18 April, 2011

எனது முதலிரவு அனுபவங்கள்...


கோடி அணுக்களில் 
ஒற்றை அணுவை  உள்வாங்கி
பத்து மாதங்கள் உயிவளர்த்து மெய்வளர்த்து 
இந்த பூமிப்பந்தில் வந்து விழுந்து...

என் விழிகள் அறிந்திருக்க 
சாத்தியமில்லாத
நான் முதல்முதலாய் காற்று சுவாசித்த
ஒரு முதல் இரவு...

மிழின் அகரமும் ழகரமும் படிக்க
பள்ளியில் சேர்த்த பிறகு
பிரம்போடு வந்த ஆத்மாக்களை நினைத்து
உதரலோடு நடுங்கிய 
ஒரு முதலிரவு... 

வேடந்தாங்கல்... மகாபலிபுரம்...
சுற்றுலா செல்ல பெயர்கொடுத்துவிட்டு
பயம்கலந்த எதிர்பார்ப்பில்
என் கற்பனை குதிரைகள் 
பலமுறை சிறகடிக்க
 விடியாமல் நீண்டது 
ஒரு முதல்இரவு...

ரு பனிகால சந்திப்பில்...
சுற்றியிருக்கும் உலகத்தை
தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
என் தந்தை இறந்துப்போக
அவரில்லாது அழுகையோடு க‌ழிந்த
ஒரு முதல் இரவு..

னக்குள் வாலிபம் உருவெடுக்க
ஒரு முடியாத வசந்த காலத்தில்
கன்னியவள் முகம்பார்த்து
காதல் வந்து தொற்றிக்கொள்ள...


இறந்தும் இறவாமலும் உயிர்வா‌ழ்ந்த 
என் இமைகள் மூடாது இம்சித்த
ஒரு முதல் இரவு...

ன முதலிரவுகள்
என்னை உணரவைத்தவைகள்..

னி என்று வருமோ...
மஞ்சத்தில் புரண்டு
மலர்களோடு குழைந்து
என் ஜென்மம் பூரணமடைய
ஒரு முதல்இரவு... 

சும்மா ஒரு கருத்துச் சொல்லுங்க....

67 comments:

  1. அருமையான வரிகளுடன் வலியும் நிறைந்த ஒர் கவிதை.. படங்களின் தேர்வும் அருமை..

    ReplyDelete
  2. டைட்டிலைப்பார்த்ததும் ஆர்வமா வந்தா.......

    ReplyDelete
  3. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    அருமையான வரிகளுடன் வலியும் நிறைந்த ஒர் கவிதை.. படங்களின் தேர்வும் அருமை..
    ////

    வாங்க..

    ReplyDelete
  4. ஆஹா ரொம்ப நல்லா இருக்குங்கோ........!

    ReplyDelete
  5. ////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    டைட்டிலைப்பார்த்ததும் ஆர்வமா வந்தா.......
    ////

    இது நீங்க கொடுத்த தலைப்பு தாங்க..

    ReplyDelete
  6. ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    ஆஹா ரொம்ப நல்லா இருக்குங்கோ........!
    ///

    வாங்க தலைவரே..

    ReplyDelete
  7. இந்த புள்ளைய காப்பாத்து கடவுளே .....கேக்கறது குடுத்துடு......

    நல்லா இருக்கு நண்பா கவித

    ReplyDelete
  8. @சி.பி.செந்தில்குமார்

    நெனச்சேன் CPS இந்த பதிலைத் தான் சொல்வாரென்று !
    (முதல் இரவுன்னா பசங்களுக்கு வேறு என்ன நியாபகம் வரும்...)

    ReplyDelete
  9. @சி.பி.செந்தில்குமார்

    நெனச்சேன் CPS இந்த பதிலைத் தான் சொல்வாரென்று !
    (முதல் இரவுன்னா பசங்களுக்கு வேறு என்ன நியாபகம் வரும்...)

    ReplyDelete
  10. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    இந்த புள்ளைய காப்பாத்து கடவுளே .....கேக்கறது குடுத்துடு......

    நல்லா இருக்கு நண்பா கவித
    ///

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  11. ///
    ஆகாயமனிதன்.. said... [Reply to comment]

    @சி.பி.செந்தில்குமார்

    நெனச்சேன் CPS இந்த பதிலைத் தான் சொல்வாரென்று !
    (முதல் இரவுன்னா பசங்களுக்கு வேறு என்ன நியாபகம் வரும்...)
    ////

    பாவம் விட்டுங்க சார்..

    ReplyDelete
  12. எத்தனை முதல் இரவுகள்!அத்தனையும்,வெவ்வேறு சுவை!
    அருமை சௌந்தர்!

    ReplyDelete
  13. ///
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    எத்தனை முதல் இரவுகள்!அத்தனையும்,வெவ்வேறு சுவை!
    அருமை சௌந்தர்!
    ///


    ஆம்..
    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  14. ///
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    ஒரு அனுபவம்.
    ///

    நன்றி..

    ReplyDelete
  15. வரிகள் சொல்லும்
    முதல் இரவு அனுபவங்கள்
    கடந்து நாழிகை பருவங்களில்
    சிதைந்த மீண்டும் மீளாத
    வாழ்வின் முதல் இரவுகள்

    அருமை நண்பா மிக அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  16. ////
    செய்தாலி said... [Reply to comment]

    வரிகள் சொல்லும்
    முதல் இரவு அனுபவங்கள்
    கடந்து நாழிகை பருவங்களில்
    சிதைந்த மீண்டும் மீளாத
    வாழ்வின் முதல் இரவுகள்

    அருமை நண்பா மிக அருமை பாராட்டுக்கள்
    ///

    நன்றி..

    ReplyDelete
  17. அன்பின் சௌந்தர்

    ஆயிரம் முதல் இரவுகளை அனுபவித்திருந்தாலும், ஜென்மம் சாபல்யமடைய, பூரணமடைய - வர வேண்டிய முதல் இரவு விரைவினில் வர நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  18. //////
    cheena (சீனா) said... [Reply to comment]

    அன்பின் சௌந்தர்

    ஆயிரம் முதல் இரவுகளை அனுபவித்திருந்தாலும், ஜென்மம் சாபல்யமடைய, பூரணமடைய - வர வேண்டிய முதல் இரவு விரைவினில் வர நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ///

    நன்றி தலைவரே...

    ReplyDelete
  19. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. நல்லா இருக்கு சௌந்தர்.

    ReplyDelete
  21. ////
    Rathnavel said... [Reply to comment]

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.
    ///

    நன்றி..

    ReplyDelete
  22. ////
    ! சிவகுமார் ! said... [Reply to comment]

    நல்லா இருக்கு சௌந்தர்.
    ///

    நன்றி சிவா...

    ReplyDelete
  23. //ஒரு பனிகால சந்திப்பில்...
    சுற்றியிருக்கும் உலகத்தை
    தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
    என் தந்தை இறந்துப்போக
    அவரில்லாது அழுகையோடு க‌ழிந்த
    ஒரு முதல் இரவு..//

    அருமை அருமை....

    ReplyDelete
  24. //ஒரு பனிகால சந்திப்பில்...
    சுற்றியிருக்கும் உலகத்தை
    தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
    என் தந்தை இறந்துப்போக
    அவரில்லாது அழுகையோடு க‌ழிந்த
    ஒரு முதல் இரவு..//

    பாசம் பாசம் அன்பு அன்பு....

    ReplyDelete
  25. எனது முதலிரவு அனுபவங்கள்...//

    பல பொருள்களை ஒரு கவியில் உணர்த்தும் வண்ணம் கவிதைக்கு தலைப்பினை வைத்திருக்கிறீர்கள் என்பதனை கவிதையின் உள்ளடக்கத்தினை படிக்கையில் தான் உணர்ந்து கொண்டேன்.

    ReplyDelete
  26. கோடி அணுக்களில்
    ஒற்றை அணுவை உள்வாங்கி
    பத்து மாதங்கள் உயிவளர்த்து மெய்வளர்த்து
    இந்த பூமிப்பந்தில் வந்து விழுந்து..//

    இவ் இரவு ஒரு ஜீவனின் அவதரிப்பை அழகாகச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  27. என் விழிகள் அறிந்திருக்க
    சாத்தியமில்லாத
    நான் முதல்முதலாய் காற்று சுவாசித்த
    ஒரு முதல் இரவு..//

    அடடா.....
    உலகினைக் கண் கொண்டு தாங்கள் தரிசித்த அந்த நாள் அதுவும் அழகாக வார்த்தைகளின் வெளியீடாய் வந்து விழுந்திருக்கிறது.

    ReplyDelete
  28. தமிழின் அகரமும் ழகரமும் படிக்க
    பள்ளியில் சேர்த்த பிறகு
    பிரம்போடு வந்த ஆத்மாக்களை நினைத்து
    உதரலோடு நடுங்கிய
    ஒரு முதலிரவு... //

    வீட்டுப் பாடங்களை நினைத்து, வாத்தியாருக்குப் பயந்து படித்த நாட்களை இது கண் முன்னே காட்சிப்படுத்துகிறது. இவ் வரிகள் லாந்தர் அல்லது லாம்பு வெளிச்சத்தில் நாங்கள் படித்த அந் நாளை என் கண் முன்னே கொண்டு வந்து தந்திருக்கின்றன.

    ReplyDelete
  29. ஒரு பனிகால சந்திப்பில்...
    சுற்றியிருக்கும் உலகத்தை
    தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
    என் தந்தை இறந்துப்போக
    அவரில்லாது அழுகையோடு க‌ழிந்த
    ஒரு முதல் இரவு..//

    வலி கலந்த இரவு என்பதனை விட... கண்ணீரில் கரைந்த கற்பனைக்குள் அடங்க முடியாத நிஜமான ராத்திரியின் பூபாளம் இது.

    ReplyDelete
  30. இனி என்று வருமோ...
    மஞ்சத்தில் புரண்டு
    மலர்களோடு குழைந்து
    என் ஜென்மம் பூரணமடைய
    ஒரு முதல்இரவு...//

    இதில் எதிர்ப்பார்ப்புக்களோடு காத்திருக்கும் எங்களைப் போன்றோரின் உணர்வுகளையும், உங்களின் உணர்வுகளையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. எனது முதலிரவு அனுபவங்கள்...//

    இராத்திரியில் மௌனங்களுடனும் சோகத்துடன் கழிந்த நினைவுகளையும், வசந்தங்களின் சிணுங்கல்களாய் கழிந்த இளமைக்கால இனிய பொழுதுகளையும் பாடி நிற்கிறது. .

    இறுதி வரிகளில் கவிஞரின் காத்திருப்பின் ஆதங்கம் புரிகிறது, வெகு விரைவில் எல்லாம் நன்மையாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. "ஜென்மம் பூர்த்தியானதா???

    ReplyDelete
  34. ஒவ்வொரு அனுபவ இரவும் முதலிரவுதான்.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  35. @நிரூபன்

    தங்களின் அனைத்து பின்னுட்டத்திற்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  36. ////
    MANO நாஞ்சில் மனோ said...

    //ஒரு பனிகால சந்திப்பில்...
    சுற்றியிருக்கும் உலகத்தை
    தன் தோள்மீது எனை அமர்த்திக்காட்டிய
    என் தந்தை இறந்துப்போக
    அவரில்லாது அழுகையோடு கழிந்த
    ஒரு முதல் இரவு..//

    பாசம் பாசம் அன்பு அன்பு....////

    நன்றி ம‌னோ...

    ReplyDelete
  37. ///
    N.H.பிரசாத் said...

    Kavithai super.///

    நன்றி பிரசாத்..

    ReplyDelete
  38. ////
    வேல் தர்மா said... [Reply to comment]

    "ஜென்மம் பூர்த்தியானதா???
    ////

    ம்... இன்னும் இல்லிங்க...

    ReplyDelete
  39. ///
    ஹேமா said... [Reply to comment]

    ஒவ்வொரு அனுபவ இரவும் முதலிரவுதான்.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !
    /////

    நன்றி தோழி..

    ReplyDelete
  40. கவிதை மிக அருமை தோழரே.

    ReplyDelete
  41. சில இன்பங்கள் , சில துன்பங்கள். ஆனா எல்லாமே எல்லோரது வாழ்கையிலும் நடப்பதுதான் அண்ணா ..அதே மாதிரி தீபாவளிக்கு முன்தினம் இரவு சின்ன வயசுல ஒரு படபடப்பு இருக்குமே ,.நான் தான் முதல்ல பட்டாசு வெடிப்பேன்னு அதுவும் ரொம்ப நல்லா இருக்கும் :-))

    ReplyDelete
  42. ////
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    கவிதை மிக அருமை தோழரே.
    ///

    நன்றி..

    ReplyDelete
  43. ///
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    அசத்தல் கவிதை...
    ///

    நன்றி பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  44. ///
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    சில இன்பங்கள் , சில துன்பங்கள். ஆனா எல்லாமே எல்லோரது வாழ்கையிலும் நடப்பதுதான் அண்ணா ..அதே மாதிரி தீபாவளிக்கு முன்தினம் இரவு சின்ன வயசுல ஒரு படபடப்பு இருக்குமே ,.நான் தான் முதல்ல பட்டாசு வெடிப்பேன்னு அதுவும் ரொம்ப நல்லா இருக்கும் :-))
    ///

    உண்மைதான் இன்னும் எத்தனையோ முதலிரவுள் நம்மை பாடாய் படுத்தியிருக்கும் நம் நினைவில் நீங்காததாக இருக்கும்...

    கவிதையின் நீளம் கருதி....
    கொஞ்சம் கொடுத்திருக்கிறேன்..

    ReplyDelete
  45. வேறு வழியே இல்லை டெம்ப்ளேட் கமெண்டுதான் போட்டாக வேண்டும் செளந்தர், உண்மையிலேயே மிக மிக அருமை, பல இரவுகள் வந்தாலும் இதுதான் முதல் இரவுன்னு தெளிவா சொல்லிட்டீங்க, பாலன்ஸ் இரவையும் சந்திக்க வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  46. ///
    இரவு வானம் said... [Reply to comment]

    வேறு வழியே இல்லை டெம்ப்ளேட் கமெண்டுதான் போட்டாக வேண்டும் செளந்தர், உண்மையிலேயே மிக மிக அருமை, பல இரவுகள் வந்தாலும் இதுதான் முதல் இரவுன்னு தெளிவா சொல்லிட்டீங்க, பாலன்ஸ் இரவையும் சந்திக்க வாழ்த்துக்கள் :-)
    ///

    நன்றிங்க..

    ReplyDelete
  47. ///
    FOOD said... [Reply to comment]

    ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை.அருமை.
    ///

    நன்றி தல..

    ReplyDelete
  48. தலைப்புக்குத்தான் ஹிட்ஸ் அதுக்காக இப்படியா குறும்பு பண்றது..?

    ReplyDelete
  49. ////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    தலைப்புக்குத்தான் ஹிட்ஸ் அதுக்காக இப்படியா குறும்பு பண்றது..?
    ////


    வித்தியாசம சிந்திச்சா இப்படிதாங்க வரும்...
    என்ன பண்றது..

    ReplyDelete
  50. http://faaique.blogspot.com/2011/04/equal-2.html

    ReplyDelete
  51. ஒவ்வொரு முதலிரவு கொள்ளை அழகு சகோ

    ReplyDelete
  52. ஒவ்வொரு இரவும் அசத்தான இரவு.

    ReplyDelete
  53. நல்லா இருக்கு நண்பரே...

    ReplyDelete
  54. உங்கள் முதலிரவுகளின் அனுபவங்கள் பிரமாதாம்
    - பிரியா

    ReplyDelete
  55. ///
    ராஜி said... [Reply to comment]

    ஒவ்வொரு முதலிரவு கொள்ளை அழகு சகோ
    //

    நன்றி ராஜி..

    ReplyDelete
  56. ///
    siva said... [Reply to comment]

    very nice
    ///

    நன்றி சிவா..

    ReplyDelete
  57. ///
    ஆதிரா said... [Reply to comment]

    ஒவ்வொரு இரவும் அசத்தான இரவு.
    ///

    வாங்க ஆதி

    ReplyDelete
  58. ///
    வேங்கை said... [Reply to comment]

    நல்லா இருக்கு நண்பரே...
    ///

    நன்றி வேங்கை

    ReplyDelete
  59. ///
    aglan said... [Reply to comment]

    உங்கள் முதலிரவுகளின் அனுபவங்கள் பிரமாதாம்
    - பிரியா
    ////

    நன்றி பிரியா..

    ReplyDelete
  60. தலைப்பு பார்த்து திட்டலாம் னு தான் வந்தேன்..பட் கவிதை அருமை...பட் தலைப்பு ஹிட் துக்காக வச்சு இருந்தாலும்... justify பன்னமுடிஞ்சது கவிதையோட..நல்லா இருக்கு :))

    ReplyDelete
  61. ////
    ஆனந்தி.. said... [Reply to comment]

    தலைப்பு பார்த்து திட்டலாம் னு தான் வந்தேன்..பட் கவிதை அருமை...பட் தலைப்பு ஹிட் துக்காக வச்சு இருந்தாலும்... justify பன்னமுடிஞ்சது கவிதையோட..நல்லா இருக்கு :))
    ////


    கவிதை வீதியில் மற்றவர் முகம் சுளிக்கூடிய பதிவு ஏதும் வராது தோழி...

    ReplyDelete
  62. திரிலிங்காக இருக்கு.தலைப்பு

    ReplyDelete
  63. wow!gud one excellent

    ReplyDelete
  64. ஒவ்வொரு வரிவரியாய் அத்தனையும் வலிகள்..வென்று விட்டீர்கள் கவிஞரே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!