20 July, 2012

பேஸ்புக்கில் அடங்க மறுக்கும் மனோ..! அதற்கு இவைகள் சாட்சி..!

அன்பு நிறைந்த இஸ்லாமிய நண்பர்கள்  தங்களுடைய ரமலான் கடமையை சிறந்த முறையில் முடிக்க நான் மனமுவந்து வாழ்த்துகிறேன்...!

*********************************************************

"தாஜ்மஹால்" எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?

"ஆக்ரா'வுல..."

"வெரிகுட்.....சார்மினார் எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?"

"அதோ உங்க "பாக்கெட்டுல"....
*********************************************************
 கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!


*********************************************************
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...

காதலி : !!!!

[[த்தூ இதெல்லாம் ஒரு பொழைப்பா]]
*********************************************************
 கல்யாண வீட்டில் வந்து, மணமேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிளையிடம் ட்ரீட் கெட்ட ச்சே கேட்ட அதே நண்பன்தான் இந்த பய....!

*********************************************************

அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற?

போன வாரம் அவர் கிட்ட போய் எனக்கு சுகர் இருக்கான்னு பாருங்க டாக்டர்னு சொன்னேன்.

அதுக்கு உங்க வீட்டு ரேஷன் கார்ட கொண்டு வந்தாதானே பார்த்து சொல்ல முடியும்னு சொல்றார்.

*********************************************************
கணவன் : அந்த கருப்பு நாய்க்கு சோறு வச்சியா???

மனைவி : ஆமாங்க.. ஏன் கேட்கிறீங்க???

கணவன் : இல்ல. அந்த நாய் தெருவோரமா செத்து கிடந்துச்சு.. அதான் கேட்டேன்..

[[செத்தான்டா சேகரு இன்னைக்கு]]
*********************************************************
(விமான நிலயத்தில்...)

வடிவேலு:சென்னையில் இருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்??

Receptionist :Plz one minute sir...

வடிவேலு:அடங்க் கொக்கமக்கா..என்ன speed..


*********************************************************
 ராஜபாட்டை ராஜா : பாம்பு கடிக்கு முதலுதவி என்ன தெரியுமா...? கடிவாய்க்கு கீழும் மேலும் அழுத்தமாக ஒரு கயிற்றால் கட்டு போடவேண்டும்.

மாணவன் : தொண்டையில பாம்பு கடிச்சாலும் இதே மாதிரி கட்டு போடலாமா சார்...?

ரா ராஜா : ???????????......ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே.....


*********************************************************
 கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன்
எழுதிய கவிதை *********

"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது"

"வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"

*********************************************************

"சின்னவீடு"சுரேஷ் : டாக்டர், வெள்ளரிக்காய் சாப்பிட்டு பார்த்தேன், மருதாணி தடவி பார்த்தேன், ஏன் கண்ணுல விளக்கெண்ணெய் கூட தடவி பார்த்தேன், அப்போ கூட உடம்பு குளிர்ச்சியே ஆகலை...!

டாக்டர் : பேசாம ஃபிரிட்ஜ் உள்ளே போயி உட்கார்ந்து உள்பக்கமா பூட்டிக்குங்க...!

 
*********************************************************
இது மனோவின் இன்றைய பேஸ்புக் அலம்பல்கள்...!
இப்பசொல்லுங்க இந்த மனோவை என்ன செய்யலாம்...!

34 comments:

  1. குறிப்பிட்ட ரெண்டுபேருக்கு நிறைய உள்குத்து குடுத்திருக்காரு போல தெரியுது....

    ReplyDelete
    Replies
    1. விட்டா அவரு எல்லாருக்கும் உள்குத்து போடுவாரு...

      Delete
  2. விடுங்கண்ணே ...அவரு பாட்டுக்கு எதையாவது போட்டுட்டு போகட்டும்...நாம ஒண்ணு சொல்ல அதுக்கு அவர் அரிவாளை தூக்க எதுக்கு வீண் வம்பு...

    ReplyDelete
    Replies
    1. நம்மளப்பத்தி தெரியல அவருக்கு....


      நான் வெள்ளைக் கொடியை ரெடியா வச்சிருக்கேன் பாலா சார்...

      Delete
  3. தட்டிக் கொடுத்து முத்தமிட்டுப் பாராட்டலாம் இந்த மடிக்கணினி மன்னனை. வேறென்ன செய்துவிட முடியும் சௌந்தர்.

    ReplyDelete
    Replies
    1. மடிக்கணினி மன்னன்...

      அழகிய பட்டம்....

      நல்லது தலைவரே...

      Delete
    2. ஹே ஹே ஹே ஹே மிக்க நன்றி அண்ணே.....

      Delete
  4. வாழ்த்துக்களுக்கு நன்றி!
    முகமதிய என்பதை இஸ்லாமிய என்று மாற்றி விடுங்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கனும் நண்பரே...

      எப்படி போடவேண்டும் என்று தெரியவில்லை...

      தங்கள் சொன்னது போல் மாற்றிவிட்டேன்...

      Delete
  5. அவர் அடங்க மறுப்பார். அது மனோவின் இயல்(பு) குணம்!!! ஆகவே, அவற்றை நாம் படித்து மகிழலாம் தினம்!!!

    ReplyDelete
  6. எல்லாம் இதுவரை வாசிக்காத புது ஜோக்ஸ். சோ ... மனோவை பாராட்டுவதைத் தவிர வேற என்ன செய்ய? ஹி ஹி ... :) :)

    ReplyDelete
  7. செம....... சேகரு செத்தாண்டா இன்னைக்கு.....

    ரமழான் வாத்துக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  8. மனோ பாஸ் புண்ணியத்துல உங்களுக்கு ஒரு போஸ்ட் தேறிடுச்சே பாஸ்..............

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் கொலைவெறியோடதான் கிளம்பி இருக்காப்டி....

      Delete
  9. சுரேஷ் எல்லாம் செஞ்சாரு,அவருக்கா?இல்ல....

    ReplyDelete
  10. சிரிக்க ஒரு பதிவு.

    ReplyDelete
  11. அருமையான நகைச்சுவைகளை தந்தமைக்கு நன்றி! ரசித்து மகிழ்ந்தோம்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. சிறந்த நகைச்சுவை நல்கிய மனோவிற்கும் சுட்டு போட்ட உங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சுட்டு சுட்டு போடுவோம்ல நாங்களும்...!

      Delete
  13. எலேய் நீ போலீஸ்ல இருக்குற தைரியமா...?

    ReplyDelete
  14. நல்ல நகைச்சுவை பதிவு ...
    வாழ்த்துக்கு நன்றி சகோ
    த ம 9

    ReplyDelete
  15. ஹா ஹா... ரசித்தேன்.... கலக்குங்க....(த.ம. 13)

    ReplyDelete
  16. //"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது"
    "வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது"//
    super சௌந்தர்!
    இதோ ஒட்டு போட்டுட்டேன். சாரி ஓட்டு போட்டுட்டேன்.

    ReplyDelete
  17. அவருக்கிட்ட திறமை கொட்டிக்கிடக்கு... அள்ளி விடுறாரு... பாராட்டும் அண்ணா.

    ReplyDelete
  18. மெதுவா ஜோக் சூப்பர்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!