26 December, 2011

உன்னை அலங்கரிக்கிறது என் மரணம்..!




வு இறக்கமற்று என்னை பறித்துச்
சூடிக் கொண்டவளே..

ந்நேரம் 
என் காம்பின்  கண்ணீரைப் 
பக்கத்து பூக்கள் துடைத்திருக்கும்..
 
ழுது கொண்டிருக்கும் 
என்னை தாங்கிய காம்புகளுக்கு 
ஆறுதல் சொல்லியிருக்கும் 
அரும்புகள்...

வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...

லைகோத வந்து
நான் இல்லாத இடத்தை தடவிப்பார்த்து 
தவித்திருக்கும் தென்றல்...

வெடுக் கொன்று பறித்த 
உன் விரல்களுக்கு தெரியாது 
என் வலி...!

லித்துக் கொண்டே 
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...!


(Re-post)
என் கவிதை எதிர் பார்ப்பது உங்கள் கருத்தையே..
ஏதாவது சொல்லிட்டு போங்க

18 comments:

  1. ம்ம்ம்ம் .. கவிஞரே அசத்தல் கவிதை

    ReplyDelete
  2. மலருக்கும் உயிருண்டு என்பதை அழகாக சொல்லி செல்கிறது உங்கள் கவிதை. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கவிஞனின் மனதால் ஒரு மலரின் கோணத்திலிருந்தும் பார்க்க முடியும் என்பதை அறிந்தேன். கவிதையை ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  4. // வாசிக்க வந்த கவிதையோடு
    நான் காணாத ஏக்கத்தில்
    கசந்து போய் திரும்பியிருக்கும்
    வண்டுகள்...//

    எடுத்துக் காட்டுக்கு ஒன்று
    எல்லாமே நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. கவிதை அருமை சௌந்தர்

    ஆனாலும் செடியில் இருந்தே வாடுவதை விட, சிலரை சந்தோசப்படுத்தி உயிர் துறப்பது சிறந்தது

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..

    ReplyDelete
  7. தலைகோத வந்து
    நான் இல்லாத இடத்தை தடவிப்பார்த்து
    தவித்திருக்கும் தென்றல்...

    வலியின் பகிர்வு...

    ReplyDelete
  8. நான் அசைவம் கூடாது சைவமே நல்லது என்று ஆக்கமிட்டுள்ளேன் (தாவரபட்சணி) இங்கு பூவே புலம்புகிறது. அப்போ எப்படி மரக்கறிகளும் உண்ணுவது. அவை இன்னும் புலம்புமே!. நல்ல கவிதை. வாழ்த்துகள் . தாங்களும் வரலாமே அங்கு.. நல்வரவு!!!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. என்றைக்கும் இல்லாத அதிசயமாய் இன்றுதானே ஒரு பூவை பறித்தேன்....

    என்ன கவிஞரே, இப்படிபாடிவிட்டீர்கள்....

    வலிக்கிறது....
    பூவுக்கு அல்ல,எனக்கு....

    ReplyDelete
  10. அருமையான கவிதை வரிகள் சகோ .உயிருள்ள பூக்களைப் பறித்து
    எம்மை நாம் அலங்கரிக்கும்போது இதை சிந்தித்தது கிடையாது .உங்கள்
    சிந்தனை பாராட்டத் தக்கது .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. வலித்துக் கொண்டே
    உன்னை அலங்கரிக்கிறது
    என் மரணம்...!////

    ReplyDelete
  12. மரணத்தை அலங்கரிக்கும் மலர்களின் மரணம் பற்றி கவலைப்படும் மனத்தின் கவிவரிகள் அருமை. காலனின் கரங்களால் உயிர் பறிக்கப்பட்டு துணையிழந்த மனத்தின் துயரமாகவும் எண்ணத் தூண்டுகிறது இன்னொரு கோணத்தில்.

    ReplyDelete
  13. ஒரு மலரின் மனத்தை மணத்தை
    சொல்லிப் போன விதம் அருமை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    த.ம 8

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!