04 November, 2011

இதற்கு மட்டும் தடைவிதிப்பதில்லை காதல்...!

விஜய் நடிக்கும் நண்பன் விமர்சனம் விரைவில்...

 உன் பிரிவு
நான் வாழ்வதற்கு சாத்தியமே....

என்னில் உன் நினைவுகள் 
அதிகம் என்பதால்.....



வலி கொஞ்சம் அதிகம்தான்
இருந்தாலும்....
தடைவிதிப்பதில்லை காதல்

வைத்திருப்பரையே தாக்கும் 
அதிசய ஆயுதம் 
இந்த காதல்...



நீ இல்லாத இரவில்
நிலவுக்கூட எனக்கு 
சூரியன்தான்....!


பூக்களோடு மோதி காயப்பட்டு
தென்றலோடு உரசி உயிர்வலிக்க
மழைகளில் நனைந்து கரைந்துப்போகிறேன்...

காதல் இன்னுமென்னை
என்ன செய்யுமோ...?



நிறைய நாட்கள் 
இந்த உலகில் வாழலாம் 
என்று நினைக்கிறேன்...!

இந்த காதல் விடாது 
போலிருக்கிறதே...?



உன்னைக் கானாமல் திரும்பும் போதெல்லாம்
என் உயிருக்கு தெரியாமல் 
நான் மரணப்பட்டுபோகிறேன்...



எனக்கு மெயிலில் வந்த படங்களுடன்
எனது காதல் கவிதைகள் கைகோர்க்கிறது.....

தங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...!

31 comments:

  1. பூக்களோடு மோதி காயப்பட்டு
    தென்றலோடு உரசி உயிர்வலிக்க
    மழைகளில் நனைந்து கரைந்துப்போகிறேன்...

    -அசத்தல் வரிகள் சௌந்தர் சார்... காதலின் சுகம், வலி எல்லாத்தையும் அருமையாப் பதிவு பண்ணியிருக்கீங்க... நன்று!

    ReplyDelete
  2. அருமையான வரிகள்....

    ReplyDelete
  3. காதலில் கசியும் வரிகள்!

    படங்களுக்கு ஏகப்பொருத்தம்

    ReplyDelete
  4. பார்யா.. நிலா கூட சூரியனாம்?
    பயபுள்ள எங்கேயோ வசமா மாட்டி இருக்கு..

    ReplyDelete
  5. காதல் கவிதை சூப்பர்...

    ReplyDelete
  6. ////வைத்திருப்பரையே தாக்கும்
    அதிசய ஆயுதம்
    இந்த காதல்/////

    அட ஆமாங்க...

    படங்கள் மிக மிக அருமை...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

    ReplyDelete
  7. நீ இல்லாத இரவில்
    நிலவுக்கூட எனக்கு
    சூரியன்தான்....!//

    ஆஹா சூப்பர் வரிகள் [[வலி]]...!!!

    ReplyDelete
  8. படங்களுடன் கூடிய கவிதை சூப்பர்ப் மக்கா...!!!

    ReplyDelete
  9. உணர்வுள்ள காதல் வரிகள்....

    ReplyDelete
  10. உன் பிரிவு
    நான் வாழ்வதற்கு சாத்தியமே....

    என்னில் உன் நினைவுகள்
    அதிகம் என்பதால்.....
    >>>
    உணர்வு பூர்வமான வரிகள். வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  11. அருமை சௌந்தர்
    வார்த்தை ஜாலங்கள்
    மயக்கம் தருகிறது

    ReplyDelete
  12. /////வலி கொஞ்சம் அதிகம்தான்
    இருந்தாலும்....
    தடைவிதிப்பதில்லை காதல்

    வைத்திருப்பரையே தாக்கும்
    அதிசய ஆயுதம்
    இந்த காதல்...
    /////

    அழகு.......

    ReplyDelete
  13. எல்லாமே அருமையான கவிதைகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. காதல் கவிதைகளா? பேஷ் பேஷ்

    ReplyDelete
  15. காதல் கவிதைகள்?! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். வீட்டுல சொல்றேன்

    ReplyDelete
  16. அருமையான படைப்பு தல சூப்பர்

    ReplyDelete
  17. கவிதைகள் அனைத்தும் அருமை... நண்பா...

    ReplyDelete
  18. உன்னைக் கானாமல் திரும்பும் போதெல்லாம்
    என் உயிருக்கு தெரியாமல்
    நான் மரணப்பட்டுபோகிறேன்...

    உண்மையின் தரிசனம்
    உயிருள்ள காதல்க் கவிதை வரிகளாய்
    படங்களும் அருமை !.....
    வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  19. என் உயிருக்கு தெரியாமல்
    நான் மரணப்பட்டுபோகிறேன்...
    என்னமோ ஆச்சு, நல்லாயிருக்கு பாஸ்.

    ReplyDelete
  20. வலி கொஞ்சம் அதிகம்தான்
    இருந்தாலும்....
    தடைவிதிப்பதில்லை காதல்

    வைத்திருப்பரையே தாக்கும்
    அதிசய ஆயுதம்
    இந்த காதல்.../

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. படங்கள் பதிவுக்கு அழகு சேர்க்கின்றன்.

    ReplyDelete
  22. வரிகளும் படங்களும் காதலிக்க வைக்கின்றன !

    ReplyDelete
  23. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  24. நினைவுகளில் நிரந்தர இடம் பிடித்துவிட்டன உங்களின் கவி வரிகள் ..
    சிலது இனிமை.. சிலது வலிமை ..

    வாழ்த்துக்கள் தோழரே ...

    ReplyDelete
  25. நண்பா உண்மையிலேயே கவிதைகள் மிக அருமை. உங்கள் கவிதை அழகோடு போட்டி போட முடியாமல் படங்கள் தோற்று விட்டன.

    ReplyDelete
  26. படங்களுடன் பொருத்தமான கவிதைகள் கலக்கல் நண்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!