12 October, 2011

போலிகளாகும் நிஜங்கள்...

வெயில் தனிந்த ஒரு
‌கோடைக்கால இரவு...!

யிர்துடித்துக் கொண்டிருந்த மின்சாரம் 
மூச்சை நிறுத்திக் கொண்டது..

வீடெல்லாம் இருட்டு...
வீதியெல்லாம் கருமை...

நிஜம் தந்த இருட்டை யாவரும்
விளக்கு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர்...

தோ... இருட்டில் தான்
மு‌ழுமையாய் முகம் காட்டுகிறது
பிரபஞ்சம்...

விளக்குகள் இல்லாத இரவில்
விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..

சும்மரங்கள் பூக்களையும்சேர்த்து
வண்ணங்களை இழந்து காட்சி அளிக்கிறது..

தென்னையும் பனையும் 
விண்வெளியில் வரைந்த  ஓவியங்களாய்..

ஜாதிகளையும்.. மதங்களையும்..
உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..

வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
இருட்டு ஒன்றினைக்கிறது..

தாம் ஏவாளுக்கு பிறகு
அனைவரும் இருட்டின் உற்பத்திகளே...

லலோரும் விளக்கைத் தேடுகிறார்கள்
வெளிச்சம் பெற..
நான் இருட்டைத் தேடுகிறேன்
மோட்சம் பெற...

ண்ணெய் குடித்து
உயிர் துடிக்கிறது விளக்கு...

ற்போது
போலிகளாயின நிஜங்கள்...

(மீள் பதிவு)

33 comments:

  1. மாப்ள என்னே ஒரு உவமானம்.....அடடடா கலக்கறே கவிஞ்சா!

    ReplyDelete
  2. ரெம்ப கலக்கலான கவிதை
    கோர்த்த வரிகளும்
    சொல்லாக்கமும் அற்புதம்
    கவிஞரே கவிதை ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  3. ஜாதிகளையும்.. மதங்களையும்..
    உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
    அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..
    //

    சூப்பர்!

    ReplyDelete
  4. வேண்டாம் வெளிச்சம் என்றாலும்-
    கவிதை
    வீதியில் விளக்கு நின்றாலும்
    தூண்டா விளக்காம் உம்கவிதை-
    மேலும்
    தூண்டும் எழுத நற்கவிதை
    ஈண்டார் படித்திடுன் புகழ்வாரே-
    மனதில்
    எண்ணி எண்ணி மகிழ்வாரே
    சான்றாம் என்றே இக்கவிதை-
    இங்கே
    சௌந்தர் நீங்கள் தந்தீராம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. கவிஞர் சவுந்தர்...

    கலக்கல்.... கவிதை....

    ReplyDelete
  6. போலிகளாகும் நிஜங்கள் தொடரும் நிழல்கள்

    ReplyDelete
  7. //ஆதாம் ஏவாளுக்கு பிறகு
    அனைவரும் இருட்டின் உற்பத்திகளே...//

    கவி அழகுக்காக சேர்க்கப் பட்டாலும் இந்த வரிகளில் பொய் இருக்கிறது... பிற அனைத்தும் அருமையான சொல்லாடல்..

    ReplyDelete
  8. ரசிக்கும்படியான கவிதை வரிகள், அருமை

    ReplyDelete
  9. அடடா என்ன ஒரு கற்பனை .....கருத்தும் அருமை !

    ReplyDelete
  10. //ஜாதிகளையும்.. மதங்களையும்..
    உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
    அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..//

    அருமையான வரிகள் மாப்ஸ்....

    ReplyDelete
  11. வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
    இருட்டு ஒன்றினைக்கிறது..


    நல்ல கவிதை

    ReplyDelete
  12. உயிர்துடித்துக் கொண்டிருந்த மின்சாரம்
    மூச்சை நிறுத்திக் கொண்டது..
    மூச்சை நிறுத்திக் கொள்ளவில்லை சகா, நிறுத்திட்டாங்க. . .
    இருளில் உங்கள் தேடல் அருமை.......

    ReplyDelete
  13. ஆஹா கலக்கல் கவிதைய்யா வாழ்த்துக்கள்...!!

    ReplyDelete
  14. இருட்டையும் மனிதனையும் வகுத்த விதம் சூப்பர்ப்...!!!

    ReplyDelete
  15. அதோ... இருட்டில் தான்
    மு‌ழுமையாய் முகம் காட்டுகிறது
    பிரபஞ்சம்...
    விளக்குகள் இல்லாத இரவில்
    விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..
    -அருமையான வரிகள். நல்ல கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சௌந்தர் சார்!

    ReplyDelete
  16. கலக்குறீங்க கவிஞரே அருமை

    ReplyDelete
  17. விளக்குகள் இல்லாத இரவில்
    விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்../

    nice..

    ReplyDelete
  18. கலக்குறீங்க பாஸ் சூப்பர்

    ReplyDelete
  19. வரிகள் எளிமை
    படித்திட இனிமை
    கவிதை அருமை...

    ReplyDelete
  20. இருட்டானாலும், இனிய கவிதை.கலக்குங்கள் கவிநரே.

    ReplyDelete
  21. //ஜாதிகளையும்.. மதங்களையும்..
    உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
    அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..
    வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
    இருட்டு ஒன்றினைக்கிறது..//

    படித்த வரிகள் மனதை விட்டுச் செல்ல மறுக்கிறது நண்பரே..

    அருமை.தொடருங்கள்

    ReplyDelete
  22. தோலை கிழித்தால் ரத்தத்தின் நிறம் சிவப்பு போல்
    இருட்டில் மானிடர்கள் அனைவரும் உருவமே என
    சொன்ன உங்கள் கவிதை
    சமூகத்தில் தனிப்பங்கு வகிக்கிறது..
    போலிகள் உண்மையாய் மாறுகையில்
    உண்மைகள் போலியாய் மாறுவதில்
    உள்ள சிந்தனையை அழகுற சொல்லியிருக்கிறீர்கள்..
    அருமையான கவிதை..

    ReplyDelete
  23. இருளை... வெளிச்சம் போட்டு காட்டியிருக்கீர்கள்...மெய்சிலிர்க்க வைத்த கவிதை...

    ReplyDelete
  24. நிலவொளியை முழுதாய் அனுபவிக்கவும், நட்சத்திரங்களைக் காணவும் மின்சாரமில்லா இருளில்தானே முடிகிறது. கிராமத்து வயல்வெளிகளில் மின்மினிப் பூச்சிகளைக் கண்ணுற்ற கணங்கள் நினவிலாடுகின்றன. அழகிய கவிதை.

    ReplyDelete
  25. //ஆதாம் ஏவாளுக்கு பிறகு
    அனைவரும் இருட்டின் உற்பத்திகளே...//

    அழகான கோர்ப்பு...

    ReplyDelete
  26. விளக்குகள் இல்லாத இரவில்
    விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..

    வரிகள் பிடித்திருக்கிறது....

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!