13 September, 2012

வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா...?


நம்வாழ்க்கையை நிர்ணயிப்பது நாம் மட்டுமே அல்ல.. நம்மோடு சேர்ந்து இந்த சமூகமும்தான். நாம் பேசும் வார்த்தைகள், எண்ணங்கள் நன்றானதாக இருந்தால் மேலும் நம்மை சுற்றியிருப்பவர்கள் நல்ல தன்னப்பிக்கை ஊட்டுபவராக இருந்தால் நம்முடைய வாழ்க்கை இன்னும் பிரகாசமானதாக இங்கு ஒளிவிடும்.

ஒரு அடி முன் எடுத்துவைத்தால் வழுக்கிவிடும் போகதே என்று சொல்லுபவர்க்ள அதிகம் இருக்கும் இந்த தேசத்தில், தைரியமாக முன்னேறு என்று நம்பிக்கையுட்டும் மனிதர்கள் கிடைப்பவர்கள் மட்டும்தான் இங்கு வெற்றிக்கனியை பறிக்கிறார்கள்.



நம்பிக்கையூட்டும் வைர வரிகளைக் கொண்ட ஒரு ஜென்கதை...!

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.

எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கொஞ்சம்கூட இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?

கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”

“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”

நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.

தலை…!

வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.

அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!

துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.

“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.

நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!


நாம் வெற்றியடைய வேண்டும் என்றால் நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையுடன், அருகில் இருக்கும், மற்றும் தூண்டுகோலாய் இருப்பவரின் வலுவூட்டலும் தமக்கு உறுதுணையாக இருந்தால் நாம் ஜெயிப்பது நிஜம்...


நாமும் மற்றவர்களை ஊக்கப்படுத்துபவர்களாகவும், நம்பிக்கை ஊட்டுபவர்களாகவும் இருந்து செயல்படுவோம். நாமும் வெற்றியடைவோம்..

18 comments:

  1. நல்ல கதை.. உண்மைதான் வெற்றிபெற தன்னம்பிக்கை மட்டும் தான் அவசியம்! :)

    ReplyDelete

  2. தன் நம்பிக்கையை வலியுறுத்தும் அருகையான கதை!

    ReplyDelete
  3. தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு

    ReplyDelete
  4. வெற்றியின் முதல் படி தன்னை நம்புவது மட்டுமே .. நல்ல பதிவு நன்றி

    ReplyDelete
  5. வெற்றியும் தோழ்வியும் நம் கையில்.

    கதையின் உயிர் நாடி
    நமக்குத் தருகுது நம்பிக்கை.

    ReplyDelete
  6. நல்லதொரு பதிவு! நம்பிக்கை ஊட்டும் நண்பர்கள் இருந்தால் மலையையும் தாண்டலாம்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html


    ReplyDelete
  7. நல்ல கதை..ஒருவனின் வெற்றி என்பது தன் நம்பிக்கையில் தான் இருக்கிறது..

    ReplyDelete
  8. தன்னம்பிக்கை ஓட்டும் கதை

    ReplyDelete
  9. நல்லதொரு பதிவு சார்
    ஆனாலும் உண்மையில் வெற்றி என்ற ஒன்றைத் தீர்மானிப்பது இறைவன் தான் எவ்வளவு ஊக்கங்கள் கொடுத்து அனுசரித்துப் போணவர்களும் தோற்றதாக சம்பவங்கள் இருக்கின்றனவே...

    ReplyDelete
  10. அன்பின் சௌந்தர் - அருமையான சிந்தனை - கதை நன்று -எப்பொழுதும் மனம் தளராமல் த்னன்னம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  11. தன்னம்பிக்கை தளராத மன உறுதி இருந்து விட்டால் வெற்றி எப்போதும் நமக்கு சொந்தமே... நல்ல ஜென் கதை... நன்றி...

    ReplyDelete
  12. சிறந்த பகிர்வு.

    ReplyDelete
  13. தளராத மன உறுதியும் தன்னம்பிக்கையும் தேவைப்படுகிறது.அதுவே கடவுளாக மாறி காட்சி அளிக்கையில் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  14. உழைப்பு,தன்னம்பிக்கை இவையே முக்கியம்!

    ReplyDelete
  15. வெற்றி
    இந்த வேல்வெற்றிக்கல்ல
    தன்னம்பிக்கைக்கு

    ReplyDelete
  16. //நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை(அவரு இல்லீங்க)//
    இதைத்தான் "ஷோலே" படத்தில் சுட்டிருந்தார்களோ?

    ReplyDelete
  17. அன்பின் சௌந்தர் - என் விகடனில் பிரசுரிக்கப் பட்ட இக்கதை - நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. நாம் வெற்றியடைய வேண்டும் என்றால் நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையுடன், அருகில் இருக்கும், மற்றும் தூண்டுகோலாய் இருப்பவரின் வலுவூட்டலும் தமக்கு உறுதுணையாக இருந்தால் நாம் ஜெயிப்பது நிஜம்...

    அருமையான நம்பிக்கையூட்டும் வரிகள் மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!