்பாக அங்கு எழுதனும்


அன்பார்ந்த வாசகர்களுக்கும்... பதிவுலக நண்பர்களுக்கும்
நன்றி கலந்த வணக்கங்கள்...!


*****************************************************


*****************************************************


*****************************************************


*****************************************************


*****************************************************
மகனதிகாரம்....

*****************************************************


புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும்
உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?

இதோ வாரியார் கூறுகிறார்,
'வாயை மூடு!' என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான்.

'நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?'
 என்கிறான் புத்திசாலி. 
 
அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்! 

குடும்பத்துல பிரச்சனை இல்லாமல் இருக்க நாமும் இப்படியே செஞ்சிட்டு போய்டுவோம்.. நீ அம்புட்டு அழகுமா...

*****************************************************

அனைத்தும் என் முகநூலிலிருந்து....

06 February, 2018

பெண்கள் இப்படி இருக்கக்கூடாது..

அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்....


*************************************************


*************************************************



*************************************************


*************************************************


வருகைக்கும்... வாசித்தமைக்கும்...
மிக்க நன்றி...!