09 April, 2011

இப்பவே கண்ணைகட்டுதே.. வேயில் காலத்தில் என்னவாகுமோ..

அன்பார்ந்த வசகபெருமக்களே... பதிவுலக நன்பர்களே... வசந்த காலமான பனிக்காலத்திற்கு விடை கொடுத்துவிட்டு, அடுத்து வரும் கோடை காலத்திற்கு வரவேற்பு கொடுக்கும் காலம் வந்துவிட்டது. வெயிலின் தாக்கமும், வெப்பமும் இனி நம்மை பயமுறுத்தும்.

கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, `பாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்' எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. கோடை காலத்தில் மிகுந்த சுகாதாரதன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் நோய்கள் போட்டிபோட்டிக் கொண்டு நம்மை தாக்கும்.

கோடைகாலத்தில் சிறுவர்கள் நீச்சல் குளங்களில் விளையாடுவதை சுகமான அனுபவமாக கருதுவார்கள். அந்த தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் காதுகளில் தொற்று, கண்களில் எரிச்சல், சரும நோய் போன்றவை தோன்றும். உடலில் இருக்கும் காயத்தில் அந்த அழுக்கு நீர் படும்போது டைபாய்ட், எலி ஜுரம் போன்ற நோய்கள்கூட ஏற்படக்கூடும். 
கோடை வெயிலில் `அல்ட்ரா வயலட் கதிர்கள்' தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஓசோன் மண்டலம் அதன் தாக்குதல் தன்மையை தடுக்கும். இப்போது ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழும் பாதிப்பு இருப்பதால், கதிர்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. வெள்ளை நிற சருமம் கொண்ட வெளிநாட்டினர் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு சரும நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

இந்தியர்களின் சருமம் அனே கமாக கறுப்பு நிறத்தில் இருப்பதால், இந்த கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்க முடிகிறது. ஆயினும் கோடை வெயில் சருமத்தை பாதிக்காத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.

செயற்கைஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத்திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடைகளையே அணிய வேண்டும். கோடையில் சூடுகட்டி உடலில் உருவாகும். எல்லா வயதினருக்கும் இது உருவாகும் என்றாலும் சர்க்கரை நோயாளிகளை அதிக தொந்தரவிற்கு உள்ளாக்கும்.

கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் தொடர்ச்சியாக உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவது குறைந்துகொண்டே போகும். அப்போது உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சிறுநீரக கல் தோன்றுகிறது. தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகலாம். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளையும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். கல் உருவாகாது. ( நன்றி பல்வேறு நூல்கள்)

கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை அதிகரிக்கவேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும். கூடவே உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும், காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் வழக்கமான இடத்தில் இருந்து சுற்றுலாவாகவோ, உறவினர்களைப் பார்க்கவோ இன்னொரு இடத்திற்கு செல்கிறார்கள். அப்போது வெளி உணவுகளை அவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் காலரா, டைபாய்ட், புட் பாய்சன் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 


தேர்தல் முடிந்து ஆட்சி ஆரம்பிக்கிறதோ இல்லையோ  கோடை ஆரம்பி விடும், கோடை விடுமுறையை சிறந்த வழியில் கழிக்க பழகிக்கொள்ளுங்கள். குழந்தைகள் கோடை விடுமுறை என்பதால் அதிக ஆட்ட் இருக்கும் அவர்களை ஏதாவது ஒரு ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட வழிக்கோளுங்கள்.
 

23 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல்கள். அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டிய காலம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. தாத்தா வயித்தியம் சொல்லிட்டாருய்யா...

    ReplyDelete
  3. ////
    aranthairaja said... [Reply to comment]

    நல்ல பயனுள்ள தகவல்கள். அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டிய காலம் என்று நினைக்கிறேன்.
    /////


    நன்றி...

    ReplyDelete
  4. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    தாத்தா வயித்தியம் சொல்லிட்டாருய்யா...
    ///////


    ஏதோ என்னால முடிஞ்சது..

    ReplyDelete
  5. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    சரியா சரி!
    ///

    வாங்க மாப்ள..

    ReplyDelete
  6. ///////Rathnavel said... [Reply to comment]

    நல்ல பதிவு.
    ///

    வாங்க..

    ReplyDelete
  7. கோடையின் தாக்கம் குறித்து நல்ல அலசல். அவசியமான பதிவு.

    ReplyDelete
  8. எங்கள் ஊரில் சுத்தமான கம்மங்கூல் கிடைக்கும். அப்புறம் வெள்ளரி பழம், தர்பூசணை விட்டு விட்டீர்கள். கோடை காலத்தை ஒட்டிய பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  9. //இந்தியர்களின் சருமம் அனே கமாக கறுப்பு நிறத்தில் இருப்பதால்//

    கருப்பு எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தரும் சௌந்தர் வாழ்க!

    ReplyDelete
  10. சென்னை வெயில் இலவச இணைப்பாய் புழுதிகளோடு வரும்!!!

    ReplyDelete
  11. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய குறிப்புகள்.. நன்றி..

    ReplyDelete
  12. நண்பர்களே.

    தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

    ReplyDelete
  13. தேர்தல் முடிந்தாலும் கோடைவந்தாலும் பிடித்த சனியன் விடவா போகுது.ம்ம்.....

    ReplyDelete
  14. சேலத்துல ஒரு கிளினிக் ஓப்பன் பண்ணிடுங்கண்ணே.....!

    ReplyDelete
  15. காலத்துக்கேற்ற நல்ல பதிவு...

    ReplyDelete
  16. தாமதத்திற்கு மன்னிக்கவும்.பயனுள்ள பதிவு.

    மும்பாயில் லிம்பு பானி(எலுமிச்சை நீர்)பழங்கள் போன்றவை ரயில்வே நிலையங்கள் அருகில் மிகப் பிரசித்தம்.சென்னையில் அண்ணாசாலையில் லஸ்ஸீ மட்டுமே பிரசித்தம்:)

    ReplyDelete
  17. நல்ல பதிவு பாஸ்!

    ReplyDelete
  18. குளிர்ச்சி தரும் தகவல்களுக்கு நன்றி சௌந்தர் !

    ReplyDelete
  19. ஜில் ஜில் டிப்ஸ் நன்றிங்க

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!