30 November, 2010

மதுவும் மறதியும்



“இன்று முதல் நான் ஒரு புது மனிதன்!”
 
“எதைவச்சு அப்படிச் சொல்றீங்க?”
 
“குடிப் பழக்கத்தை நிறுத்தப் போறேன்!”
 
“ரொம்ப நல்ல காரியம்... மதுபழக்கம் மறதியைக்கூட உண்டு பண்ணுதுன்னு இப்ப கண்டு பிடிச்சிருக்காங்க!”
 
“எங்கே”
 
“இங்கிலாந்துலே! அங்‌கே... மாணவர்களை மூணு பிரிவாப் பிரிச்சிக்கிட்டு... ஒரு புதிர்ப்போட்டி நடத்தினாங்களாம்!”
 
“எப்படி?”
 
”முதல் பிரிவினர்... அன்றைக்கு இர‌வே கொஞ்சம் மது அருந்த அனுமதிக்கப்பட்டாங்களாம்... இரண்டாம் பிரிவினர்... அடுத்த நாள் கழிச்சி கொஞ்சம் மது அருந்த அனுமதிக்கப்பட்டாங்களாம்... மூன்றாம் பிரிவினர்... மது அருந்தவில்லை! அதன் பிறகு அந்தப் புதிர் பற்றி அவங்ககிட்டே கேட்டுப் பார்த்தாங்களாம்!”
 
“என்ன ஆச்சி?”
 
“முதல் பிரிவு மாணவருக்கு நினைவு இல்லை... இரண்டாம் பிரிவு மாணவருக்கு அரைகுறை நினைவுதான் இருந்ததாம்!  மூன்றாம் பிரிவினர்தான் திறமையாப் பதில் சொன்னாங்களாம்!”

“பரவாயில்லையே!”
 
“அதனாலே... நீங்க  முடிவு செஞ்சப்படி எப்படியாவது கஷ்டப்பட்டு அந்த பழக்கத்தை விட்டுடுங்க...!”
 
“மதுப் பழக்கத்தை விடறது அப்படி ஒண்ணும் பெரிய கடினமான காரியம் இல்லே...!”
 
“அப்படியா ‌சொல்றீங்க?”
 
“ஆமாங்க... நா‌னே ஏற்கன‌வே அந்தப் பழக்கத்தை பதினைஞ்சு தடவை விட்டிருக்கேனே!..


நன்றி தென்கச்சி கோ. சுவாமிநாதன்

2 comments:

  1. சிந்திக்கத் தூண்டும் பதிவு . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!