28 January, 2011

முத்துக்குமரனுக்கு வீரவணக்கம்


தமி‌ழீழம் தவித்தபோது
நாங்கலெள்ளாம் கண்ணீர் வடிக்கையிலே
உயிர் வடித்தவனே...

போர்வேண்டாம் என 
வாசலில் நாங்கள் தீபம் ஏற்றினோம்
நீயோ... வசலில் தீபமாய் எரிந்தாய்...

தீயில் வெந்தபிறகு கூட
தமிழினம் பற்றி பேசினாயே
உன் மனத்திடத்திற்காகத்தான் 
பழகிக்கொண்டிருக்கிறது தமிழகம்...!

சுயநலத்தோடு தீக்குளிப்பவர் மத்தியில்
தன்இனத்திற்காக தீக்குளித்தவனே
ஆண்டுகள் இரண்டோடியும்
உன் தேகத்தின் வாசனை இன்னும்
எங்கள் மூக்குள்ளே தான் 
முகாமிட்டுக்கொண்டிருக்கிறது

தன்மானத்தமி‌ழனே
நீ ஏற்றிய தீபம்தான் தழிழீழம் மலரும்மட்டும் 
இங்கே நீர்பூக்காமல் நிலைத்திருக்கும்

என்ன ஜாதி என்று எனை கேட்டால்
கர்வமாய் சொல்லிக் கொள்கிறோன்..
நான் முத்துக்குமரன் ஜாதி என்று...

இளகிய உணர்வுகள் உறைந்து குளிர்ந்தன
உனை நினைக்கும் போதெல்லாம்...

அழகிய கனவு கலைந்து கரைகிறது
உன் கனவு இன்னும் விடியவில்லையே என்று என்னும் போது..

நெடுஞ்சாலை மைல்கல்லைப்போல்
தமிழினத்தின் ஒவ்வோறு பாதையில்
நீ எதிர்ப்பட்டே ஆகவேண்டும்..

உன் நினைவு நாளில் மட்டுமல்ல்
எங்கள் வாழ்நாலெல்லாம்
உன் நினைவுதான்...

இனி உன் நினைவுகள் எங்களை
உயிர்ப்படையவிக்கும்...
 
இனி உன் தியாகம் எங்களை
இன்னும் போராட வைக்கும்...
(29-01-2011 தமிழினத்தியாகி திரு முத்துக்குமரன் அவர்களின் நினைவு நாளின் கவிதை வீதியின் கண்ணீர் கலந்த கவிதாஞ்சலி)

8 comments:

  1. கண்ணீர் கலந்தஅஞ்சலி அனைவரும் செலுத்துவோம்.
    நம் இரத்த சொந்தங்களை அழித்தவர்களை ஒழித்தால் சந்தோஷப்படும் பலகோடி இதயங்களில் நானும் ஒருவன்....

    ReplyDelete
  2. உன் நினைவு நாளில் மட்டுமல்ல்
    எங்கள் வாழ்நாலெல்லாம்
    உன் நினைவுதான்...
    ஆம் எப்போதும் உன் நினைவு மறக்காது...

    ReplyDelete
  3. வீரவணக்கங்கள்..
    கவிதை படையலிட்டதற்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. மீனவர் பிரச்சனை பற்றிய விஷயத்தில் வலையுலத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் நீங்களும் குரல் கொடுங்கள் சௌந்தர் அவர்களே..
    வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..

    ReplyDelete
  5. பாரத்... பாரதி... said...

    வீரவணக்கங்கள்..
    கவிதை படையலிட்டதற்கு நன்றிகள்..

    நன்றிக்கு நன்றி...

    ReplyDelete
  6. பாரத்... பாரதி... said...
    மீனவர் பிரச்சனை பற்றிய விஷயத்தில் வலையுலத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் நீங்களும் குரல் கொடுங்கள் சௌந்தர் அவர்களே..
    வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..

    நிர ந்தர தீர்வுக்காக தமிழன் எந்த தீயாகமும் செய்வான் அதற்கு நானும் தயார்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!