11 August, 2011

அவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்...!



எலிக்குப் பயந்து ஓடி புலியிடம் சிக்கிய கதையாகி விட்டது இந்தியர்களின் நிலைமை. வெள்ளையர்களிடமிருந்து கஷ்டப்பட்டு சுதந்திரம் அடைந்துவிட்டது நமது நாடு. ஆனால் இன்னும் ஊழல் கொள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.

1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவை அதிகம் ஆட்டிப் படைத்த 10 பயங்கரமான ஊழல்கள் குறித்த ஒரு பார்வை...

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

ஊழல்களுக்கெல்லாம் தாய் என்று போற்றுதலைப் பெற்றுள்ளது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இந்த ஊழல் இதுவரை 2 மத்திய அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துள்ளது. நாட்டின் விவிஐபிக்களை சிறையில் தள்ளியுள்ளது.

 முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தனது பதவிக் காலத்தில் 2ஜி உரிமத்தை விதிமுறைகளை மீறி அடிமாட்டு விலைக்கு வழங்கினார், இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது சிஏஜி எனப்படும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம். அதன் பிறகு நடந்தேறிய சம்பங்கள் உலகம் அறிந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தால் பதவி விலகிய ஆ.ராசா, அவரது உதவியாளர் சண்டோலியா, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் பால்வா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.

லேட்டஸ்டாக தயாநிதி மாறனின் பதவியையும் இந்த 2ஜி ஊழல் பறித்ததது.

2. போலி முத்திரைத்தாள் மோசடி
அப்துல் கரீம் தெல்கி என்பவர் நாசிக்கில் பணம் மற்றும் முத்திரைத்தாள் அடிக்கும் இடத்தில் உள்ள ஊழியர்களை கையில் வைத்துக் கொண்டு போலியாக முத்திரைத்தாள் தயாரித்து அதை அரசு நிறுவனங்களுக்கே விற்பனையும் செய்து நாட்டையே அதிர வைத்தார்.

சுமார் 12 மாநிலங்களில் ரூ. 43,000 கோடிக்கு முத்திரைத்தாள் விற்கப்பட்ட தகவல் வெளியாகி அனைவரையும் அயர வைத்தார் தெல்கி.

இந்த வழக்கில் தெல்கிக்கு ரூ. 100 கோடி அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

3. டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல்

2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு நிலவிய மெகா மற்றும் மகா குழப்பங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உலக அளவில் நம்மைப் பார்த்து பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு போட்டிக்கான ஏற்பாடுகளை முடிப்பதில் பெரும் காலதாமதம் செய்தனர்.

புத்தம் புதிதாக கட்டிய பாலம் உடைந்தது. சர்வேதச வீரர்களுக்காக கட்டிய குடியிருப்புகள் தங்கும் நிலையில் இல்லாமல் போனது. அறைகளுக்குள் பாம்பு வந்தது. உணவு சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இந்தியர்களை தலை குனிய வைத்து விட்டது.

பின்னர் நடந்த காமன்வெல்த் போட்டிகள் சிறப்பாக நடந்தேறின என்றாலும், சுரேஷ் கல்மாடியும், அவரது குழுவினரும் செய்த மிகப் பெரிய ஊழல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடந்தது.

காமன்வெல்த் ஜோதி ஓட்டம், விளையாட்டு சாதனங்கள் வாங்கியது, கட்டுமானப் பணி என பல்வேறு பணிகளில் பெருமளவில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்து நாடே அதிர்ந்தது. இதில் ரூ. 6,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு இதைவிட 10 பத்து மடங்கு அதிகம் என்கிறார்கள்.

இந்த போட்டிகளை நடத்தியதால் உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம்.

4. சத்யம் மோசடி

சத்யம் நிறுவன மோசடி தான் கார்ப்பரேட் உலகில் நடந்துள்ள மிகப் பெரிய மோசடியாகும். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு ரூ. 14,000 கோடியை சுருட்டி விட்டு, அதை ஹாயாக ஒப்புக் கொள்ளவும் செய்தார்.

தனது நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்களை வைத்துக் கொண்டு 53 ஆயிரம் பேர் பணி புரிவதாக பொய்க் கணக்கு காண்பித்தார். நிறுவனத்தின் வருவாயையும் பொய்யாகவே காண்பித்து வந்தார்.

சத்யம் நிறுவனமும் இப்போது மகிந்திரா நிறுவனத்திடம் போய் விட்டது. டெக் மகிந்திராவாக புது அவதாரத்துடன் அது நடை போட்டு வருகிறது.

5. பெல்லாரி சுரங்க மோசடி

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் சுரங்கப் பணிகளுக்கு பெயர் போனது. தற்போது அது சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளது.

பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களால் நடத்தப்பட்ட சட்ட விரோதா சுரங்கத் தொழிலால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஊழலில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் சிக்கினார். அவரது குடும்பமே சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியது. அவர் தவிர குமாரசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த சட்டவிரோத தொழிலில் உள்ள தொடர்புகளை லோக் ஆயுக்தா புட்டுப் புட்டு
வைத்துள்ளது.

கர்நாடக அரசியலில் பெரும் புயலையும், பாஜகவில் பெரும் ஓட்டையையும் போட்டு விட்ட இந்த ஊழல் புகாரில் சிக்கிய எதியூரப்பா பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

6. மாட்டுத்தீவன ஊழல்

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ரூ. 900 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதையடுத்து அவர் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

7. ஆதர்ஷ் ஊழல்

மும்பையில் கார்கில் போரில் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்காக கட்டப்பட்ட குடியிருப்பு ஆதர்ஷ். 6 அடுக்கு மாடியாக கட்டத் திட்டமிட்டு இறுதியில் 31 மாடி கட்டிடமானது. இதில் விந்தை என்னவென்றால் இந்த குடியிருப்பில் 40 சதவீத வீடுகள் ராணுவ வீரர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டது தான்.

ஏற்கனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதுமில்லாமல், பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலத்தை ஆக்கிரமித்து அதில் கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். இந்த ஊழல் விவகாரத்தில் சிக்கி அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் அஷோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 95 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

8. போபர்ஸ் ஊழல்

இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கி வாங்கப்பட்டதில் ரூ.1,500 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் விவகாரத்தால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பதவி இழந்து, புதிய பிரதமராக வி.பி.சிங் பதவி ஏற்றார்.

இந்த விவகாரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட வின்சத்தாவும், இத்தாலிய தொழில் அதிபர் ஒட்டாவா குவாத்ரோச்சியும் ஏறத்தாழ ரூ.64 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. தொழில் அதிபர் குவாத்ரோச்சி ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர். இநத நிமிடம் வரை குவாத்ரோச்சியின் நிழலைக் கூட தொட முடியவில்லை சிபிஐயால். கடைசியில் குவாத்ரோச்சியை வழக்கிலிருந்தே விடுவிக்கும் நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டு விட்டது.

9. யூடிஐ மோசடி

யூடிஐ மோசடியில் முன்னாள் யூடிஐ சேர்மன் பி.எஸ். சுப்பிரமணியம் மற்றும் 2 செயற்குழு தலைவர்கள் எம்.எம். கபூர், எஸ்.கே. பாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யூடிஐ கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து சிறிது காலத்திற்கு சைபர்ஸ்பேஸின் 40 ஆயிரம் பங்குகளை ரூ. 3.33 கோடி கொடுத்து ராகேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கியது. அந்த பங்குகளுக்கு கிராக்கி இல்லாத பொழுது வேண்டும் என்றே அதிக விலை கொடுத்து வாங்கியது. இதனால் பங்குகளின் விலை உயர்ந்தது.

அந்த 4 பேரின் சதியால் ரூ. 32 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று சிபிஐ தெரிவித்தது. சைபர்ஸ்பேஸ் பங்குள் விற்பனையை ஊக்குவிக்க அதிகாரிகளுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர்ஸ்பேஸ் இன்போசிஸ் விளம்பரதாரரான அரவிந்த் ஜோஹாரி கைது செய்யப்பட்டார். இந்த மோசடி செய்ததற்காக அவருக்கு நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.18 கோடி கிடைத்துள்ளது.

10. ஹர்ஷத் மேத்தா


இந்திய பங்குச்சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா. அவர் கடந்த 1992-ம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் விலை திடீர் என்று உயரக் காரணமானவர். அவர் வங்கித் திட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பல வங்கிகளில் கடன் வாங்கி பல்வேறு பிரிவுகளின் பங்குகளை வாங்கிக் குவித்து அவற்றின் விலையேற்றத்தி்ற்கு காரணமானார்.

அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, முதலீட்டாளர்களைக் கவர்ந்தார். அவரது சதித் தி்ட்டம் கண்டுபிடிக்கப்பட்டபோது வங்கிகள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டன. இதனால் பங்குச் சந்தை நிலைகுலைந்தது. அவர் மீது 72 குற்றங்கள் சுமத்தப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. (நன்றி தட்ஸ்தமிழ்)

இந்நிலையில் மேத்தா கடந்த 2002-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். அவருக்கு எதிரான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

"முத்திரை ஊழல்"

இந்த பத்து ஊழல்களெல்லாம் நாட்டின் பல்வேறு சமுதாயத்தினர் செய்த ஊழல்கள். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு சம்பவம் நடந்ததை நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அது நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்குச் சாதகமாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு கோடி கோடியாக கொடுக்கப்பட்ட பணம்தான்.

2008ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது திடீரென பாஜக எம்.பி அசோக் அர்கால் உள்ளிட்ட மூன்று எம்.பிக்கள் பெரிய பெரிய பைகளில் பணத்தைக் கொண்டு வந்து சபாநாயகர் இருக்கை முன்பு கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தங்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியதைப் பார்த்து நாடே அதிர்ந்தது. பெருமை மிகுந்த லோக்சபாவில் கோடி கோடியாக பணத்தைக் கொட்டிய எம்.பிக்களால் நாடே அன்று வெட்கித் தலை குணிந்தது.

மற்ற ஊழல்களுக்கு சற்றும் குறையாதது இந்த எம்.பிக்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் என்பதில் சந்தேகமில்லை. 

படிப்பதற்க்கே தலைசுற்றுகிறதே இவ்வளவும் தெரிந்துக்கொண்டு நாம் சும்மாதான் இருக்கிறோம். ஒரு சில தரம் கெட்ட அரசியல்வாதிகலால் நம் இந்திய மானம் கப்பலேறுகிறது. இந்த ஊழல் ஒழிந்து நாடு என்று நல்ல நிலைக்கு நிறும்பும் என்ற ஏக்கத்தோடே கொண்டாட வேண்டியிருக்கிறது ஒல்வோறு சுதந்தரத்தையும்.....

ஜெய்ஹிந்த்...

38 comments:

  1. அஹிம்சை போதித்த பூமி இது அதான் இன்னும் நாம் எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்

    இம்சை செய்ய ஆரம்பிக்கணும்...

    இல்லாட்டி இன்னும் இந்த மாதிரி ஆயிரம் பதிவு நீங்க போட்ட கூட லிஸ்ட் முடியாது...

    ReplyDelete
  2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    ....!!!

    ReplyDelete
  3. நீங்கெல்லாம் உருப்படவே மாட்டீங்கடா நாதாரிகளா....

    ReplyDelete
  4. India is improving......

    India is improving....

    India is imprroving...........

    ReplyDelete
  5. வரப் போற ஊழல் இதை விட பிரம்மாண்டமானதா இருக்கும்.

    ReplyDelete
  6. அடப்பாவிங்களா......... யாராவது 108 க்கு போன் பண்ணுங்கப்பா வர்றவங்க எல்லோரும் மயக்கம் போட்டு விழறாங்க

    ReplyDelete
  7. இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் தான் லீடிங்கில் போய்கிட்டு இருக்கு போல... இப்படி ஒரு பெருமை, நம்ம தமிழகத்து வாங்கி தந்தவர்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  8. மாப்ள உங்க வருத்தம் புரிகிறது...அடக்கம் செய்யப்படும் ஜனநாயகம்!

    ReplyDelete
  9. நெஞ்சம் கொதிக்கும் செய்தி
    செய்த வேலைக்கு வந்த காசுக்கு
    வரி கட்டினா
    அத கூசாம அடிக்கும் இந்த
    கூனர்களை .......
    கூறு போட்டு வெட்ட வேண்டும்.

    ReplyDelete
  10. இதில் ISRO அலைக்கற்றைப் பற்றிய தகவல்கள் - நேரடியாக பிரதமரின் அலுவலகமே குற்றம் சாட்டப்பட்டது - சிறிது காலமாக வெளிவரவில்லையே. ஏன் அதைப்பற்றி எதிர்கட்சிகளும் ஊடகங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. அது ஏறக்குறைய 2ஜி அலைவரிசை அளவு பேசப்பட்டது. ஒருவேளை ISRO தணிக்கைக்கு (CAG-யின்) உட்பட்டதல்ல என்பதால் முழு விவரங்கள் கிட்டவில்லையோ?

    இத்தனை ஊழல்கள் அடுக்கியுள்ளீர்களே, இதுவரை யாரையாவது தண்டிக்க முடிந்ததா?

    அது தான் இதில் கவலை தரும் நிலை!!!

    ReplyDelete
  11. சுதந்திர தினத்தில் சிந்திக்க வேண்டிய கருத்து.

    ReplyDelete
  12. அட இதேலேயும் நாம தான் நம்பர் ஒண்ணா?

    ReplyDelete
  13. மாட்டுத்தீவன ஊழல்// இதில கூடவா ஊழல் செயுராணுக )

    ReplyDelete
  14. நமது நாட்டு சட்டம் அப்படீங்க... தப்பு செய்றவங்களுக்கு கடுமையான தண்டனை இருந்தால மட்டுமே... ஒரு நாதாரியும் தப்பு பண்ண மாட்டானுக்கு .. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  15. நீங்க முதலிடத்தில் வைத்துள்ள ஊழல் டைம் பத்திரிக்கையில் உலகின் டாப் டென் ஊழலில் கூட இடம்பிடித்து இந்தியாவின் பெயரை காப்பற்றியது

    ReplyDelete
  16. ஆ.ராசா-ஸ்வீட் எடு கொண்டாடு நான் தான் நெ.1

    ReplyDelete
  17. பாத்தீங்களா தமிழந்தான்யா இதுல முதலாவதாய் இருக்கிறானையா ..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  18. அடங்கொய்யால எத்தனை ஊழல்கள் இதுவே பெரிய பட்டியல் போல

    ReplyDelete
  19. இந்த உழல் கூத்து எப்பத்தான் முடிய போகுதோ தெரியல..

    ReplyDelete
  20. innum veli varaatha no.1 oozhal

    http://suryajeeva.blogspot.com/2011/06/blog-post_9511.html

    ReplyDelete
  21. சி பி ஐ யில வேலை பாக்க வேண்டியவரு இங்க ப்ளாக் எழுதிட்டு இருக்காரு...

    ReplyDelete
  22. எலிக்குப் பயந்து ஓடி புலியிடம் சிக்கிய கதையாகி விட்டது இந்தியர்களின் நிலைமை.

    உண்மை நண்பா.

    ReplyDelete
  23. தினமணியில் ஒரு கேலிச்சித்திரம் கூட வந்திருந்தது.

    அன்று வெள்ளையனே வெளியேறு என்றார்கள்

    இன்று கொள்ளையனே வெளியேறு என்கிறார்கள்.

    ReplyDelete
  24. கேவலமான பெருமை, பேர் நமக்கு...

    ReplyDelete
  25. எத்தனை வகையான ஊழல்கள்

    இன்னும் எத்தனையோ ?????????????

    ReplyDelete
  26. அட! இப்பத்தான் இந்திய ராணுவம் கொங்கோவில் புரிந்த பாலியல் வன்முறையில் இந்திய ஜாடையில் அங்கே குழந்தைகள் பிறந்ததாய் விகடன் கட்டுரையில் விசனப்பட்டிருந்தார்கள். இங்கே வந்தால் ஊழல். அடுத்து நான் காத்திருப்பது ஈழத்தின் இனப்படுகொலையில் இந்தியா என்கிற தலைப்புக்குத்தான்.

    ReplyDelete
  27. பெருமைப்படவேண்டிய தர வரிசை...நாளுக்கு நாள் நம் நாடு முன்னேறி வருவதை காட்டுகிறது என்று மனதை தேற்றிக்கொண்டேன்...
    A Blessing In Disguise...

    ReplyDelete
  28. பட்டியல் நீளுமே தவிர குறையாது
    கவலற்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. ஊழல் வழக்குகள் தொகுப்பு அருமை.

    ReplyDelete
  30. இந்தியா வேகமாக வளர்கிறது
    ஊழலில்
    இன்றைக்கு தேவையான பதிவு
    நண்பரே

    ReplyDelete
  31. சுதந்திர இந்திய வரலாற்றில் 2010 ஆம் ஆண்டு நிச்சயமாக அழிக்க முடியாத ஊழல் கறை அதிகம் படிந்த ஆண்டாக இருக்கும்,ஏனெனில் இவ்வாண்டில் தான் வலது மற்றும் இடது சாரி கட்சிகள்,மத சார்பு மற்றும் மத சார்பற்ற கட்சிகள்,தேசிய மற்றும் மாநில ஆளும் கட்சிகள்,எதிர் கட்சி மற்றும் சுயெட்சைகள் என,கட்சி பாகு பாடின்றி கொள்ளை அடித்தனர்.

    கறவை மாடு போல இந்தியாவும் கறந்து கொண்டுதான் இருந்தது என்ன செய்ய ?

    நம்ம தலை விதி அவ்வளவுதான்.

    நல்லதொரு அலசல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. ஒரு பெரிய தொட்டி கட்டி அதில் பெட்ரோலை நிரப்பி, TITANIC கப்பல் மாதிரி ஆனால் வசதிகள் ஏதும் இல்லாமல் வடிவமைத்து அதின் ஊழல் வாதிகள் எல்லாரையும் ஏற்றிவிட்டு அனுப்பிவிட வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து பற்றவைத்து விட்டு , உலகமே அந்த அக்னியை ரசிக்க வேண்டும். அது தான் குறைந்த பட்ச தண்டனை.
    மகேஷ்........ - Makeskavithai.blogspot.com

    ReplyDelete
  34. பெட்ரோல் வீணாகும்னு கூட சிலர் வருத்தப்படலாம் அனால் அதுவே நமது கடைசி நஷ்டமாக இருக்கும்.
    - உங்கள் மகேஷ் .Makeskavithai.blogspot.com

    ReplyDelete
  35. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!