07 January, 2011

தூங்கா நகரில் - சசிக்குமார் வேணடுகோள்

ஊர் பெயரை சொல்லி பிரிக்க வேண்டாம் என்றும் டைரக்டர்களை ஒற்றுமையாக வாழ விடுங்கள் என்றும் டைரக்டர் சசிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

துரை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் உருவாகியிருக்கும் தூங்கா நகரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் லிங்குசாமி கலந்து கொண்டு சி.டி.,யை வெளியிட்டார். கவுதம் மேனன் முதல் சி.டி.,யை பெற்றுக் கொண்டார். 

நிகழ்ச்சியில், டைரக்டர் சசிகுமார் கலந்து கொண்டு பேசிய பேச்சு அனைவரின் கைத்தட்டலையும் பெற்றது. அவர் கூறுகையில், தூங்கா நகரம், மதுரையை பின்னணியாக கொண்ட கதை. தமிழ் பட உலகில் சமீபகாலமாக மதுரையை பின்னணியாக கொண்ட கதைகள் நிறைய வருகின்றன. அதேபோல் மதுரையை சேர்ந்த டைரக்டர்கள் நிறைய பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மதுரை டைரக்டர்கள், சென்னை டைரக்டர்கள் என்று ஊர் பெயரை சொல்லி எங்களை பிரிக்க வேண்டாம். டைரக்டர்களை ஒற்றுமையாக வாழவிடுங்கள். எந்த ஊரில் இருந்து வந்தாலும், டைரக்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும், என்றார்.

தூங்கா நகரம் படத்தின் நாயகனாக களவாணி விமல் நடித்துள்ளார். நாயகியாக அஞ்லியும், ஒரு பாடலுக்கு நடிகை மதுமிதாவும் நடித்துள்ளனர். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் டைரக்டர் கவுதவ் இயக்கியுள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி, நாயகன் விமல், நாயகிகள் அஞ்சலி, மதுமிதா, இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே.வி.ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

2 comments:

  1. இயக்குனரின் பெயர் க்வுரவ். க்வுதம் அல்ல. தங்கள் அன்பான கவனத்திற்க்கு.

    ReplyDelete
  2. ,இயக்குனரின் பெயர் க்வுரவ். க்வுதம் அல்ல. தங்கள் அன்பான கவனத்திற்க்கு.
    சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பரே டைரக்டர் பெயர் திருத்தப்பட்டு விட்டது...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!