24 December, 2010

வாழ்க்கை ரகசியம்...


வாழ்க்கையில் பொறுமையும், பெருந்தன்மையும் மிக மிக அவசியம் உலகத்து மதங்களின் ‌மேலான கருத்து அதுவே ஆகும்... உலகில் யார் அதிகமாக பேசுகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் அறைகுறைகளாகத்தான் இருப்பார்கள் தெரியாத விஷயங்களை கூட தெரிந்ததுபோல் காட்டிக் கொண்டு இந்த உலகில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு அறிஞன் கூறினான் “நோட்டுகள் என்னவோ அமைதியாய் இருக்கும், சில்லறைகளே சத்தம் போடும்”... என்று
 

வாழ்க்கையில் தத்துவம் அமைதிகாப்பதிலேதான் இருக்கிறது... தெரிந்த விஷயங்களை கூட ஆணவம் கொள்ளமல் அமைதிகாப்பது உலகின் வெற்றிக்கான வழிகளில் ஒன்று...

அது குறித்த ஒரு ஜென் தத்துவம் :


ஒரு ஜென் துறவி இருந்தார் மல்யுத்தத்தில் கை தேர்ந்தவர்.

அதே ஊரில் இன்னொரு மல்யுத்த வீரரும் இருந்தார். அவர் பெரிய கோபக்காரர். யார் மேலாவது ஆத்திரம் வந்தால் அப்படியே தூக்கி வீசிவிடுவார். தினந்தோறும் யாரிடமாவது வம்புச் சண்டை போடாமல் அவருக்குத் தூக்கமே வராது.

இந்தக் கோபக்காரருக்கு நம்முடைய ஜென் துறவியைப் பார்த்துப் பொறாமை. ‘அந்த ஆள்கிட்டே என்ன இருக்கு? எல்லாரும் அவர் கால்ல போய் விழறீங்களே!’ என்று ஆதங்கப்பட்டார்.

அவர் எவ்வளவுதான் புலம்பினாலும், மக்கள் கேட்கவில்லை. துறவியைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இதைப் பார்த்துக் கடுப்பான கோபக்காரர் துறவி வீட்டு வாசலில் போய் நின்றார். ‘நீ தைரியமான ஆளா இருந்தா வெளியே வா. என்னோட சண்டை போடு!’ என்று தொடை தட்டினார்.

துறவி மெல்லப் புன்னகை செய்தார். ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவரோடு இருந்த சிஷ்யர்களுக்கெல்லாம் ஆவேசம் பொங்கியது. ‘குருஜி, நீங்கதான் பெரிய மல்யுத்த வீரராச்சே. வெளியே போய் அந்தாளைப் போட்டுத் தள்ளிட்டு வாங்க!’ என்று அவரைத் தூண்டினார்கள்.

அப்போதும் துறவி இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர் பாட்டுக்குத் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் வெளியே கத்திக்கொண்டிருந்த ஆளுக்குக் கத்திக் கத்தித் தொண்டை வற்றிவிட்டது. இனிமேல் சத்தம் போட்டுப் பிரயோஜனம் இல்லை என்று மூட்டையைக் கட்டிவிட்டார்.

இப்போது துறவி பேசினார். அதுவும் மூன்றே வார்த்தைகள். ‘எப்படி என் மல்யுத்தம்?’ 
“பொருத்தாரே பூமி ஆள்வார்”  என்று உரைக்கிறது நம் செம்மொழி

ஆகையால் நம் நீண்ட வாழ்க்கை சில ஆண்டுகளுக்குள் வாழ்ந்து முடித்து விடுவதல்ல... இதை ஆயுளுக்கும் தொடர  நாம் படிப்பினைகளை ஆய்ந்தாக வேண்டும்... அனைத்தும் அறிந்துக் கொண்டு ‌அமைதி கொள்வோம் அப்போதுதான்  மலைப்போல் எழுவோம்.. இதுவே வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம்..
 
 எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

அன்புடன்..
சௌந்தர்...

1 comment:

  1. //நோட்டுகள் என்னவோ அமைதியாய் இருக்கும், சில்லறைகளே சத்தம் போடும்” //
    சூப்பர்

    அருமையான பதிவு .என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!