02 March, 2012

அரவான் சினிமா விமர்சனம் / Aravan Cinema Vimarsanam


வெகு நாட்களுக்கு பிறகு விமர்சனம் எழுதஆர்வம் வந்தது அதற்காக இன்று என்னுடைய வேலைகளை ஓரம் தள்ளிவைத்துவிட்டு திருவள்ளூர் கிருஷ்ணா திரையரங்குக்கு சென்றேன். எப்போதும் படம் 10.30 க்கு படம் ஆரப்பிப்பார்கள் ஆனால் இன்று 10-50 க்கு தான் ஆரம்பித்தார்கள். கூட்டம் சாதாரணமாகத்தான் இருந்தது. டிக்கெட் விலை 50 மட்டுமே.

யதார்த்தமான அண்ணன் தம்பி பாசத்தை அழகாக “வெயில்“ படத்திலும்,‌  ‌ஒரு துணிக்கடையில் நடக்கும் அவலம் அதில் ஒரு காதலையும் “அங்காடித் தெரு“ வில் அழகாய் சொன்ன வசந்தபாலன். தற்போது கையில் எடுத்திருக்கும் கதை 18-ம் நூற்றாண்டில் நடக்ககூடியதாக இருக்கிறது. சாகத்மிய அகடமி விருது பெற்ற நூலான சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய ”காவல் கோட்டம்” என்ற கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் வசந்தபாலன்.


களவு மட்டுமே தொழிலாக கொண்ட பசுபதி வசிப்பது வேம்பூர் என்னும் ஒரு சிற்றூர். மலைஅடிவாரத்தில் இருக்கும் இவர்கள் களவு கொண்டு அதில் வரும் வருவாயில் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆரம்ப காட்சிகளில் பசுபதி தன் கூட்டாளிகளோடு களவு செய்ய புறப்பட்டு வெற்றிகரமாக களவு செய்துவிட்டு வரும் காட்சிகள் பிரமிப்பாக இருக்கிறது.

அப்பகுதி ராணியின் வைர அட்டிகை களவு போக அதை வேமபூர்காரர்கள் தான் எடுத்திருக்கலாம் என்று கருதி அரண்மனையாளர்கள் அங்கு சென்று அவர்களை சித்திரவதை செய்கிறார்கள். அதற்கு பசுபதி நாங்கள் யாரும் எடுக்கவில்லை என்றும், அப்படி யார் எடுத்தது என்று கண்டுபிடித்து தருவதாகவும் சவால் விடுகிறார். அப்படி கண்டுபிடித்து கெர்டுத்தால் அவர்களுக்கு அரண்மனை சார்பில் 100 கோட்டம் நெல் தருவதாக வாக்குறுதியும் தருகிறார்கள். தன்னுடைய கிராமத்தின் நலன் கருதி பல இடங்களுக்கு சென்று தேடுகிறார். அப்படி ஒருவரை வேறுபார்த்து அவனை களவு செய்யும்போது பிடிக்கிறார்...  அவர் தான் ஆதி. காட்டில் தனியாளாக இருந்து ஆதி கொள்ளையடித்து தெரிந்து... அவரிடம் அந்த வைர அட்டிகையை வாங்கிக்கொண்டு.., அப்படியே ஆதியையும் தங்களுடைய சொந்த ஊருக்கு கொண்டு வருகிறார் பசுபதி.
அதன்பிறகு இருவரும் இணைந்து களவுக்கு போகிறார்கள். மிகவும் பலமான ஊரான மாத்தூருக்கு களவு சொன்று அங்கும் கொள்ளையடித்து திரும்பும் வழியில் பசுபதி மாட்டிக் கொள்ள ஆதி அவரை காப்பாற்றி ஊருக்கு திரும்பி வருகிறார். களவில் மாட்டி யாரும் திரும்பியதில்லை காப்பாற்றிய ஆதிக்கு நன்றி சொல்கிறார்கள்.

வேம்பூருக்கு எதிராக வரும் ஒரு மாடுபிடி போட்டியில் பசுபதி கலந்துக் கொண்டு போராட அவருக்கு துணையாக ஆதியும் களத்தில் இறங்கி போட்டியில் வெல்கிறார். அந்த இடத்தில் மாத்தூர்காரர்கள் வந்து ஆதிதை மடக்கி பிடித்து கொண்டு செல்கிறார்கள். அப்போது ஏன் என்று கேட்க ஆதி ஒரு பலியாள் என்றும், அவரை பலியிடபோவதாகவும் கூறுகிறார்கள். இந்த பரபரப்பில் இடை வேளை வருகிறது...

ஆதி பலியாடாக ஆக காரணம் என்ன..? ஆதியின் உண்மையான பிண்ணனி என்ன என்பதை மீதி கதை விளக்குகிறது..


குறைஎதுக்குங்க மீதிக்கதையையும் சொல்றேன்....

காவல் கோட்டமாக திகழ்கிறது ஆதி வசிக்கும் ஊரான சின்னவீரம்பட்டி என்ற சிற்றூர். அங்கு பரத்தை  மர்மமான முறையில் கொலை செய்து போட்டு விடுகிறர்கள். அவர் எந்த ஊரை சார்ந்தவர் என்று ஆராயும் போது அவர் மாத்தூரை சார்ந்தவர் என்று தெரிய வருகிறது. இந்த படுகொலைக்கு பழிவாங்க மாத்தூர்காரர்கள் பொங்கி எழுகிறார்கள்.

இதற்கிடையில் மதுரை பாளையக்காரர் தலையிட்டு ஒரு உயிருக்கு பல உயிர்கள் இறப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ஆகையால் உங்கள் ஊரில் இருந்து ஒருவரை பலிகொடுத்து விடுங்கள் என்று கட்டளையில் அந்த பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ஆதி.

30 நாட்களுக்கு பிறகு வந்து பலியிடலாம் என்று கூறி சென்று விட பரத்தை உண்மையில் கொன்றது யார்..? எதற்காக கொன்றார்கள் என சின்னா என்ற ஆதி ஆராய்கிறார்...? அதன் பிண்ணனியில் பல்வேறு மர்மங்கள் இருப்பது தெரிய வருகிறது...?

இறுதியில் தன்னை நியாயப்படுத்தி தண்டனையில் இருந்து ஆதி தப்பித்தாரா அல்லது தண்டனை நிறைவேற்றப்பட்டதா என்று இறுதிக்காட்சிகள் விளக்குகிறது... (போதுங்க இதுக்கு மேல சொன்ன நல்லா இருக்காது..)

இனி விமர்சனம்...
 
முதல் பாதியில் வரிப்புலி என்ற களவானி கதாபாத்திரத்திலும், பிற்பாதியில் சின்னா என்ற  காவல் கோட்ட தலைவனாகவும் அற்புதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆதி. படம் முழுக்க சட்டையணியாமல் தன்னுடைய கம்பீரமான உடலை முருக்கேற்றி வலம் வருகிறார் ஆதி. வீரமான நடிப்பிலும், ஆதியிடம் பயப்படும் காட்சியிலும், காதலி தன்ஷிகாவிடம் காதல் காடசிகளில் கதையில் அளைவைவிட்டு சற்றும் விளகாமல் அற்புதாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக தன்ஷிகாக அதிக வேலையில்லா விட்டாலும் ஒரு மலைவாழ் பெண்ணை அப்படியே கண்முன்னே நிறுத்துகிறார்.

பசுபதி வெகுநாளுக்கு பிறகு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ள படம். வீரமும், தன் பகுதி மக்களை காக்கவேண்டும் என்ற பொறுப்பும், தன்னுடைய நண்பனான ஆதியை காப்பாற்ற வேண்டும் என்ற வெறியும், தன்னுடைய நடிப்பில் வரிசைப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

பரத்திற்கு மிகுந்த காட்சிகள் இல்லை கதைக்கு ஏற்ப அவரை கௌரவ தோற்றத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர் கொலை செய்யப்படுவதுதான் கதையின் போக்கை மாற்றுகிறது அவருக்கு ஒரு சில காட்டிகளில் ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார்.

நகைச்சுவைக்கு இப்படத்தில் வேலையில்லை. இருந்தாலும் சிங்கம் புலியை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

கதைகளம் மலையடிவாரத்தில் வாழும் ஒரு சிற்றூர் என்பதால் அவர்களின் சூழ்நிலை வாழும் முறைகள் அவர்களின் நடவடிக்கைகள் என அனைத்தும் தத்துருபமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். எந்த காட்சியில் மிகைப்படுத்தலோ நம்பமுடியாத காட்சிகளோ பார்க்க முடியவில்லை அந்த விதத்தில் வசந்தபாலைனை பாராட்டியே ஆகவேண்டும்.

இசை பாடகர் கார்த்திக் புதிய முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார். படத்துக்கு பாடல்கள் அவசியம் இல்லையென்பதால் அவைகள் கதையோடு ஒத்து போகும்படி செய்திருப்பது அற்புதம்.

படத்தில் வரும் அனைவரும் பாதி வேட்டியை கட்டிக்கொண்டு முழுக்க முழுக்க மலைவாழ் மக்களைப்போன்ற காட்சி அளிக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டில் கதை என்பதால் அனைத்து காட்சிகளிலும் அதை கவனித்து செய்திருக்கிறார் இயக்குனர்.

வெறும் மசாலாக்கள் பூசி கூவி... கூவி... தன்னுடைய படங்களை காசாக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒரு சாகித்ய அகடமி விருது பெற்ற ஒரு நாவலுக்கு உயிர் கொடுத்து தமிழ் திரைப்படங்களின் மைல் கல்லை இன்னும் கொஞ்சம் நகர்த்தி போட்டிருக்கிறார் வசந்தபாலன். நல்ல பொழுதுபோக்கு படம் இது இல்லையென்றாலும் சிறந்தஒரு படத்தை கொடுத்ததற்காக வசந்தபாலம் பேசப்படுவார்.

34 comments:

  1. Good review. A film not to be missed.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்புரே....

      படத்தை எப்படி விமர்சனம் செய்வது என்பது புரியவில்லை.
      நான் என்னும் அந்த படத்தின் காட்சி அமைப்பு ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் தெளிய வில்லை...

      வருமானத்தை இழந்தாலும் இப்படம் பெயரை பெரும்...

      Delete
  2. இன்னிக்கு நைட்டு போறேன்..ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்லப்படம் பார்த்து விமர்சனமும் எழுதி ,என் பிளாக்குக்கு மோட்சம் கொடுக்கலாம்னு இருக்கேன்:-)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எழுங்க நண்பரே...

      உண்மையில் இதுபோன்ற படத்துக்கு பதிவுலகம் துணை நிற்க வேண்டும்..

      Delete
  3. #காவல் கோட்டம்” என்ற கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் வசந்தபாலன்.#

    அந்த நாவலில் வரும் ஒரு சிறு பகுதிதான் இந்த படம்....

    ReplyDelete
    Replies
    1. காவல் கோட்டம் கதையில் வசந்தபாலன் கூடுதல் கதையை சேர்த்திருப்பதாக டைட்டிலில் பேர்டுகிறார்கள்..

      ஆனால் எந்த மாதிரி மாற்றம் இருக்கிறது என்று நாவலை படித்தால் தான் தெரியும்..

      இருந்தாலும் போற்ற வேண்டிய படம்..

      Delete
  4. Mokkaiyana oru BLUE FILM kathaiyai eduthu, Gobi Siva Thalaile molaka arachachu!!

    ReplyDelete
    Replies
    1. காவல் கோட்டம் என்ற நாவலை படித்துள்ளீர்களா அல்லது படத்தைதான் பார்த்துள்ளீர்களா...

      படத்தில் எந்த இடத்திலும் விரசமோ.. அறுவருப்பான கதையோ... கவர்ச்சியோ இல்லாமல் இருக்கிறது நண்பரே...

      வசந்தபாலன் தன்னுடைய நிலையில் இருந்து கொஞ்சம் விலகாமல் படம் செய்திருக்கிறார்...

      இப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டும் தரமான படம்...

      தங்களின் கருத்து ஏற்றுக்கொள்வதற்கில்லை...

      Delete
  5. நயமான விமர்சனம்!
    படத்தைநேரில் பார்த்தது போன்ற உணர்வு!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. படத்தை பாருங்கள் ஐயா...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  6. சுடச்சுட வந்த அருமையான விமர்சனம். நிச்சயம் பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  7. //நல்ல பொழுதுபோக்கு படம் இது இல்லையென்றாலும் சிறந்தஒரு படத்தை கொடுத்ததற்காக வசந்தபாலம் பேசப்படுவார்.//

    நமக்கு இந்த மாதிரி படம் தான் வேணும். பொழுதுபோக்கு மசாலா இல்லை.

    அழகான விமர்சனம் சுடச்சுட. சீக்கிரம் பார்க்கப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே...

      படத்தின் தரம் என்பது எடுத்துக்கொண்ட கதையை கொஞ்சம் மிகைப்படுத்தாமல் தத்ரூபமாக கொடுப்பதுதான்...

      அந்த வகையில் இந்த படம் பாராட்டுக்குறியது...

      காட்சி அமைப்பு வேகம் மற்றும் நடிப்பு போன்றவை இதில் அபாரம்..

      Delete
  8. எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் வந்துள்ளதாக தெரிகிறது விமர்சனத்தில்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...

      வசந்தபாலன் தனக்கென முத்திரையை இப்படத்தில் பதித்திருக்கிறார்...

      Delete
  9. படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் காவல் கோட்டம் படித்து வருகிறேன். மிகவும் நல்ல நாவல். படமும் அப்படியே எனும்போது மகிழ்ச்சி.

    சிறு மாற்றம் இந்த படம் நாவலின் ஒரு பகுதி மட்டுமே.

    ReplyDelete
  10. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

    ReplyDelete
  11. Replies
    1. முழுக்கதையும் இங்கு சொல்லப்படவில்லை நண்புரே...

      படத்தை பார்க்க தூண்டு அளவில்தான் கதையின் ஓட்டத்தை சொல்லியிருக்கிறேன்..

      மேவும் முடிவும் இங்கு அறிவிக்கப்படவில்லை இந்த வகையில் இருந்தால்தான் படிப்பவருக்கு படத்தை பார்க்க தூண்டும் ..

      தங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  12. மிக அழகான விமர்சனம்
    படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டிப் போகிறது
    இன்று வெளியான படத்திற்கு
    இன்றே ஒரு விமர்சனம் என்பது
    பதிவுலகில் மட்டுமே சாத்தியம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...

      முதல் காட்சி முடிந்த 1 மணி நேரத்திற்குள் விமர்சனம் வந்து விடுகிறது...

      இந்த விமர்சனமும் ஒரே நேரத்தில் நானும் சிபி மற்றும் ஆருர்செந்தில் அவர்களும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்

      Delete
  13. நல்லதோர் படம் அதற்கு அருமையான விமர்சனம்..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நல்ல படம்...சுடச்சுட விமர்சனம் நண்பரே...

    ReplyDelete
  15. ///நல்ல பொழுதுபோக்கு படம் இது இல்லையென்றாலும் சிறந்தஒரு படத்தை கொடுத்ததற்காக வசந்தபாலம் பேசப்படுவார்///.


    உண்மையான விமர்சனம்!
    முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் இல்லை!நல்ல இலக்கிய படைப்புதான் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே!

    ReplyDelete
  16. அன்பின் சௌந்தர் - நலதொரு விமர்சனம் - பார்த்து விடுகிறேன் படத்தினை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. படம் பார்க்கும் ஆவலை தூண்டுது உங்க விமர்சனம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. நல்ல விமர்சனம் ! பார்த்து விடுகிறேன் ! வாழ்த்துகள் ! நன்றி சார் !

    ReplyDelete
  19. இன்னும் படம் பார்க்க்கவில்லை.நல்லதொரு விமர்சனம் படித்த திருப்தி.நன்றாக இருந்தது,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. இதுபோன்ற படங்கள் வெற்றி பெற வேண்டும்
    அப்போதுதான் புதிய முயற்சிகள் பெருகும்...

    ReplyDelete
  21. வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215


    தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!