19 March, 2012

உங்களுக்கு என்ன வேண்டும்..! வெள்ளைக்காரனின் புத்திசாலிதனம்...!


ஒரு சமயம் சில வெள்ளைக்காரர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்தார்கள். அவர்கள் வந்த விலை உயர்ந்த கார் ஒன்று, ஒரு சேற்றுப்பாதையை கடக்கும் போது அதில் சிக்கிக்கொண்டது.

அவர்கள் எவ்வளவு முயன்றும் அதை வெளியில் ‌எடுக்க முடியவில்லை.

அங்கு வயல்வெளியில் வேலைசெய்துக்கொண்டிருந்த நம்மவூர் மக்களை உதவிக்கு அழைத்தார்கள்.

உடனே நம்ம மக்களும் அவர்களுக்கு உதவி செய்தார்கள். காரை சேற்றில் இருந்து வெளியில் ‌எடுத்துவிட்டு பின்பு அந்த காரில் படிந்திருந்த சேற்றை சுத்தம் செய்து கொடுத்தார்கள்.

மிகவும் மகிழ்ந்துபோன வெள்ளைக்காரர்கள். அவர்களிடம் எங்களுக்கு மிகவும் சரியான நேரத்தில் உதவி புரிந்தீர்கள். அதற்காக நாங்கள் ஏதாவது செய்ய நினைக்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும்..? பணமாக வேண்டுமா..?, வெள்ளியாக வேண்டுமா..? தங்கமாக வேண்டுமா..? அல்லது தேங்ஸ்-ஆகா வேண்டுமா..? என்றார்களாம்.

அதற்கு நம்மவர்கள், வெள்ளைக்காரன் ஏதோ கொடுக்க நினைக்கிறான் நமக்கு நல்ல அதிர்ஷ்டம்தான் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் எதை கேட்பது என்று இவர்களுக்கு விவாதம்.

என்ன கேட்கலாம் என்று விவாதித்தபின். தேங்க்ஸ் கேட்கலாம் என்று முடிவு எடுத்தார்கள்.... ஏன்னென்றால் பணத்தை விட வெள்ளி விலை உயர்ந்தது, வெள்ளியை விட தங்கம் விலை உயர்ந்தது.... அப்படியென்றால் தேங்ஸ் தங்கத்தை வி்ட விலை உயர்ந்ததாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்கள்...


அனைவரும் என்று சேர்ந்து “ஐயா எங்களுக்கு தேங்ஸ் கொடுங்கள்” என்றார்களாம்...!

உடனே வெள்ளைக்காரர்கள் அனைவருக்கும் தேங்ஸ் (thanks) என்று கூறி கைகொடுத்துவிட்டு சென்றார்களாம்...

நம்மவர்கள் அசடு வழிய கையசைத்தார்களாம்..!

மொழி தெரியாததால் எவ்வளவு பிரச்சனைப்பாருங்க... (காது வழி செய்தி)

48 comments:

  1. சபாஷ். நல்ல காமடிதான். இருந்தாலும் இந்த காலத்திலும் தேங்க்ஸ் என்றால் என்னவென்று அறியாமல் இருப்பது அபூர்வம்தான்.

    ReplyDelete
    Replies
    1. இது காதுவழி செய்தி நண்பரே...
      நடந்தது எப்போது என்று தெரியவில்லை...

      இது தற்போது நடந்த நிகழ்வு அல்ல..

      Delete
  2. மிக நகைச்சுவையான சம்பவம். அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி பாலா சார்...

      Delete
  3. 1966 ல நடந்த சம்பவத்தை மறக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாப்ள....

    ReplyDelete
    Replies
    1. அம்புட்டு பழைய ஆளா நானா...

      யோவ்.. இப்படியெல்லாம் சொல்லுவிங்கன்னுதான் இது காது வழி செய்தின்னு போட்டிருக்கேன்...

      நன்றி மாப்ள...

      Delete
  4. மொழி தெரியாததால் எவ்வளவு பிரச்சனை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க...

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  5. ம்ம்ம்ம் ரொம்ப நாளைக்கு அப்புறம் நடக்கட்டும்....!!!

    ReplyDelete
  6. தங்கம் நன்றியானது ...

    ReplyDelete
  7. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றம் தொடரும் . அருமையான பதிவு .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்..

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  8. ரசிக்கும் படியான செய்தியினை
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ரொம்ப திறமை சாலிக தான் அந்த பய புள்ளைகள் ..

    ReplyDelete
  10. ஹி ஹி ஹி.. சூப்பர் கதை அண்ணா..

    ReplyDelete
  11. தமிழர்கள் மிகவும் நன்றியுள்ளவர்!
    நன்றி மட்டுமே எதிர் பார்பவர் என்று அவர்கள்
    நினைத்திருப்பார்கள்! பாவம்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து உண்மைதான் ஐயா..!

      தங்கள் வுருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  12. மொழி தெரியாததால் எவ்வளவு பிரச்சனைப்பாருங்க...

    காது வழி செய்தி யாக இருப்பினும், காதால் கேட்டதும், உதவிசெய்த அந்த கிராம மக்களை நினைக்க பாவமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா..!

      Delete
  13. வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான் ... தமிழன் தமிழன் தான். நோ டவுட்.

    ReplyDelete
  14. தேங்க்ஸ் என்பது எவ்வளவு பெரிய மந்திரச் சொல். அதை கிஃப்டா வாங்குனதுக்கு அவங்களுக்கு நாம தேங்க்ஸ் சொல்லனும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி...

      நான் சொல்லிட்டேங்க உங்களுக்கு...

      Delete
  15. காது வழி செய்தியே இப்படி இருக்கும்போது நேரில் பார்த்தால் எப்படியிருக்கும்?அல்லது எப்படி இருந்திருக்கும்?நல்ல பதிவு .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. பாவம் அந்த மக்கள்!ஹா,ஹா!

    ReplyDelete
  17. நல்ல காமடி....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. அட கடைசி வரைக்கும் தேங்ஸ் என்னா என்னவென்னு சொல்லவே இல்லையப்பா....அட அது என்ன அவ்வளவு விலை கூடின சாமானா???? யாருக்கும் தெரியாம கைக்குள்ள கொடுத்திருக்குரான் பாவிப்பயல்......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிட்டுக்குருவி...

      Delete
  19. வணக்கம்! THANKS ! என்ற ஒரு சொல்லை வைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரு காட்சி.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்...

      நன்றி இளங்கோ..

      Delete
  20. அன்பின் சௌந்தர் - நன்றி என இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வது - வெள்ளியினை விட தங்கத்தை விட உயர்ந்ததுதான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா...

      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..

      Delete
  21. அருமை நண்பா

    ReplyDelete
  22. நல்ல கதை நண்பரே .. மொழி தெரியாததால் வரும் பிழைகள் நகைசுவையாக சொல்லிய விதம் அருமை ..

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!