22 March, 2011

மணமகள் தேவை... உதவிக்கு நீங்க வரலாம்..


“ நீங்க பத்திரிகையிலே கொடுத்திருந்த விளம்பரத்தைப் பார்த்தேன்”
 
“அப்படியா?”
 
“85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகள்  தேவைன்னு கொடுத்திருந்தீங்க.”
 
“ஆமாம்.”
 
“அதுதான் வந்திருந்தேன்.”
 
“ஹி... அப்படியா... ரொம்ப சந்தோஷம்!”
 
“இந்த வயசுலேயும் நீங்க ரொம்ப உற்சாகமாத்தான் இருக்கீங்க..!”
 
“இதோ பாரும்மா.... ஆர்க்கிமிடீஸ் முகம் பார்க்கற கண்ணாடியைத் தனது 75 ஆவது வயசுலேதான் கண்டுப்பிடிச்சார். பிளாட்டோ தனது 80 ஆவது வயசுலே தான் கிரேக்க மொழியைக் கத்துக்கிட்டார். சாப்போக்கல்ஸ் என்கிற அறிஞர் ஓடிப்பஸ் ரெங்க்ஸ்ங்கற நூலை தனது 70 ஆவது வயசுலேதான் எழுதினார். கதே தனது புகழ் பெற்ற நூலான பாஸ்ட் (Faust) இன் இரண்டாம் பாகத்தை தன்னுடைய 83ஆவது வயசுலேதான் எழுதி முடிச்சார். கோன்ராட் அட்னியா தனது 73ஆவது வயசுலே பெடரல் ரிபப்ளிக் ஆப் ‌ஜெர்மனியின் சான்ஸ்ஸல்லர் பதவியை ஏற்ற 87 ஆவது வயசுவரை திறம்பட பணியாற்றினார்.”

“பரவாயில்லையே... நீங்க உங்க 85 ஆவது வயசுலேயும் இவ்வளவு விவரத்தை மறக்காம ஞாபகத்துலே வச்சிருக்கீங்களே..!”
 
“நானும் கூட நிறையச் சாதிக்கணும்னு தான் நினைக்கிறேன். அதனாலேதான் அப்படி ஒரு விளம்பரம் கொடுத்தேன்.”
 
“உங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கறதாகவும், அந்த விளம்பரத்துலே சொல்லியிருக்கீங்க!”
 
“இது இருக்கட்டும்.. உன்னைப் பார்த்தா வயசு ரொம்ப குறைச்சலா தெரியுது. எனக்கு வயசு 85. அது உனக்கு வருத்தம் இல்லையா?“
 
“உங்களுக்கு இன்னும் ஒரு பத்து வயசு கூடுதலா இல்லையே-ன்னு நினைக்கறப்பதான் எனக்கு வருத்தமா இருக்கு..!” (அப்பதானே சொத்து என் பேருக்கு வரும்). நன்றி : தென்கச்சியார்.

இன்றைய திருமணங்கள் பெரும்பாலும் வரதட்சணைகள் இல்லாமல் முடிவதில்லை. பெண்பார்க்கும் போதே பெண்ணுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது எவ்வளவு தருவார்கள் என்றெல்லாம் கணக்கு பார்த்தப்பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆரம்பிக்கிறது. இன்னும் சிலர் படித்தது வேலைசெய்யும் பெண்கள் மட்டுமே வேண்டும் என்ற நோக்கில் தேடுகிறார்கள்.

தற்போதல்லாம் திருமண உதவி மையங்கள், திருமண தகவல் நிலையங்கள், செய்தி தாள்களில் மணமகன் தேவை என்ற விளம்பரங்கள் அதிக அளவில் இடம் பெறுகிறது. எத்தனையோ பெண்கள், குடும்பங்கள் இது போன்ற போலியான தகவல்களை சரியாக அலசாமல் மாட்டிக் கொண்டு அல்லல் படுகிறார்கள். மக்களே விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். அவற்றை தீர ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுங்கள் அது தான் நல்லது.

தற்போது வெளிநாட்டு மோகம் அதிக அளவில் பரவிவருகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சொல்லிக் கொள்ளவே அவர்கள் என்ன வேலைசெய்கிறார்கள், எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று யோசிக்காமல் பெண்ணை மனம் முடித்து விட்டு பின்னர் கண்களை கசக்கிக் கொண்டு இருக்கும் குடும்பங்கள் ஏராளம் ஏராளம் (அதற்காக வெளி நாட்டு மாப்பிள்ளை வேண்டாம் சொல்ல வில்லை).

ஆகையால் மணமகள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் தன் பெண்ணுடைய அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தராமல் ஆராய்ந்து முடிவெடுங்கள்...  திருமணம் என்பது இருமணமும் இணைந்து கூடும் பந்தம் அதைவிட்டு இருமணத்தையும் மற்றவர்களின் உதவிக் கொண்டு இணைக்க யாராலும் இணைக்க முடியாது.

கடைசிய ஒரு காமெடி :
 
என்னங்க நமக்கு திருமனம் செய்து வைத்தாரே அந்த ஜோசியர் ஒரு விபத்துல இறந்துட்டாராம்..
 
அப்படியா.. 

என் பாவம் அவனை  சும்மா விடாதுன்னு அப்பவே சொன்னேனே..
*******************************************************************************
என்ன பாஸ்... எனக்கு தெரிந்த விஷயத்தை தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன்..

இந்த தளம் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.. மறக்காமல் உங்களுடைய கருத்தையும் பதிவுச்செய்யுங்கள்..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

60 comments:

  1. “85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன் தேவை
    அவ்வ்வ்வவ்வ்வ் :-(

    ReplyDelete
  2. பதிவு நகைச்சுவையாக தொடங்கினாலும்... இன்றைய காலகட்டத்துக்கு ஏற்புடைய பதிவு தான் நண்பரே... இரு மனங்கள் இணையும் திருமணம் இன்று விளம்பர மாயையில் சிக்கித் தான் தவிக்கிறது,, நீங்கள் சொன்னது போல மற்றவர்களின் உதவி கொண்டு தேடாமல் தீர்க்கமாய் அலசினால் நல்ல உறவுகள் கிடைக்கும்..பதிவு நல்லா இருக்கு வாழ்த்துக்கள்... கவிதை வீதி தாண்டி அடுத்து கல்யாண வீதியா... ஹ ஹ கலக்கல்... வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  3. நண்பரே மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன்
    எங்கயோ இடிக்கிதே....

    ReplyDelete
  4. //“85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன் தேவை//

    மணகளுக்கு 84 வயசு ஓகேவா?

    ReplyDelete
  5. காதலிக்க பெண்கள் தேவையின்னு நான் விளம்பரம் கொடுத்து இம்புட்டு நாளாச்சு இன்னும் ஒருத்தரும் சிக்கலையே!

    ReplyDelete
  6. நண்பரே

    சூப்பர் பதிவு.

    ReplyDelete
  7. வயசான மணமகனுக்கு ஒரு மணமகன் தேவை//////////
    //////////////
    சரி செய்யவும் .............

    ReplyDelete
  8. மாப்ள இது என்ன பையனுக்கும் பையனுக்குமா ஹிஹி இல்ல இல்ல கிழவருக்கும் கிழவருக்குமா ஹிஹி!

    ReplyDelete
  9. //////
    ரேவா said... [Reply to comment]

    “85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன் தேவை
    அவ்வ்வ்வவ்வ்வ் :-(
    //////

    எப்பூடி..

    ReplyDelete
  10. /////ரேவா said... [Reply to comment]

    பதிவு நகைச்சுவையாக தொடங்கினாலும்... இன்றைய காலகட்டத்துக்கு ஏற்புடைய பதிவு தான் நண்பரே... இரு மனங்கள் இணையும் திருமணம் இன்று விளம்பர மாயையில் சிக்கித் தான் தவிக்கிறது,, நீங்கள் சொன்னது போல மற்றவர்களின் உதவி கொண்டு தேடாமல் தீர்க்கமாய் அலசினால் நல்ல உறவுகள் கிடைக்கும்..பதிவு நல்லா இருக்கு வாழ்த்துக்கள்... கவிதை வீதி தாண்டி அடுத்து கல்யாண வீதியா... ஹ ஹ கலக்கல்... வாழ்த்துக்கள் நண்பா
    //


    நன்றி ரேவா..

    ReplyDelete
  11. ///
    ரேவா said... [Reply to comment]

    நண்பரே மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன்
    எங்கயோ இடிக்கிதே....
    ////

    சரி செய்து விட்டேன் நண்பா...

    ReplyDelete
  12. ///////
    சங்கவி said... [Reply to comment]

    //“85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன் தேவை//

    மணகளுக்கு 84 வயசு ஓகேவா?
    /////


    ஓகேவா?

    ReplyDelete
  13. ///
    தமிழ் 007 said... [Reply to comment]

    காதலிக்க பெண்கள் தேவையின்னு நான் விளம்பரம் கொடுத்து இம்புட்டு நாளாச்சு இன்னும் ஒருத்தரும் சிக்கலையே!
    ////

    நீ அடங்க மாட்ட போல..

    ReplyDelete
  14. ரொம்ப லேட்டா வந்திட்டனோ?

    ReplyDelete
  15. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    வடை போச்சே..
    //

    எப்ப வந்து வடை கேக்கறீங்க..
    ஒழுங்க பதிவை படிச்சிட்டு கமாண்ட் கொடுங்க..

    நான் பன்னிக்குட்டியை பார்த்துட்டு வர்றேன்..

    ReplyDelete
  16. ஹா ஹா செம காமெடி.. அப்படியே ஊடால ஜி கே.. ம் ம்

    ReplyDelete
  17. ஆயிரம் காலத்துப் பயிரல்லவா?
    அலசி ஆராய்ந்து முடிவெடுத்தல்
    அவசியம்.

    ReplyDelete
  18. நல்ல பதிவு பாஸ்! இடையே தகவல்களுடன்! :-)

    ReplyDelete
  19. Extreme... கலக்கல்...

    ReplyDelete
  20. கவிதை வீதி to கல்யாண மண்டபம். ஹா.. ஹா...

    ReplyDelete
  21. இப்போ நிறைய திருமண மையங்கள் அதாங்க திருமண தகவல் மையங்கள் ஏற்பட்டு வருவது உண்மைதான். எவ்ளோ உண்மை எவ்ளோ பொய்னு நாம்தான் விசாரிக்கணும் .. ஆனா அந்த மையங்களும் அதிக அளவு உபயோகப்படுதுன்னு தான் சொல்லணும் .. ஆனா எதிர்காலத்துல அது போன்ற மையங்கள் குறையலாம் .. காதல் திருமணங்களால்!! ஹி ஹி

    ReplyDelete
  22. உபயோகமுள்ள பதிவு...
    (வோட்டு எல்லாத்துக்கும் போட்டாச்சு !)

    ReplyDelete
  23. சின்ன சின்ன கதைகளுடன் பதிவு களை கட்டுது

    ReplyDelete
  24. திருமணமே ஒரு வியாபாரமாகி விட்ட நிலையில் நிச்சயம் கவனம் தேவைதான்!

    ReplyDelete
  25. மணமகன் தேவைன்ன சொல்லுங்கபா....

    ReplyDelete
  26. நல்ல விசயத்தை காமெடியா சொல்லியிருக்கீங்க! ரொம்ப நல்லாயிருக்கு!

    ReplyDelete
  27. இந்த மாதிரி செய்த்தித்தாள் விளம்பரம் மூலமகவும், மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலமும் வரன் தேடும்போது ஒரு பக்கம் நன்மை இருந்தாலும் சில ஏமாற்று வேலைகளும் நடக்கத்தான் செய்கின்றன!

    ReplyDelete
  28. ////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    மாப்ள இது என்ன பையனுக்கும் பையனுக்குமா ஹிஹி இல்ல இல்ல கிழவருக்கும் கிழவருக்குமா ஹிஹி!
    ///

    நன்றி விக்கி..

    ReplyDelete
  29. அடக்கடவுளே உங்களுக்கு 85 வயசா ஆகுது....? முன்னாடியே தெரியாம போச்சே.....?

    ReplyDelete
  30. ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    அடக்கடவுளே உங்களுக்கு 85 வயசா ஆகுது....? முன்னாடியே தெரியாம போச்சே.....?
    ///


    பெரியவரே..
    நீங்க பெண் பார்க்கறதா கேள்வி பட்டேன்..
    அதான் இந்த உஷார் பதிவு..

    ReplyDelete
  31. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    ஹா ஹா செம காமெடி.. அப்படியே ஊடால ஜி கே.. ம் ம்
    ///'

    நன்றி சிபி.

    ReplyDelete
  32. /////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    ஆயிரம் காலத்துப் பயிரல்லவா?
    அலசி ஆராய்ந்து முடிவெடுத்தல்
    அவசியம்.
    ///////////

    நன்றி..

    ReplyDelete
  33. /////
    FOOD said... [Reply to comment]

    நல்ல சமுதாய சிந்தனையுள்ள பதிவு. பகிர்விற்கு நன்றி, நண்பரே!
    ///

    நன்றி தல..

    ReplyDelete
  34. வழக்கம் போல உங்கள் பாணியில் கலக்குகிறீர்கள்..

    ReplyDelete
  35. தலைப்பு சுவாரஸியம்..

    ReplyDelete
  36. கடைசியாக உள்ள ஜோக் SMS ல் படித்ததாக ஞாபகம்.

    ReplyDelete
  37. //தற்போது வெளிநாட்டு மோகம் அதிக அளவில் பரவிவருகிறது.//

    இல்லை மக்கா நம்ம ஆளுங்க இப்போ உஷாராகிட்டாங்க. வெளி நாடுன்னு சொன்னாலே ரெண்டு எட்டு தள்ளி நின்னுதான் பேசுறாங்க....

    ReplyDelete
  38. ////
    சே.குமார் said... [Reply to comment]

    சூப்பர் பதிவு.
    //

    நன்றி குமார்..

    ReplyDelete
  39. ///
    FOOD said... [Reply to comment]

    அதிலும் அந்த கடைசி ஜோக். நச்சுனு இருக்கு.
    //

    நன்றிங்க..

    ReplyDelete
  40. ///
    ஜீ... said... [Reply to comment]

    நல்ல பதிவு பாஸ்! இடையே தகவல்களுடன்! :-)
    ///்

    நன்றி ஜீ..

    ReplyDelete
  41. ////
    கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]

    Extreme... கலக்கல்...
    ///

    நன்றி தல

    ReplyDelete
  42. ///
    ! சிவகுமார் ! said... [Reply to comment]

    கவிதை வீதி to கல்யாண மண்டபம். ஹா.. ஹா...
    //


    நன்றி குமார்..

    ReplyDelete
  43. ///
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    இப்போ நிறைய திருமண மையங்கள் அதாங்க திருமண தகவல் மையங்கள் ஏற்பட்டு வருவது உண்மைதான். எவ்ளோ உண்மை எவ்ளோ பொய்னு நாம்தான் விசாரிக்கணும் .. ஆனா அந்த மையங்களும் அதிக அளவு உபயோகப்படுதுன்னு தான் சொல்லணும் .. ஆனா எதிர்காலத்துல அது போன்ற மையங்கள் குறையலாம் .. காதல் திருமணங்களால்!! ஹி ஹி
    /////

    நன்றி..

    ReplyDelete
  44. ///
    ஆகாயமனிதன்.. said... [Reply to comment]

    உபயோகமுள்ள பதிவு...
    (வோட்டு எல்லாத்துக்கும் போட்டாச்சு !)
    ////

    நனறி...

    ReplyDelete
  45. /////
    ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    சின்ன சின்ன கதைகளுடன் பதிவு களை கட்டுது
    ////

    நன்றி தல...

    ReplyDelete
  46. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    திருமணமே ஒரு வியாபாரமாகி விட்ட நிலையில் நிச்சயம் கவனம் தேவைதான்!
    /////

    நன்றி தல..

    ReplyDelete
  47. ////
    உளவாளி said... [Reply to comment]

    மணமகன் தேவைன்ன சொல்லுங்கபா....
    /////


    வாங்க உளவாளி...

    ReplyDelete
  48. ////
    எஸ்.கே said... [Reply to comment]

    நல்ல விசயத்தை காமெடியா சொல்லியிருக்கீங்க! ரொம்ப நல்லாயிருக்கு!
    ////////


    நன்றி எஸ் கே..

    ReplyDelete
  49. /////////
    எஸ்.கே said... [Reply to comment]

    இந்த மாதிரி செய்த்தித்தாள் விளம்பரம் மூலமகவும், மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலமும் வரன் தேடும்போது ஒரு பக்கம் நன்மை இருந்தாலும் சில ஏமாற்று வேலைகளும் நடக்கத்தான் செய்கின்றன!
    ///////

    நன்றி..

    ReplyDelete
  50. ////
    பாரத்... பாரதி... said... [Reply to comment]

    வழக்கம் போல உங்கள் பாணியில் கலக்குகிறீர்கள்..
    ///

    தங்கள் வருகைக்கு நன்றி பாரத் பாரதி..

    ReplyDelete
  51. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //தற்போது வெளிநாட்டு மோகம் அதிக அளவில் பரவிவருகிறது.//

    இல்லை மக்கா நம்ம ஆளுங்க இப்போ உஷாராகிட்டாங்க. வெளி நாடுன்னு சொன்னாலே ரெண்டு எட்டு தள்ளி நின்னுதான் பேசுறாங்க....
    ////////

    நன்றி..

    ReplyDelete
  52. மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன்
    எங்கயோ இடிக்கிதே....

    ReplyDelete
  53. ////
    போளூர் தயாநிதி said... [Reply to comment]

    மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன்
    எங்கயோ இடிக்கிதே....
    ///

    ஏங்க சரியா படிங்க..
    மணமகனுக்கு மணமகள்..
    அப்படித்தான் இருக்கு..

    ReplyDelete
  54. Recently saw an Ad in Women's Era magazine:
    45 years , separated, with one kid woman wants to marry a broadminded man who has properties worth in crores. Age,caste absolutely no bar.


    Your first half of this post reminded this to me.

    ReplyDelete
  55. ////
    போளூர் தயாநிதி said... [Reply to comment]

    மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன்
    எங்கயோ இடிக்கிதே....
    ///

    நல்லா பாருங்க பாஸ்..

    ReplyDelete
  56. மாப்பிள்ளை பெண் வேட்டரடிமிருந்து எதிர் பார்ப்பதை மட்டும் போட்டுள்ளீர்கள். பெண் கொடுப்பவர்கள் மட்டும் என்ன ஒண்ணுமே தெரியாதா அப்பாவிகளா? நான் படிப்பு, பணி குடும்பப் பின்னணி எல்லாவற்றிலும் ஆஹா ஓஹோ இல்லை என்றாலும் மோசமில்லை என்னும் வகையைச் சார்ந்தவன். இத்தனைக்கும் நான் வைத்த ஒரே கண்டிஷன் பெண் ஏதாவது ஒரு Bachelor டிகிரி யாவது படித்திருந்தால் போதும் என்பது மட்டுமே, மற்ற எந்த பணம், நகை சம்பந்தப் பட்ட டிமாண்டும் வைக்கவில்லை. ஆனாலும் பெண் பார்க்கப் போனா இடமெல்லாம் நோண்டி நோன்கேடுத்தார்கள், நில புலமில்லை என்று நிராகரித்தார்கள். அவர்கள் சந்தையில் வாங்கும் ஆட்டை எப்படி எல்லாம் தரகர்கள் பார்ப்பார்களோ அந்த மாதிரி பார்த்தார்கள். இத்தனையும் பண்ணும் இவர்கள் எவனோ படிப்பு வேலை என்று எதுவுமே இல்லாத ஒருத்தனுக்கு முப்பது பெண்களை திருமணம் பண்ணிக் கொள்ள விட்டிருக்கிறார்கள். பார்க்க கோழித் திருடன் மாதிரி இருக்கும் அவன் எல்லோரிடமும் வெளிநாட்டில் பணிபுரிபவன் என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறான். எல்லா பெண்களுமே லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறவர்கள் என்பதுதான் இதில் வேடிக்கையே. ஒருத்தி கூட அவனுடைய இ-மெயில் ID , தொலைபேசி ஏன், வேலை செய்யும் நிறுவனத்தில் முகவரி கேட்கவேயில்லையா? அட, திருமணத்திற்கு நூறு பேராவது இருபுறமும் இருந்து கூப்பிடவில்லையா? அவனும், அவன் கூட ஒரு பொருக்கி இருவருமே இத்தனை வேலையும் செய்துள்ளார்கள். திருமணம் செய்த பின் அவன் இவர்களிடமிருந்து பணம், நகைகளை எடுத்துக் கொண்டதோடு நில்லாமல், முதலிரவை புளு பிலிம் எடுத்து சி.டி. போட்டு மார்கெட்டில் விட்டிடுக்கிறான். இதையெல்லாம் விடக் கொடுமை அவன் மாட்டிய பிறகு, அவன் கூடத்தான் வாழ்வேன் என்று சொல்லி நாலைந்து பெண்கள் அடம் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பொம்பிளைங்க மனசு நிஜமாவே கடல்தான். இளிச்சவாயன் மூழ்கி செத்துடுவான், முளிச்சவன் அதில கப்பல் விடுவான். ஐயோ... ஐயோ.. அவ்...................

    ReplyDelete
  57. உங்கள் சைட் சூப்பர் யா ....
    பெஸ்ட் ஒப் லக்
    கீப் கோயன்.....

    எனது சைட்

    http://eyepicx.blogspot.com

    ReplyDelete
  58. அன்பின் சௌந்தர் - இப்பல்லாம் நெட்ல தான் பாக்கறாங்க - அத வச்சு கல்யாணம் பண்ணிட்டு - அப்புறம் கண்ணக் கசக்கிக்கிட்டு நிக்கறாங்க - என்ன பண்றது ..... நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!