29 November, 2011

அதெப்படி... ? பெண்களுக்கு இந்த இரண்டு மட்டும் பிடித்திருக்கிறது...?




நான் சொல்லும்
உண்மையை விட
“பொய்” க்குத்தான் மயங்கி நிற்கிறாய்...!

கலை விட 
இருளில்தான்  உன்
வெட்கங்களை கழட்டி வைக்கிறாய்...!

து எப்படி...!
உனக்கு பொய்யும் இருட்டும் மட்டுமே
பிடித்திருக்கிறது...

ரியென்று சொல் 
என் அன்பே...
 
னக்காக
பொய்யை மட்டுமே வைத்து
கவிதை எழுதுகிறேன்....

கலில் கூட 
இராத்திரி செய்கிறேன்... 

தங்கள் வருகைக்காக பெருமையடைகிறது கவிதை வீதி...

32 comments:

  1. //நான் சொல்லும்
    உண்மையை விட
    “பொய்” க்குத்தான் மயங்கி நிற்கிறாய்...!//

    அதென்னவோ அப்படித்தான் பாஸ்!
    - அப்பிடித்தான் சொல்லிக்கிறாங்க! :-)

    ReplyDelete
  2. உனக்காக
    பொய்யை மட்டுமே வைத்து
    கவிதை எழுதுகிறேன்....
    >>
    உண்மை மட்டும் தெரிஞ்சுதுன்னா பூரிகட்டையால வாங்குவீங்க. ஓக்கேவா சகோ?

    ReplyDelete
  3. //////
    ராஜி said... [Reply to comment]

    உனக்காக
    பொய்யை மட்டுமே வைத்து
    கவிதை எழுதுகிறேன்....
    >>
    உண்மை மட்டும் தெரிஞ்சுதுன்னா பூரிகட்டையால வாங்குவீங்க. ஓக்கேவா சகோ?

    //////////

    பப்ளிக்... பப்ளிக்...

    ReplyDelete
  4. மாப்ள பொய்யை நம்பும் இயல்பை அழகா சொல்லி இருக்கய்யா!

    ReplyDelete
  5. நன்றாகவே உள்ளது. வாழ்த்துகள் . பூரிக்கட்டை அகப்பைக் காம்பும் வரலாம். என் வலைக்கு வரவும் நல்வரவு கூறுகிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com/2011/11/29/40-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/

    ReplyDelete
  6. அருமை

    அருமை

    இரசித்தேன் கவிஞரே...

    ReplyDelete
  7. உண்மைய சொன்னா எவ மதிப்பா... இப்படி அடிச்சு விட்டா தான் நம்புவாங்க...

    ReplyDelete
  8. அருமை சௌந்தர், பகலில் கூட
    இராத்திரி செய்கிறேன்... எப்பிடி ஒரு பொய்.. நீங்க பேசாம அரசியலுக்கு வந்துடலாம் போல இருக்கே

    ReplyDelete
  9. மச்சி, கவிதைன்னாலே போய் தானா? வரிகள் சிம்ப்ளி சூப்பர்ப்.


    நம்ம தளத்தில்:
    அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

    ReplyDelete
  10. //பகலை விட
    இருளில்தான் உன்
    வெட்கங்களை கழட்டி வைக்கிறாய்...!

    செம ரொமான்டிக் நண்பா.

    ReplyDelete
  11. அருமையான் கவிதை “பொய்”யரே.
    (கவிஞரே)

    ReplyDelete
  12. உனக்காக
    பொய்யை மட்டுமே வைத்து
    கவிதை எழுதுகிறேன்..

    கவிதைக்குப் பொய்யழகு..

    ReplyDelete
  13. சூப்பர் இந்த போய்க் கவிதை..

    ReplyDelete
  14. என்ன பகலை இரவாக்க போறீரா, பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி...

    கவிதை அருமையா இருக்கு....!!!

    ReplyDelete
  15. கவிதைக்கு பொய்தானே அழகு...
    உங்களுக்கு உண்மை அழகா...
    இருக்கட்டும் மொத்தத்தில்
    கவிதை அழகு

    ReplyDelete
  16. கவிதை அருமையாக உள்ளது நண்பரே

    ReplyDelete
  17. உனக்காக
    பொய்யை மட்டுமே வைத்து
    கவிதை எழுதுகிறேன்....

    அருமையான பொய் கவிதை வரிகள்

    ReplyDelete
  18. கவிதை அருமை சௌந்தர். இந்த கவிதை, புதுசா கல்யாணம் ஆனவங்களுக்காகவே எழுதனது போலவே இருக்கு.

    ReplyDelete
  19. //நான் சொல்லும்
    உண்மையை விட
    “பொய்” க்குத்தான் மயங்கி நிற்கிறாய்...!//

    என்ன பண்றது ஆண்கள் கிட்டதான் உண்மையை எதிர்பார்க்க முடியாதே!! கிடப்பதை விரும்பு என்பது பெண்களோட கொள்கை.

    ReplyDelete
  20. அது எப்படி...!
    உனக்கு பொய்யும் இருட்டும் மட்டுமே
    பிடித்திருக்கிறது..

    கட்டாயம் இது பெண்மையிடம் கேட்க வேண்டிய கேள்விதான்.

    ReplyDelete
  21. உனக்காக
    பொய்யை மட்டுமே வைத்து
    கவிதை எழுதுகிறேன்....

    கவிதை மட்டும் பொய்யாக இருக்கட்டும்..................

    கவிதை பொய்யாக இல்லாமல் உண்மையாக இருந்தது...............

    ReplyDelete
  22. //உனக்காக
    பொய்யை மட்டுமே வைத்து
    கவிதை எழுதுகிறேன்....
    பகலில் கூட
    இராத்திரி செய்கிறேன்... //

    காதல் உணர்வுகளை சொல்லிநிற்க்கும் வரிகள்..

    ReplyDelete
  23. பொய்யைக் கூட உண்மையாகச் சொல்லிட்டீங்க...

    ReplyDelete
  24. பலர் வெளிப்படையாக சொல்லத்தயங்கிய வரிகள்.நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. Super...
    Kavitha...
    Kavitha...
    S. Lurthuxavier
    Arumuganeri

    ReplyDelete
  26. கவிதைக்கு பொய் அழகு. ஆனால் கவிதையில் உண்மை சொன்னவர் நீங்கள் தான்.

    ReplyDelete
  27. அருமையான கவிதை. மிகவும் ரசித்தேன். நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன??"

    ReplyDelete
  28. பொய் குளிர வைக்கும் உண்மை சுடும் ......காதலில் உண்மையை விட பொய் சொல்வதே நன்று .....கவிதை அருமை தோழா.......

    ReplyDelete
  29. கவிதை நல்லா இருக்கு சௌந்தர் ஆனா எல்லா பெண்களும் இப்படி இருக்க மாட்டார்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!