சினிமாவுக்கு முழுக்கு - அஜீத்
அரசியல் விஷயத்தில் கிட்டத்தட்ட இறுதியான முடிவுக்கு வந்துவிட்டார் அஜீத் என்றே தோன்றுகிறது.
அரசியல் விஷயத்தில் கிட்டத்தட்ட இறுதியான முடிவுக்கு வந்துவிட்டார் அஜீத் என்றே தோன்றுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து பகிரங்கமாக பேசி வருகிறார். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசிய பிறகு, அரசியலில் குதிக்கும் முடிவில் அவர் உறுதியாக உள்ளார் என்கிறார்கள.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக பணியாற்றப் போவதாகவும், தனது செயல்திறன் பார்த்து பதவி கொடுத்தால் போதும் என்றும் கூறியிருந்தார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
“எனக்கு இன்று அரசியல் ஆசை இல்லா விட்டாலும், நாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும், சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன்.
காரணம், சினிமாவில் நடித்துக் கொண்டே கார் ரேஸிங்கில் கலந்து கொண்டதால் என்னால் அந்த இரண்டு துறைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் சொந்த வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நீங்கள் சொல்கிற சூழ்நிலை வந்தால்… எனக்குப் பிடித்த கட்சியில் சேருவேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லா கட்சியை சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒருபோதும் பிரிவினை ஏற்படுமாறு செயல்பட மாட்டேன். அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே என்னோடு வரலாம்.
அடுத்தது நான் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென்றால், நான் சேர்கிற கட்சியில் எனக்கென ஏதாவது ஒரு முக்கிய பதவியை கொடுக்க முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்கு முன்பே அந்த கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன்”, என்று கூறியுள்ளார்.
***********************************************************************************************************************
சிக்கல் மேல சிக்கல்
விஜயின் 'காவலன்' படம் ஆரம்பித்ததில் இருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது. முதலில் படத்தின் தலைப்பில் ஆரம்பித்த சிக்கல், விஜய்க்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் திரண்டது, கனடாவில் வாழும் இலங்கை தமிழகர்கள் விஜய் படத்தை புறக்கணிப்போம் என்று அறிக்கை விடுத்தது என உருவான பல சிக்கல்களை தொடர்ந்து, தற்போது படம் வெளியீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் இயக்குநர் ஷக்தி சிதம்பரம், இப்படத்தை பொங்கல் தினத்தன்று தமிழ்நாடு முழுக்க 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறிவருகிறார். ஆனால் இதுவரை 70 திரையரங்குகள் மட்டுமே இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கும் விஜய்க்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். 'சுறா' படத்தின் தோல்வியின் மூலம் திரையரங்க உரிமையாளர்கள் விஜயிடம் கேட்ட நஷ்டஈடு கேட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நடிகர் சங்கமும் தலையிட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. அதில் திரையரங்க உரிமையாளர்களுக்கு சாதகமாக எந்த முடிவும் எடுக்கப்படாததால் 'காவலன்' படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் பொங்களுக்கு வெளியாகும் 'ஆடுகளம்', 'சிறுத்தை', 'இளைஞன்' போன்ற படங்களுக்கு கனிசமான எண்ணிக்கையில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறிய பட்ஜெட், புதுமுக நடிகர்களின் படங்களுக்குத்தான் திரையரங்குகள் கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் தற்போது விஜய்போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
'காவலன்' டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜயை கடவுள் என்று வர்ணித்த ஷக்தி சிதம்பரத்திற்கு நல்ல அருளை தருவாரா விஜய் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
***********************************************************************************************************************
முடிகிறது ஒரு கதை
நயன்தாரா விவகாரத்தால் சண்டைபோட்டுக் கொண்டிருந்த பிரபுதேவா-ரம்லத் தம்பதியினரின் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. பிரபு தேவாவிடமிருந்து பரஸ்பர விகாரத்து பெற ரமலத் ஒப்புக் கொண்டுவிட்டார். இதற்காக அவருக்கு ரூ.30 கோடி ரொக்கப் பணம் மற்றும் அசையா சொத்துக்களை நஷ்ட்ட ஈடாக பிரபுதேவா கொடுக்கிறார்.
இதுதொடர்பாக பிரபுதேவாவும், ரமலத்தும் நேற்று குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்து, தாங்கள் இருவரும் மனமுவந்து விவாகரத்து கோருகிறோம் என்று மது தாக்கல் செய்த்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
"பெரியவர்கள் கூறிய அறிவுரையின்படி இருவரும் பரஸ்பரமாக இந்த மனுவை தாக்கல் செய்கிறோம். இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து கோருவதால் ரம்லத், பிரபுதேவா இடையே சொத்து பிரிவினைக்கு சம்மதிக்கப்படுகிறது.
அதன்படி, ரம்லத்துக்கு 2 இனோவா கார்கள், அண்ணா நகரில் உள்ள 3440 சதுர அடி நிலம், கோயம்பேட்டில் வீட்டுடன் சேர்த்து 1000 சதுர அடி நிலம் ஆகியவற்றை விற்பனை ஒப்பந்தம் செய்து தர வேண்டும்.
மேலும், ரம்லத்துக்கு ரூ.5 லட்சத்தை பிப்ரவரி மாத முடிவுக்குள்ளும், மேலும் ரூ.5 லட்சத்தை விவாகரத்து கிடைக்கும் நேரத்திலும் தர வேண்டும்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டை அவர்களின் இரு மகன்களுக்கு தர வேண்டும். அந்த சொத்துக்களின் மீது இருவரும் பாதுகாவலராக இருக்க வேண்டும். அந்த வீட்டிலிருந்து வரும் வருமானத்தை குழந்தைகள் பெரியவர்களாக வரும்வரை இருவரும் சம அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை அவர்களின் உயர்கல்வி முடியும்வரை பிரபுதேவா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலம் கொண்டாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டை இரு குழந்தைகளின் பெயருக்கு எழுதித் தரவேண்டும்.
இதற்கு இருவரும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறோம்."
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்தார்.
***********************************************************************************************************************
அம்மா பக்கம் சாயும் - வனிதா
இது நடிகர் விஜயகுமாருக்கும், மகள் வனிதாவுக்கும் இடையில் நடக்கும் போர் இனி கிடையாது. இதை மறைமுகமாக கூறியுள்ளேன். இதில், சட்டம் ஒழுங்கு, பொது நலம் தொடர்பான அமைச்சகங்களுக்கும், ஆளும் தமிழக அரசிற்கும் தொடர்பு உள்ளது. தமிழக அரசின் கீழ் தான், சட்டம் ஒழுங்கு தொடர்பான அனைத்தும் வருகிறது. மதுரவாயல் போலீசில் நான் ஒரு புகார் அளித்தேன். சட்டப்படி, கண்ணை மூடிக் கொள்ளாமல் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. இரண்டு வாரங்கள் கழித்து விஜயகுமார் கொடுத்த பொய் புகாரின் மீது, மேல் மட்டத்தில் இருந்து வந்த பிரஷர் காரணமாக எனது கணவரை கைது செய்தனர். குடும்ப பிரச்னையில் இவர்கள் ஏன் சம்பந்தப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.
நான் தனியாக பெண்களுக்கென்று தன்னார்வ தொண்டு நிறுவனம் துவங்க உள்ளேன். அரசியலில் சேர ஆசைப்படுகிறேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன். ஓட்டு போடும் போது பார்த்து போடுங்கள்; ஏமாறாதீர்கள்.
இவ்வாறு வனிதா கூறினார்.
நடிகை வனிதா தனது பேட்டியில், தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருப்பதுடன், ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் தனக்கு 100 சதவீதம் உதவியிருப்பார் என்று கூறியிருக்கிறார். எனவே அவர் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
*********************************************************************************************************************** இந்தியில் நடிக்க அனுஷ்கா மறுப்பு
இந்தி படத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு தெரிவித்துள்ளார். சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் ‘சிங்கம்’. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக அனுஷ்காவை கேட்டார் ரோஹித். ஆனால், மறுத்துவிட்டார். இதுபற்றி அனுஷ்கா தரப்பில் கேட்டபோது, ‘தென்னி ந்திய சினிமாவில் பிசியாக இருக்கிறார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் அவருக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது. பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்னையும் உள்ளது. இதனால் ரோஹித்திடம் நட்பாக சொல்லி மறுத்துவிட்டார்’ என்றனர்.
***********************************************************************************************************************
ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பேன்!
தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக இருக்கும் மியூசிக் டைரக்டர் யுவன் சங்கர் ராஜா. அவரது படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது ஹிட்டாகிறது. அப்படியிருந்தும் யுவனுக்கு நிறைவேறாத ஆசை இருக்கிறது. இதுபற்றி அவர்
கூறுகையில், 'சரித்திர கால படத்துக்கு இசை அமைத்து புகழ் பெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை' என்றார். மேலும் ஹாலிவுட் படத்திலும் இசை அமைக்க விரும்புவதாக கூறிய யுவன் அடுத்த ஆண்டில் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பேன், அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கூறினார்
***********************************************************************************************************************
பிறந்த நாளில் - மங்காத்தா வானம்
அல்டிமேட் ஸ்டார் அஜீத் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இதன் அடுத்தகட்ட படிப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. தற்போது ஐதராபாத்தில் ஷூட்டிங் முடிந்தே பிறகே மீண்டும் சென்னையில் ஷூட்டிங் நடக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் மங்காத்தா படத்தை தல பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் தல அஜீத்தின் ரசிகனாக இருக்கும் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் 'வானம்' திரைப்படத்தை அதன் இயக்குனர் க்ரிஷ் சிம்பு பிறந்தநாள் (பிப்ரவரி 3ந் தேதி) அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.
***********************************************************************************************************************
தெலுங்கிலும் டப் ஆகிறது நடுநிசி நாய்கள்
பொதுவாக கௌதம் மேனன், ஷங்கர், செல்வராகவன் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஷங்கரின் அந்நியன், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வசூலை தந்தது. தற்போது கௌதம் மேனன் இயக்கி முடித்துள்ள 'நடுநிசி நாய்கள்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
க்ரைம் ஸ்டோரியான இக்கதைக்கு பின்னணி இசை ஏதும் இல்லை. இதனையடுத்து தெலுங்கில் தன்னுடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் சமீரா ரெட்டி நடித்துள்ள 'நடுநிசி நாய்கள்" படத்தை தெலுங்கிலும் டப் செய்கிறார் கௌதம் மேனன்.
***********************************************************************************************************************
மீண்டும் தமிழில் ஏமி
மதராசபட்டனம் படத்தில் மருந்துட்டியா என்ற ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஏமி ஜாக்சன். கொஞ்சும் தமிழ் பேசிய இந்த வெள்ளைக்கார குயில், மதராசபட்டனம் முடிந்த கையோடு சொந்த நாட்டுக்கு புறப்பட்டபோது, எனக்கு சென்னையை ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல வாய்ப்பு கிடைத்தால் இங்கேயே செட்டிலாக தயாரகக இருக்கிறேன், என்று கூறி விட்டுச் சென்றார். அவரது ஆசை கூடிய சீக்கிரமே நிறைவேறிவிடும் போலிருக்கிறது.
டைரக்டர் கிரீடம் விஜய் தேடிக் கண்டுபிடித்த முத்து, விரைவில் டைரக்டர் கவுதம் மேனன் மூலம் ஒய்யாரமாக தமிழ் ரசிகர்களின் மனதில் மூட்டை முடிச்சுகளுடன் குடியேறப்போகிறது. ஆம்! கவுதம் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகி ஏமி ஜாக்சன்தானாம். தமிழ் சினிமா வாய்ப்பு என்றதும் டபுள் ஓ.கே. சொன்ன ஏமி, எப்ப சென்னை வரணும் என்று கேட்டிருக்கிறார். விரைவில் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். ஏமியை மீண்டும் திரையில் பார்க்க தமிழ் ரசிகர்களுக்கு வாய்ப்பு கைகூடி வரும்.
டைரக்டர் கிரீடம் விஜய் தேடிக் கண்டுபிடித்த முத்து, விரைவில் டைரக்டர் கவுதம் மேனன் மூலம் ஒய்யாரமாக தமிழ் ரசிகர்களின் மனதில் மூட்டை முடிச்சுகளுடன் குடியேறப்போகிறது. ஆம்! கவுதம் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகி ஏமி ஜாக்சன்தானாம். தமிழ் சினிமா வாய்ப்பு என்றதும் டபுள் ஓ.கே. சொன்ன ஏமி, எப்ப சென்னை வரணும் என்று கேட்டிருக்கிறார். விரைவில் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். ஏமியை மீண்டும் திரையில் பார்க்க தமிழ் ரசிகர்களுக்கு வாய்ப்பு கைகூடி வரும்.
***********************************************************************************************************************
படத்தை எடுத்தால் மட்டும் போதாது : ஜனநாதன்
புதுமுகங்கள் சேகர், காயத்ரி நடிக்கும் படம் ‘ஆசைப்படுகிறேன்’. இதன் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் டைரக்டர் ஜனநாதன் பேசியது: இதில் நடிக்கும் ஹீரோயின் காயத்ரி விளையாட்டு வீரர். உடற்தகுதியுடன் இருக்கிறார். ஹீரோயினுக்கு ஆரோக்கியம்தான் அழகு. படத்தின் முதல் காப்பி எடுத்து விநியோகஸ்தர், தியேட்டர்காரர்களிடம் கொடுத்துவிட்டால் அதை ஓடவைத்துவிடுவார்கள் என்ற காலம் மலை ஏறிவிட்டது. அப்போது 100 நாள், ஒரு வருடம், 5 வருடம் என படங்கள் ஓடின.
அன்று வேறு பொழுதுபோக்கும் இல்லை. இப்போது ஏராளமான வசதிகள் இருக்கிறது. படம் வெளியான பிறகும் வெற்றிக்கான முயற்சிகள் தொடர வேண்டும். மிகச் சிறந்த படங்கள் கூட ஓபனிங் இல்லாமல் டல்லடிக்கிறது. முதல்காட்சிக்கு 20 பேர் வருகிற நிலை இருக்கிறது. அவர்கள் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் பிறகு கூட்டம் வருகிறது. அதற்குள் படத்தை எடுத்துவிடுகிறார்கள். இந்நிலையை மாற்றும் பொறுப்பு நட்சத்திரங்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது. ‘ஆசைப்படுகிறேன்’ பட இயக்குனர் பாலு மணிவண்ணன் ‘தூரத்து இடிமுழக்கம்’ காலத்திலிருந்து உதவியாளராக இருக்கிறார். ‘பாரதி’, ‘பெரியார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர். நல்ல சினிமா தரும் நோக்கில் இதை இயக்கி இருக்கிறார்.
No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!