09 September, 2011

இப்படி செய்தால் இந்தியாவில் பள்ளிகளுக்கு பற்றாகுறையே இருக்காது..?


பீகாரில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஊழல் பணத்தில் கட்டிய பங்களாவை அரசு பறிமுதல் செய்து, அதை அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒதுக்கியது. பீகாரில் கடந்த 2007-ம் ஆண்டில் சிவ்சங்கர் வர்மா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது ஊழல் புகார்கள் வந்தன.

சிறப்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தி, 9 கிலோ தங்கம், 1600 அமெரிக்க டாலர்கள் மற்றும் பல சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

வர்மா வருமானத்தை மீறி ரூ.1.43 கோடிக்கு சொத்துகள் குவித்ததாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் சிறுபாசனத் துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.

இதன்பின், 2009ல் பீகார் சிறப்பு நீதிமன்றங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதே, குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிககப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ‘ஊழல் அதிகாரிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்’ என்று நிதிஷ்குமார் அறிவித்திருந்தார்.

அதே போல், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார் நிதிஷ்குமார். முதல் நடவடிக்கையாக, பாட்னாவில் பெய்லி சாலையில் வர்மாவுக்கு சொந்தமான பங்களாவை அரசு பறிமுதல் செய்தது.

தனது 3 மாடி கட்டிடத்தை பறிமுதல் செய்ததை எதிர்த்து வர்மா தாக்கல் செய்த மனுவும் ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.   இந்நிலையில், அந்த பங்களாவை ருக்கன்புரா முசாரியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு ஒதுக்க அமைச்சரவையில் கடந்த 4ம் தேதி முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, புதிய கட்டிடத்திற்கு பள்ளி இடம் மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் ஏராளமான தலித் மாணவர்கள் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாளாக குடிசைப் பகுதியில் இயங்கி வந்த பள்ளி, புதிய கட்டிடத்திற்கு மாறியதில் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பீகாரில் ஊழல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிக் கூடமாக மாறியது இதுவே முதல் முறை. இதே போல், இன்னும் 16 ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவையும் வழக்குகள் விசாரணைக்கு பின் அரசுக்கு பயன்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்படி இந்தியாவில் இருக்கும் ஊழல் வாதிகளின் வீடுகளையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவற்றை பள்ளிகளாகவும் ஆனாதை விடுதிகளாகவும், காப்பகங்களாகவும் மாற்ற வேண்டும் இதுதான் அவர்களுக்கு உண்மையான தண்டனை..

ஊழல் செய்த எவரின் பணத்தை நாம் இதுவரை மீட்டிருக்கிறோம்.

நிதிஷ்குமார் போன்று அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்றினால் ஊழல்கூட ஒழிந்துவிடும்தானே...

31 comments:

  1. அப்படி இந்தியாவில் இருக்கும் ஊழல் வாதிகளின் வீடுகளையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவற்றை பள்ளிகளாகவும் ஆனாதை விடுதிகளாகவும், காப்பகங்களாகவும் மாற்ற வேண்டும் இதுதான் அவர்களுக்கு உண்மையான தண்டனை..//

    சபாஷ் சரியான தீர்ப்பு.....

    ReplyDelete
  2. ஆஹா...இதுவல்லவோ உண்மையான, மக்களுக்காக நடத்தப்படும் அரசு. நிதிஷ்குமாரை மற்ற முதலமைச்சர்களும் ரோபோட் பிரதமரும் பின்பற்றவேண்டுமென்பதே என் அவா.

    ReplyDelete
  3. உண்மை! உண்மை! உண்மை!!
    உடனடி நடவடிக்கைத் தேவை
    அதுவும் போர்க்கால அடிப்படையில்
    செய்வார்களா?

    ஓட்டோ ஓட்டு

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. //பீகாரில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஊழல் பணத்தில் கட்டிய பங்களாவை அரசு பறிமுதல் செய்து, அதை அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒதுக்கியது.///

    மிகவும் நல்ல விடயம்.

    ReplyDelete
  5. ஓணம் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பீகார் மாநில முதல்வரை போன்றவர்கள் இந்தியாவுக்கு பிரதமரானால் நல்லது.

    ReplyDelete
  7. சமச்சீர் கல்வியை பின்னாடி இருந்து கொடுக்கிறாங்க போலிருக்கு... நம்மாளுங்க புக்கோட நிறுத்தி கிட்டாங்க..

    ReplyDelete
  8. கடைசியா கேட்டீங்களே அது யாரப்பாத்து கேக்க வேண்டியது.....வேலிதான் பயிரை மேய்ந்து கொண்டு இருக்கிறது! பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள!

    ReplyDelete
  9. நம்ம ஆளுங்க பண்றத பாத்தா பள்ளிகளை இருக்காது

    ReplyDelete
  10. //நிதிஷ்குமார் போன்று அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்றினால் ஊழல்கூட ஒழிந்துவிடும்தானே...
    //

    ??????????????????????????????

    ReplyDelete
  11. அப்படி இந்தியாவில் இருக்கும் ஊழல் வாதிகளின் வீடுகளையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவற்றை பள்ளிகளாகவும் ஆனாதை விடுதிகளாகவும், காப்பகங்களாகவும் மாற்ற வேண்டும் இதுதான் அவர்களுக்கு உண்மையான தண்டனை..

    நல்ல சிந்தனை நண்பரே
    போற்றுவோம்

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு..
    பாராட்டுகள்..

    ReplyDelete
  13. //நிதிஷ்குமார் போன்று அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்றினால் ஊழல்கூட ஒழிந்துவிடும்தானே... //

    வாழ்க நித்திஷின் வழிமுறை

    ReplyDelete
  14. நன்றி
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  15. அப்படி செய்தா குறைவிருக்காதா?

    ReplyDelete
  16. மோடிக்கு அடுத்ததாக சிரப்பாக செயல்படும் முதல்வர் நிதீஷ்குமார். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. ரைட்டு த்தான்

    ReplyDelete
  18. ஹா ஹா செம ஐடியா? நிதிஷ் உண்மையிலேயே கிரேட். இங்கே அந்த மாதிரி செய்தால், காலேஜ் கூட தொடங்கலாம்.

    ReplyDelete
  19. நல்ல நடவடிக்கை ...

    ReplyDelete
  20. செய்தால் நல்லதுதான்!

    ReplyDelete
  21. இதே மாதிரி எல்லா மாநிலத்திலேயும் சட்டம் கொண்டு வந்தால் இந்தியா உருப்பட ஆரம்பிச்சிடும்.

    ReplyDelete
  22. மனமகிழ்ச்சி தரும் தகவலை பதிவாகத்
    தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    த.ம 14

    ReplyDelete
  23. அனல் பதிவு சௌந்தர்..

    சூப்பர்

    ReplyDelete
  24. நல்ல செயல்தான்.வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால் அங்கு படிக்கும் மாண்வர்கள் மனதில் ஊழல் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்குமே....

    ReplyDelete
  25. ஆகா ஆகா - இப்படியும் வழி இருக்கிறதா ? நிதீஷ் குமார் வாழ்க - தகவல் பகிர்வினிற்கு நன்றி சௌந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  26. சிறப்பான செயல்பாட்டினை அருமையாய்ப் பதிவிட்ட சௌந்தருக்கு நன்றி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!