29 August, 2012

இது..! இதுவரையில் என்னால் முடியாத விஷயம்...



ன் கவிதைகளுக்கு கடிவாளம் போடுகிறது
உன் நடவடிக்கைகள்..!

ன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த 
ஒற்றை ரோஜாவை வெடுக்கென்று பறித்து 
சூடிக்கொண்டாய்... 
கண்ணீர் வடிக்கிறது என் வார்த்தைகள்..!

சிட்டுக்குருவி சிணுக்கள் கேட்டு திரும்பினேன்
நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
தற்போது யாரின் சிணுக்களை 
நான் கவிதையாக்க...!

ற்றை பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும்
அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ
காயப்பட்டு காத்திருக்கிறது
என் வார்த்தைகள்..!

ன்னால் மட்டும்தான் முடிகிறது
என் கவிதைக்கு
எனக்கே தெரியாத  விளக்கங்கள் சொல்ல...

யிரம் முறை எழுதியும்
இன்னும் புதியதாகவே இருக்கிறது 
 உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!

வ்வொறு முறையும்
நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள்
  உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது..!

துவரையில் முடியவில்லை 
உன்னை கலக்காமல் 
கவிதையை முடிக்க...!

 வருகைப்புரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்...!

30 comments:

  1. முயற்சி பண்ணுங்க 'கலக்காமல்' - சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே...

      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

      Delete
  2. அருமையான காதல் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாலா... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  3. ம்ம்ம் ..காதல் ரசம் வடிக்கிறது கவிஞரே

    ReplyDelete
  4. கவிதை கவிதை போலவே இருந்தது அருமை :-)

    ReplyDelete
  5. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
  6. #ஆயிரம் முறை எழுதியும்
    இன்னும் புதியதாகவே இருக்கிறது
    உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!#

    வர்ணிக்கமுடியாத வைர வரிகள்..அருமை...தமிழ்மணத்திற்கு என்ன ஆச்சு?

    ReplyDelete
  7. அருமையான வரிகள் நண்பரே! அசத்தல் கவிதை!

    ReplyDelete
  8. //ஒற்றை பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும்
    அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ
    காயப்பட்டு காத்திருக்கிறது
    என் வார்த்தைகள்..!//

    சூப்பர்...

    உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. உங்களை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சிதான் சங்கவி...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  9. உன்னால் மட்டும்தான் முடிகிறது
    என் கவிதைக்கு
    எனக்கே தெரியாத விளக்கங்கள் சொல்ல..
    /////////////////////////

    அழகான வரிகள்

    ReplyDelete
  10. //ஆயிரம் முறை எழுதியும்
    இன்னும் புதியதாகவே இருக்கிறது
    உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!//


    அசத்தல்

    ReplyDelete
  11. காயப்பட்டு காத்திருக்கிறது
    என் வார்த்தைகள்..!

    அடடா காதல் காதல்...

    ReplyDelete
  12. மிக அருமையான கஸல்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
    ஹன்சிகா ரகசியங்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

    ReplyDelete
  13. வர்ணனையின் வசீகரம் வரியெங்கும் விரவிக் கிடப்பது அழகு...


    // இதுவரையில் முடியவில்லை
    உன்னை கலக்காமல்
    கவிதையை முடிக்க...!//

    என்னை தன் வசமாக்கிக் கொண்டு வசீகரித்தது இவ்வரிகள்...

    ReplyDelete
  14. எளிமையான வரிகளில் காதல் பூசி கொடுத்திருக்கிங்க அண்ணே .. யார்தான் மயங்காம இருப்பாங்க .. அப்ப விரைவில் திருமண விருந்து உண்டு..

    ReplyDelete
  15. தமிழ்மணம் மக்கர் பண்ணுது என்னனு பாருங்க

    ReplyDelete
  16. அற்புதம்.காதல் நிறைந்து வழிந்தோடுகிறது கவிதையில்.

    ReplyDelete
  17. தற்போது யாரின் சிணுக்களை
    நான் கவிதையாக்க...!/////

    அழகு.........
    கவிஞனுக்கு மட்டுமே வருகிற அழகான குழப்பம்......

    ReplyDelete
  18. மச்சி சூப்பர்///

    அரசன் சொன்னது போல த ம மக்கர் பண்ணுது....


    பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். மேலும் விவரங்களுக்கு:

    கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

    ReplyDelete
  19. அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அருமையான காதல் கவிதை..ஒவ்வொரு வரியும் அழகு!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!