31 December, 2011

பப்பரமிட்டாய் - அறுசுவைகளை அனுபவியுங்கள்... 31-12-2011

1. அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை :

ஓர் ஆன்மிக சொற்பொழிவின் போது, அனுமன் பிரம்மச்சாரி, கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து சாதனைகள் பல புரிந்தார். முக்கியமாக கிங் மேக்கராக இருந்தார். சுக்ரீவனுக்கு ஆட்சி கிடைத்தது அனுமனுடைய அறிவாற்றலால்தான்.

இராவணனைக் கொன்று இராமர் ஆட்சியை ஏற்கவும் அனுமன் பெரிதும் உதவினார். ஆக பெரிய நோக்கோடு பிரம்மச்சரிய விரதம் இருப்பவர்கள் எல்லோருமே கிங் மேக்கராக இருப்பார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் குறிப்பிட்டார்.

உடனே கூட்டத்தில் பலத்த ஆரவாரமும், கைதட்டலும் எழுந்தன. அதற்குக் காரணம் அந்த மேடையில் காமராஜரும் இருந்தார். அவர் பிரம்ச்சாரி. அதோடு அப்போது நேருஜிக்குப்பிறகு இரண்டு பிரதமர்களைப் பதவியில் அமர்த்தி கிங் மேக்கர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார்.

இது போல் கிருபானந்த வாரியார் அவர்கள், இடம் சூழல் காலத்திற்கு ஏற்றவாறு நகைச்சுவையுடன் நயத்துடன் பேச வல்லளர்.


2. கவிதை :



அவளோடு...
அன்றொறுநாள்...
சிரித்து சிரித்துப் பேசிய
 மழைச் சந்திப்புக்குப் பிறகு... 

ஒவ்வொரு ‌மழைத்துளியும் 
அழவைத்து விடுகிறது என்னை... 

அவளை நினைவுறுத்தி..!

3. நகைச்சுவை துணுக்கு :

நண்பன் 1 : ஈரான் அதிபர் எனக்குக் கிடைக்க இருந்த வேலையைக் கெடுத்திட்டான், பாவி...!
 

நண்பன் 2 : அவர் வந்து ஏதும் சொன்னாரா..?
 

நண்பன் 1 : அதில்லை..! ஈரான் அதிபர் யாருன்னு இன்டர்வியூல்லே கேள்வி கேட்டாங்க. எனக்கு பதில் சொல்ல தெரியல..!
 

4. விடைகொடுப்போம்..!
பல்வேறு மாற்றங்கள், ஏற்றங்கள் தந்த இந்த ஆண்டின்கடைசி நளை அன்போடு வழிஅனுப்புவோம்.

5. நகைச்சுவைப்படம் :
போட்டி வச்சிக்கலாமா..!


6. புத்தாண்டு வாழ்த்து: 
 
இன்று போல் என்றும் இணைந்திருப்போம் நட்பால்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் 
என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்
கவிதைவீதி செளந்தர்...

34 comments:

  1. கிருபானந்த வாரியார் அவர்கள், இடம் சூழல் காலத்திற்கு ஏற்றவாறு நகைச்சுவையுடன் நயத்துடன் பேச வல்லளர்.

    nice

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. நண்பா,
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கிருபானந்த வாரியார் நல்ல நகைச்சுவையாகப் பேசுவார், அதுவும் இடம் பொருள் ஏவலுக்குத் தகுந்தவாறு.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - குருபானந்த வாரியார் எப்பொழுதும் நகைச்சுவையுடனும் மேடைக்குத் தக்கவாறு குழந்தைகளுக்காகவும் பேசக் கூடிஅய்வர். பால்ய வயதில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரின் பேச்சு கேட்டு மகிழ்ந்ததுண்டு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு
    கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.
    இங்கே பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  8. கொஞ்சம் மிமிக்ரி பழகிய காலங்களில் நான் அதிகம் பேசி மகிழ்வது வாரியாரின் குரலே...
    சுகமான நினைவுகள்...

    ReplyDelete
  9. கவிதை அழகு..

    இதே பொருளில் நான் சில மாதங்களுக்கு முன்பு படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது..
    என் நண்பனின் நண்பன் எழுதியது..

    இப்போது
    பெய்யும் மழையில்
    எப்போதோ
    அவளுடன் நனைந்த
    மழையின் வாசம்..

    ReplyDelete
  10. புதிய ஆண்டு பொலிவோடு வரும் என்றே நம்புவோம்.
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    த்துக்கள்...

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  12. ஹல்லோ மைடியர் ப்ரெண்ட்! வாரியார் சுவாமி பத்தின கதை அருமை. கவிதை... என் வாழ்க்கைல நடந்த விஷயம்கறதால அதொட ஒன்றிட்டேன். மை ஹார்ட்ஃபுல் நியூ இயர் விஷ்ஷஸ் டு யூ தோஸ்த்!

    ReplyDelete
  13. அழவைத்த கவிதை அருமை....!!!

    ReplyDelete
  14. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி...

    ReplyDelete
  15. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    திருமுககிருபானந்தவாரியார் பற்றிய நகைச்சுவை இனிய நினைவுகளுடன் வரும் புத்தாண்டை வரவேற்றவிதம் அருமை.

    ReplyDelete
  16. அவளோடு...
    அன்றொறுநாள்...
    சிரித்து சிரித்துப் பேசிய
    மழைச் சந்திப்புக்குப் பிறகு...

    ஒவ்வொரு ‌மழைத்துளியும்
    அழவைத்து விடுகிறது என்னை...

    அவளை நினைவுறுத்தி..!

    அருமை

    ReplyDelete
  17. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
    நகைச்சுவை துணுக்கு நீங்களா யோசிச்சதா?? சூப்பர்....

    இன்று என் பதிவு:: இந்த வருசம் வேற ஆக்கள் கிழிச்சவை...

    ReplyDelete
  18. பப்பரமிட்டாய் சுவை சூப்பர் சகோ

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. நண்பா,
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :))

    ReplyDelete
  23. பப்பரமிட்டாய் சுவை அருமை!

    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. எந்தன் உள்ளத்தில் உள்ள என் இனிய நண்பருக்கு இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லா நன்மைகளும், நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் அன்பு சகோ!
    http://atchaya-krishnalaya.blogspot.com

    ReplyDelete
  25. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரரே..

    ReplyDelete
  27. மகிழ்ச்சியுடன் புத்தாண்டை தொடங்க உங்கள் பதிவு உதவியது.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  29. வணக்கம்!
    அறுசுவை படைத்த அன்பருக்கு நன்றி! வாரியாரை மறவாத தங்கள் தமிழ் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  31. நன்று
    நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  32. ஆன்மீக சொற்பொழிகளை நான் விரும்பிக் கேட்பேன்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!