09 January, 2011

புது வித பயம்.. (வாரம் ஒரு தகவல்)



“ஏன் ஒரு மாதிரியா பயந்துகிட்டே வர்றீங்க?”

“எந்த காரணமும் இல்லே சார்... இருந்தாலும் எனக்குப் பயமா இருக்கு!”

“என்ன இது அர்த்தமில்லாத பயம்...?”

“அப்படித்தாங்க எனக்கும் தோணுது... இருந்தாலும் பயமா இருக்கு...!”

“இது ஓர் உளவியல் கோளாறு-ன்னு நினைக்கிறேன்...!”

“அப்படியா சொல்றீங்க..?”

“ஆமாம்! Panic Attack-ன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?”

“இல்லையே...!”

“அது உளவியல் சம்பந்தமான ஒரு நோய்...! நம்ப முடியாத, கண்மூடித்தனமான ஒரு பய உணர்வு இந்த நோயை உண்டாக்கும்... இந்த நோயை வெறும் வார்த்தைகளாலே விவரிக்க முடியாத-ங்கறாங்க அமெரிக்க டாக்டர்கள்..!”

“அந்த அளவுக்கு மோசமா..?”

“30 வயதை எட்டிப் பிடிக்கிறவுங்களுக்கு... அதுவும் பெண்களுக்கு இந்தப் பயம் வர்றது உண்டாம்.. இது மாதிரித் தொடர்ந்து வந்தா அது Phobia நோயா மாறலாமாம். இந்த நோய் தாக்கும் நிமிடங்கள் குறைவுதான்... இருந்தாலும் அந்தக் கொஞ்ச நேரத்துலே அது ஏற்படுத்தற விளைவு மறக்க முடியாத அனுபவம்... பயத்துனாலே வியர்வை வேகமா வெளியேறும்... தலை வேகமச் சுழல்றது மாதிரித் தோணுது!”

“இதுக்கு என்ன கா‌ரணம்?”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான காரணம் இருக்கும்... அதைக் கண்டுபிடிச்சி சரிசெய்யணும்! வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தணும்!”

“எங்க வீட்டுலே அடிக்கடி அம்மாவுக்கும்-சம்சாரத்துக்கும் கடுமையான சண்டை நடக்கறது வழக்கம்.. அந்த நினைப்புக்கூட என்னுடைய பயத்துக்குக் காரணமா இருக்கலாம்!”

“எங்க வீட்டுலேகூட அப்படி நடக்கறது உண்டு... அந்தச் சமயத்துலே நான் சும்மா அவங்களைப் பார்த்துக்கிட்டு நிக்கமாட்டேன்!”

“‌வேறே என்ன செய்வீங்க?”

“அவங்களை உற்சாகப்படுத்திக் கிட்டே இருப்பேன்...”

No comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!