12 November, 2010

காதலிக்கு கல்யாணம்...



காந்தக் கண்களால்
என் கனவுகளைக் கலைத்து
சிரமம் இல்லாமல் 

சிறகடித்துச் சென்றவ‌ளே...
 

மௌனம் கொண்டு யுத்தம் செய்தவள் - நீ
காதல் கொண்டு காயம் ‌செய்தவள்...
 

உன் முள் கூட்டில் மெத்தையா‌னேன்
வசந்தம் ‌தேடி நீ எந்த வா‌னேறினாயோ...
 

மாற்றிய மாலையில்
என் மனதை நசுங்கவைத்து
அம்மி மிதித்தவளே...!


நீ கனிந்த சிரிப்போடு போகிறாய்
நான் கண்களால் சிரபுஞ்சி ஆகி்றேன்...
 

மனமெல்லாம் சகதியை வைத்துக்கொண்டு
குளத்துத் தாமரை போல் சிரித்தவ‌ளே
 

மரம் கொத்திக்கும் உனக்கும் 
என்னடி வித்தியாசம்
அது மரம் கொத்திவிட்டு போகிறது...
நீ மனம் கொத்திவிட்டுப் போகிறாய்...


பிஞ்சி மொழிபேசி 

என் பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்தவளே...
 

இன்று மட்டும் ஏன் பிரிவு என்னும்
புழுதி கிளப்பி
என் நூற்றாண்டுகளை மூழ்கடிக்கிறாய்...
 

ஓடும் நதி 
மலர் ‌செறியும் மரங்க‌ளோடு 
காதல் புரிந்துவிட்டு 
கடலுக்குள் சங்கமிப்பது ‌போல்
எந்த கடலுக்குள் கரைந்து போனா‌யோ
 

தென்றல் வந்து 
உன்னைத் தட்டி எழுப்பி 
என் நினைவுகளை 
ஞாபகப்படுத்தும் போதெல்லாம்
 

நீ நிச்சயம் உணர்வாய் 
நதி வழியோ 
பூக்கள் சுமந்து வரும் 
என் கண்கள் சிந்திய உப்பின் படிமங்களை...

1 comment:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!