“என்ன சார் உலகம் இது...!”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“இந்த பேப்பரைப் பாருங்க முதல்ல..”
“என்ன போட்டிருக்கு?”
“பிலிப்பைன்ஸ் நாட்டுலே ஒரு சிறைச்சாலை... அங்கே நிர்பார்பாமர் அப்படின்னு ஒருத்தர்... தண்டனை அனுபவிச்சிக்கிட்டு இருக்கார் . அவர் ஒரு பட்டதாரி. அப்படி இருந்தும் ஏதோ தப்புப் பண்ணிட்டு உள்ளே வந்திருந்தார்!”
“இது எல்லா ஊர்லேயும் உள்ளதுதானே!”
“கொஞ்சம் பொறுங்க... அங்கே என்ன நடந்ததுங்கறதைக் கேளுங்க... பிலிப்பைன்ஷ்லே சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது... அதை எழுதறதுக்காக இவரு ஜெயில்லேயிருந்து போயிட்டுவர சிறை அதிகாரி அனுமதிச்சார். இவரும் போனார். அந்தப் பரீட்சையை எழுதினார். அப்படி எழுதிக்கிட்டுருக்கும் போதுதான் இவரு மாட்டிக்கிட்டார்!”
“ஏன்... இவரு என்ன தப்புப் பண்ணினார்? சிறையிலே கைதியா இருத்துகிட்டுப் பரீட்சை எழுதினதுதப்பா? சிறை அதிகாரி அனுமதியோடதானே வெளியிலே வந்தார். அது தப்பா?
“பின்னே அவர் செய்த குற்றம்தான் என்ன?”
“அவர் செய்த குற்றம்... ஜெயில் அதிகாரிக்குப் பதிலா இவரு பரீட்சை எழுதினததான்!”
“பார்த்தீங்களா? உலகம் எங்கே போய்கிட்டிருக்குன்னு?”
“என்ன பன்னறது?”
“நேத்திக்குப் பாருங்க. கடைத்தெருவுலே ஒருத்தன் கத்தியைக் காட்டி என்கிட்டே பணம் கேக்கறான்!”
“அப்புறம்?”
“பணத்தைக் கொடுத்துட்டு... எனக்குப் பிடிச்ச கத்தியா ஒணணு வாங்கிக்கிட்டு வந்துட்டேன்...!”
நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்
No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!