07 August, 2012

இது இல்லாமல் மனிதனா...? வாழ்வது வீண்தானே...!



மூடிவைத்த உள்ளங்களில்
புதிய புதிய சிந்தனைகள்
முளைக்க மறுக்கும்...

காய்ச்சிய இரும்பில் தானே
பாயும் அம்பின் கூர்மையை
அறிய முடிகிறது...!

டிவரும் காற்றினத்தை
திசைத்திருப்புங்கள்
உலர்ந்துப்போன மூங்கில் கூட
ராகம் இசைக்கும்...!

நாம் என்று முயல்கிறோமோ 

அன்றைய நாளில் தான்
சகதியாய் இருக்கும் நம் மனதில்
செந்தாமரைகள் முளைக்கும்..!

வீழ்கின்றபோதெல்லாம்
எழுவதைப்பற்றியே யோசிப்போம்
ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!

ழைப்பின்றி ஓய்வெடுத்தால்
நாம் சிதைய வேண்டியிருக்கும்..

புதியதாய் வியர்வைகள் மலரும்போது
இதயத்தை ஊடுருவும் குருதியின் வாசனையை
நம் நாசி உணரும்...

வறில்லா உறுதியோடு 
ஒவ்வொறு நாளும் உழைப்போம்
நாளை வெற்றியின் மகுடங்கள்
நம் தலையை அழகுப்படுத்தும்...

பூமியில் நாம் சிந்திய வியர்வை
கண்டிப்பாக ஒருநாள் முளைத்து எழும்...
 
துவரை முடியாமல் தொடரட்டும்
நம் உழைப்பு பயணம்....




(1996 ம் ஆண்டு +2  படிக்கும்போது நடந்த கவிதைப்போட்டியில்
உழைப்பு என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை...
நீண்ட நாட்களுக்குபிறகு... அடிமாறாமல்...)


27 comments:

  1. ம்ம்ம் ...நல்ல கவிதை கவிஞரே

    ReplyDelete
    Replies
    1. தஙகள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

      Delete
  2. //1996 ம் ஆண்டு//கவிதையா .
    நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமா தலைவரே...

      பழைய டைரிகளை கிளரிக்கிட்டு இருக்கேன்...
      இதைமட்டும் மாற்றம் இல்லாமல் போட்டிருக்கேன்..

      மற்றகவிதைகளை இந்த காலத்துக்கும் வலைப்பதிவுக்கும் எற்றவாறு மாற்றி போடுவேன்...

      Delete
  3. கவிதை அருமை ....எல்லா வரிகளும் அருமை ..

    அட இது பிளாஷ் பேக் கவிதையா !! அருமை

    ReplyDelete
  4. #வீழ்கின்றபோதெல்லாம்
    எழுவதைப்பற்றியே யோசிப்போம்
    ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!#

    தன்னம்பிக்கையை விதைக்கும் வரிகள்...அருமை....tamilமணம் 4

    ReplyDelete
  5. உற்சாகமூட்டும் வரிகள்...

    மிகவும் பிடித்த வரிகள் :

    /// நாம் என்று முயல்கிறோமோ
    அன்றைய நாளில் தான்
    சகதியாய் இருக்கும் நம் மனதில்
    செந்தாமரைகள் முளைக்கும்..! ///

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

    ReplyDelete
  6. //நாம் என்று முயல்கிறோமோ
    அன்றைய நாளில் தான்
    சகதியாய் இருக்கும் நம் மனதில்
    செந்தாமரைகள் முளைக்கும்..!//
    அருமை!முழுக்கவிதையுமே.
    த.ம.6

    ReplyDelete
  7. //பூமியில் நாம் சிந்திய வியர்வை
    கண்டிப்பாக ஒருநாள் முளைத்து எழும்...//

    அருமையான வரிகள் (TM 7)

    ReplyDelete
  8. மிக அருமையான கவிதை

    ReplyDelete
  9. தவறில்லா உறுதியோடு
    ஒவ்வொறு நாளும் உழைப்போம்
    நாளை வெற்றியின் மகுடங்கள்
    நம் தலையை அழகுப்படுத்தும்...//

    நிச்சயமாக
    மனம் தொட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்! வாழ்த்துக்கள் நண்பா!

    இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

    ReplyDelete
  11. அருமையாக இருக்கின்றது. இளமையின் துடிப்பில் எழுதப்பட்ட துள்ளல் வரிகள் அருமை! அருமை!
    http://krishnalayaravi.com

    ReplyDelete
  12. உள்ளத்தை ஊக்குவிக்கும் கவிதை அருமை

    ReplyDelete
  13. உழைப்பின்றி ஓய்வெடுத்தால்
    நாம் சிதைய வேண்டியிருக்கும்..

    ReplyDelete
  14. வீழ்கின்றபோதெல்லாம்
    எழுவதைப்பற்றியே யோசிப்போம்
    ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!

    சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அருமை. அதுவும் அந்த வயதிலேயே...காதல் கவிதை வயதில் உழைப்பு பற்றிய கவிதை எழுதியதே பாராட்டக்கூடியது.சிறப்பான கவிதை.

    ReplyDelete
  16. அன்பின் சௌந்தர் - அருமை அருமை - கவிதை அருமை - உழைப்பின் பெருமை அழகாகக் காட்டப் பட்டிருக்கிறது - 12ம் வகுப்பிலேயே இவ்வளவு அருமையாகக் கவிதை எழுதினீர்களா ? பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. உழைப்புதான் உயர்வு......அருமையான உழைப்பின் கவிதை...!

    ReplyDelete
  18. வீழ்கின்றபோதெல்லாம்
    எழுவதைப்பற்றியே யோசிப்போம்
    ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!

    அந்த வயதில்! இந்த வரிகள்! அருமை!

    என்னைக் கவர்ந்த கருத்து! சா இராமாநுசம்

    ReplyDelete
  19. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215
    9894124021

    ReplyDelete
  20. உழைப்பின் உன்னதத்தை
    உணர்த்திய வரிகள்

    பதிவர் விழாவில்
    ஓடியாடி உழைத்த
    உள்ளத்திற்கு
    இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!