19 August, 2011

நித்தியானந்தா மீது செகஸ் புகார்கள் சென்னையில் சிபிசிடி போலீஸார் அதிரடி விசாரணை

சாமியார் நித்தியானந்தாவிடம் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து திடீர் விசாரணை நடத்தப்பட்டது.

நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். ஒரு மாத கால தலைமறைவுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து நித்தியானந்தாவை கர்நாடக சிஐடி போலீஸார் கைது செய்து பெங்களூர் கொண்டு வந்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடப்பட்டார். தற்போது நித்தியானந்தா மீதான வழக்குகள் ராம்நகர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நித்தியானந்தா மீது இந்து மக்கள் கட்சி, அவரது முன்னாள் சீடர்கள் சென்னை மத்திய குற்றப் பிரிவு, பாண்டி பஜார் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். அதில் இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக இந்து மக்கள் கட்சியும், தங்களை மிரட்டுவதாக முன்னாள் சீடர்களும் கூறியுள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அவர்களின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தாவை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். இதையடுத்து நேற்று கிண்டியில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு வக்கீல்களுடன் வந்தார் நித்தியானந்தா.

அங்கு பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் நித்தியானந்தா மீதான புகார்கள் குறித்து போலீஸார் கேட்டதாக தெரிகிறது.

திருவண்ணாமலையில் சாமி தரிசனம்

இதற்கிடையே, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மேலாளர் இந்திரஜித் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இதற்காக நித்யானந்தாவுக்கு அழைப்பு அனுப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நித்யானந்தா திருமணத்தில் கலந்து கொண்டார். நித்யானந்தா வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும், அதிகாலை நேரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றும் அவர் சாமி கும்பிட்டார்.

19 comments:

  1. சாமிக்கு இது
    தேவதானா?...........இப்பெல்லாம்
    கலக்கல் காமடியே இவரோடயாத்தான் இருக்குங்க...
    நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. இந்த பொறம்போக்கை எல்லாம் வெளியில ஜாலியா சுத்த விட்டுருங்க, ஏதோ அந்த வயசான மனுஷன் உண்ணா விரதம் இருந்தா மட்டும் உடனே தூக்கி திகார் ஜெயில்ல போட்டுருங்க என்னடா நியாயம் உங்களோடது

    ஒரு வேலை இது தான் பண சாரி ஜன நாயகமோ... வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete
  3. சாமி கொஞ்சம் விட்டு விட்டு காத்து வாங்கிருக்கார். ... அதான் போலீஸும் விட்டு விட்டு பிடிக்குது...

    ReplyDelete
  4. வாழ்கிறார்கள்...
    ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  5. விசாரணையும் வீடியோவில் பதியப்பட்டதா?எப்படி ஒத்துக்கிட்டார்?

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. ஹி.ஹி.ஹி.ஹி....கதவைத்திற காற்று வரட்டும்.....ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  8. அவருக்கு வீடியோ அலர்ஜி போயிடிச்சு போலிருக்கே..

    ReplyDelete
  9. மீள்பதிவோன்னு நினைச்சேன் முதல்ல...கலக்குங்க...

    ReplyDelete
  10. பாவம் ரஞ்சிதாவையும் விசாரிக்குறாங்களாம்;-((

    ReplyDelete
  11. என்னத்த விசாரிச்சு,என்னத்த கண்டு பிடிச்சு...!

    ReplyDelete
  12. என்னதான் செய்தாலும் தண்டனை மட்டும் கிடைக்கப்போவதில்லை. அப்புறம் என்னத்துக்கு?

    ReplyDelete
  13. ஐயோ! பாவம் சாமியாரு!
    ஆடிய ஆட்டமென்ன
    பாடிய பாட்டுமென்ன
    ஓடிய ஓட்டமென்ன
    வாடிய வாட்டமென்ன

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. அன்புள்ள அய்யா திரு.சௌந்தர் அவர்களுக்கு,
    வணக்கம். எத்தனை பெரியார் வந்தென்ன?
    இத்தனை நித்தி ஆனந்தமாகத்தானே உலா வருகிறார்...! சாமி இருந்தால் நிச்சயம் நித்தியானந்தாவைக் கேள்வி கேட்குமா? இல்லையா?
    ‘ யாரு அம்மாளா பேசுவது?
    அம்மாள் எந்தக் காலத்திலடா போசினா...?’
    நல்ல கருத்துச் சொன்னதற்கு நன்றி.

    எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!