09 April, 2012

அவளிடம் அப்படி என்ன கேட்டுவிட்டேன்..!



வ்வொறு நிமிடமும்
வலிகள் கொண்டே நகர்கிறது
என் காதல் காலங்கள்...!

விரைவில் விடியாத 
சில ஊமை இரவுகளுக்கிடையே
பற்றிக் கொள்ளும் அவளின்
நினைவுகளை தவிர்த்து...

ரவோடு போரிட்டு
தூக்கத்தைத் தொடரலாம்
என்றால்முடிவதில்லை
 ஒருபோதும..!

வள் மீதான காதலை 
அதிகப்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்
 என் வலியின் வீரியங்களை இன்னும்
வலுவடைய செய்கிறது...!

சொல்ல முடியாத என் காதலை
இதயத்தில் வைத்தே
அரித்துக்கொண்டிருக்கிறது
என் இயலாமை கரையான்கள்....!


லிகளைப்போக்கும் 
ஒரு சந்தர்ப்பத்திற்காக 
காத்திருக்கிறேன்
  
து என் காதல் கைக்கூடும்
நாள் மட்டுமே...!


தங்கள் வருகைக்கு 
மிக்க நன்றி நண்பர்களே...!
 

24 comments:

  1. படங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. சொல்ல முடியாத என் காதலை
    இதயத்தில் வைத்தே
    அரித்துக்கொண்டிருக்கிறது
    >>>
    சீக்கிரம் சொல்லிடுங்க சகோ. சொல்லிட்டா இப்படி புலம்ப வேண்டாம் பாருங்க.

    ReplyDelete
  3. காதல் கை கூடும் நாள் விரைவிலேயே வரட்டும். கவிஞனின் தாகம் தீரட்டும். நன்று.

    ReplyDelete
  4. //இரவோடு போரிட்டு
    தூக்கத்தைத் தொடரலாம்
    என்றால் முடிவதில்லை
    ஒருபோதும..!//

    உணர்வுகளைச் சொல்லத்துடிக்கும் அருமையான வரிகள்.
    பாரட்டுக்கள்.

    ReplyDelete
  5. சொல்ல முடியாத என் காதலை
    இதயத்தில் வைத்தே
    அரித்துக்கொண்டிருக்கிறது
    என் இயலாமை கரையான்கள்....!///

    இப்படியே தான் சொல்லமுடியாக் காதல் ஆண்களில் மறைந்தே மரித்துப் போகிறது ஆயிரமாயிரம்.....

    ReplyDelete
  6. மெயில் தகவலுக்கு நன்றி.

    //வலிகளைப்போக்கும்
    ஒரு சந்தர்ப்பத்திற்காக
    காத்திருக்கிறேன்

    அது என் காதல் கைக்கூடும்
    நாள் மட்டுமே...//

    சீக்கரமாக கைகூட வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. உணர்வுகளை பிழிந்து ஒரு காவிய காதல் ..
    வாழ்த்துக்கள் //
    விரைவில் கைகூடும்
    உங்கள் மௌனம் கலைந்தால் ..

    ReplyDelete
  8. ...சொல்ல முடியாத என் காதலை
    இதயத்தில் வைத்தே
    அரித்துக்கொண்டிருக்கிறது
    என் இயலாமை கரையான்கள்....!''
    வலிகளைப்போக்க எனது பக்கம் கிருமி - கொல்லி இருக்கா என்று பர்ர்க்க வரலாமே!..வாழ்த்தகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. சொல்லப்டாத
    காதல்
    வரிகளில் வலிகள்
    ம்ம்ம் அருமை கவிஞரே

    ReplyDelete
  10. ////////சொல்ல முடியாத என் காதலை
    இதயத்தில் வைத்தே
    அரித்துக்கொண்டிருக்கிறது
    என் இயலாமை கரையான்கள்....////////

    நச்......... வரிகள் ...!

    ReplyDelete
  11. காதல் கைகூட வாழ்த்துகிறோம் .வரிகள் அருமை .

    ReplyDelete
  12. அன்பின் சௌந்தர் - காதல் கைகூட நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. அழகான வரிகள்

    ReplyDelete
  14. அருமையான வெளிபாடு

    ReplyDelete
  15. காதல் கவிதைகள் மிகவும் அருமை சௌந்தர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. காதலுக்காக காத்திருப்பதில்
    பெரும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது...


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  18. சொல்ல முடியாத என் காதலை
    இதயத்தில் வைத்தே
    அரித்துக்கொண்டிருக்கிறது
    என் இயலாமை கரையான்கள்....!
    இது எனக்காக எழுதப்பட்ட வரிகள்,,,,,,,,,

    ReplyDelete
  19. கை கூடட்டும்.
    வாழ்த்துக்கள்.
    அதுவரை
    துணை வரட்டும்
    கவிதைகள்
    இது போன்று

    ReplyDelete
  20. காதலில் வழியில்லை என்றாலும் வலிகள் மட்டும் உண்டு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!