நான் சின்னதாய் கவலையுருகையில்
அவள் கண்களில் நீர் சுரந்தது...
அவள் கண்களில் நீர் சுரந்தது...
நான் தவறி விழுகையிலே
அவள் படபடக்கிறாள்...
அவள் படபடக்கிறாள்...
என் மூச்சுக்காற்றுகள் குளிர்கையில்
அதை சூடேற்ற அவள் படும் பாடு
நேரடியாகவே உணர்கிறேன்...
என் பிறந்த நாட்களிலும்...
நான் பாராட்டப் படுகையிலும்...
என்னை விடவும் மகிழ்வது அவளே
இங்கே
உடல்கள் வேறுவேறுதான்
உயிர் மட்டும் ஒன்றோ?
நான் ஓடியாட அவள் ஏன் சுவாசிக்கிறாள்...
அவள் விழிகளிலும் மொழிகளிலும்
என் கனவுகள் மட்டுமே...
அதை சூடேற்ற அவள் படும் பாடு
நேரடியாகவே உணர்கிறேன்...
என் பிறந்த நாட்களிலும்...
நான் பாராட்டப் படுகையிலும்...
என்னை விடவும் மகிழ்வது அவளே
இங்கே
உடல்கள் வேறுவேறுதான்
உயிர் மட்டும் ஒன்றோ?
நான் ஓடியாட அவள் ஏன் சுவாசிக்கிறாள்...
அவள் விழிகளிலும் மொழிகளிலும்
என் கனவுகள் மட்டுமே...
மனைவியாய்
என்னை மகிழ்வித்து விட்டு
அவள் அயர்ந்துப் போகையில்
என் நுனி விரல்களால் வருடிக்கொடுத்து
மெய் சிலிர்க்கும் என் எண்ணத்திற்குள்
ஒரு விண்ணப்பம் எழுகிறது...
மறு ஜென்மத்தில் நாங்கள்
இடம்மாறி பிறக்கவேண்டும்
அவள் தாயாய்...
நான் மகனாய்...
என்னை மகிழ்வித்து விட்டு
அவள் அயர்ந்துப் போகையில்
என் நுனி விரல்களால் வருடிக்கொடுத்து
மெய் சிலிர்க்கும் என் எண்ணத்திற்குள்
ஒரு விண்ணப்பம் எழுகிறது...
மறு ஜென்மத்தில் நாங்கள்
இடம்மாறி பிறக்கவேண்டும்
அவள் தாயாய்...
நான் மகனாய்...
அன்பான வாசகர்களுக்கு, மற்றும் பதிவுலக நண்பர்களுக்கு
இந்த கவிதை தங்களை தங்கள் மனதை கவர்ந்திருந்தால் மட்டும்
பின்னூட்டம் இடுங்கள்...
இந்த கவிதை தங்களை தங்கள் மனதை கவர்ந்திருந்தால் மட்டும்
பின்னூட்டம் இடுங்கள்...
அவள் தாயாய்...
ReplyDeleteநான் மகனாய்... --- அருமையான வேண்டுகோள்.
தமிழ்மணத்தை எங்கே ஒளித்து வைத்துள்ளீர்கள்..
ReplyDeleteஇந்த ஜென்மத்தில் பகிர்ந்திட முடியாத,இன்ப துன்பங்களை அடுத்த ஜென்மத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் மாறிப் பிறந்து அனுபவிக்க வேண்டும், எனும் நல்ல மனத்தின் வெளிப்பாடாய் கவிதை உள்ளது.
ReplyDeleteமனைவி மீது எவ்வளவு காதல்...
ReplyDeleteசிலிர்க்க வைக்கிறது தங்கள் கவிதை..
நன்றாக எழுதி உள்ளீர்கள்.
ReplyDelete>>என் பிறந்த நாட்களிலும்...
ReplyDeleteநான் பாராட்டப் படுகையிலும்...
என்னை விடவும் மகிழ்வது அவளே
m m சரி சரி
ம் அருமை பாராட்டுக்கள்...
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை சௌந்தர்!
ReplyDeleteநன்றாக இருக்கிறது கவிதை நடை.....
ReplyDeleteமறு ஜென்மத்தில் நாங்கள்
ReplyDeleteஇடம்மாறி பிறக்கவேண்டும்//
நனவாக வாழ்த்துக்கள்.
நண்பா நீங்கள் போதும் கவிதையும் அழகு அதைவிட அழகு நீங்கள் பதிவில் சேர்க்கும் படங்கள் பிரமாதம்.
ReplyDeleteஉங்கள் கவிதையை களவாடி பயன்படுத்திக்கொள்ளலாம் போலிருக்கிறது. என்ன செய்வது எல்லோருக்கும் கவிதை எழுதும் திறன் வாய்ப்பதில்லையே?
ReplyDelete//அவள் தாயாய்...
ReplyDeleteநான் மகனாய்...///
அசத்தல் கவிதை மக்கா....
//இங்கே
ReplyDeleteஉடல்கள் வேறுவேறுதான்
உயிர் மட்டும் ஒன்றோ?///
இந்த வரிகள் காதலுக்கு வலு.....
உணர்வுபூர்வமான கவிதை நண்பா......... !
ReplyDeleteஉண்மையில் முதல் சில பத்திகள் அம்மான்னு கடைசில முடிப்பீங்க அப்படின்னு நினைச்சேன்! ஆனா கடைசில மனைவின்னு முடிச்சு , அப்புறம் அடுத்த பிறப்புள அம்மாவா வர வேண்டும்னு கேட்டது நல்லா இருந்துச்சு அண்ணா :-)
ReplyDeletewhat a lines !!!!
ReplyDeleteவேண்டுகோள் நனவாக வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
ReplyDeleteகருத்தெல்லாம் சொல்றீங்க...
அருமையான வேண்டுகளுடனான கவிதை பாராட்டுக்கள்
ReplyDeleteரைட்டு!
ReplyDeleteரையிட்டு லெப்டு போட இங்க என்ன ராணுவப் பயிற்சியா நடக்குது விக்கி??
ReplyDelete//என் பிறந்த நாட்களிலும்...
ReplyDeleteநான் பாராட்டப் படுகையிலும்...
என்னை விடவும் மகிழ்வது அவளே//
பெண்களின் இயல்பை அழகாய் படம்பிடித்து காட்டிவிட்டீர்கள் :)
http://karadipommai.blogspot.com/
அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteநிஜமாகவே பாராட்ட வார்த்தைகளில்லை. வெகு அழகாய் கவிதை வடிவில் மனைவியின் மாட்சி சொன்ன விதம் மிக மிக அருமை.
ReplyDeleteநிஜமாக மெய்சிலிர்த்து விட்டது நண்பா!!!!!!!!!!!!
ReplyDeleteஅதுவும் இறுதி வரிகள் பிரமாதம்
//மறு ஜென்மத்தில் நாங்கள்
ReplyDeleteஇடம்மாறி பிறக்கவேண்டும்//
இத்துடன் நிறுத்தியிருப்பீர்கள் என்று நினைத்தேன்.
இதில் ஒரு சுகம்.
//அவள் தாயாய்...
நான் மகனாய்...//
இதில் ஒரு சொர்க்கம். அழகு.
மனத்தைக் கவரவில்லை. மனத்தின் ஆழத்தில் ஒரு ஒரு இதமானடொரு பேரலையை உண்டாக்கி விட்டது.