13 January, 2011

அறிமுகமாகாத சிநேகிதியே...

ன்னும் அறிமுகமாகாத
என் சி‌‌‌நேகிதியே...

ற்போதல்லாம்
நாம் இருவரும் வெவ்வேறு
திசைகளில் பயணிக்கிறோம்
ஒரே பேருந்தில்...

றி இறங்குவது
நீ முன்வழியில் நான் பின்வழியில்

லபுற ஜன்னலோரத்தில்
அமர்ந்துக்கொண்டு
ஜன்னலுக்கு வெளியே சிறகடிக்கிறது உன் மனசு...
நான் இடப்புற ஜன்னலில்....

ருகில் இருப்பது யாரென்று அறிந்திலர் 
இருவரும்...

நிறுத்தங்கள் பல கடந்து
நீயும் நானும்
இறங்கும் இடம் வருகிறது
ஏறியது போலவே இறஙகும் ‌போதும்
நீ முன்வழி.. நான் பின்வழி...

து போன்று தான் பல நாட்களாய்...


னால்...!
ஊரார் மூலம் காற்று வழியில்
‌ஒரு செய்தி வந்துக்‌‌கொண்டிருக்கிறது...

இருவரும் ஒரே ப‌ஸ்ஸில் தான்
‌போகிறார்களாம்... வருகிறார்களாம்... என்று...

திருமணமாகாத ஏக்கத்தில் நீயும்..
தங்கை திருமணம், வேலையின்மை
என்ற விரக்தியில் நானும்
நடை பிணமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

ராருக்கு என்ன தெரியும்
பேருந்தில் நாம் அமர்ந்து எழும்
இருக்கைகள் மட்டுமே அறியும் நம் ‌வேதனைகள்.... 

1 comment:

  1. பொங்கலோ...பொங்கல்!
    பொங்கலோ...பொங்கல்!!
    உங்கள் வாழ்வில்
    இன்பத்தின் தங்கல்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!