25 September, 2012

மின்தடையை போக்க ஜெயலலிதா அவர்கள் இந்த நடிவடிக்கை எடுப்பார்களா..?


மின்பற்றாக்குறை சமீபகாலமாக அதிகமாக நாம் ‌கேட்கும் வார்த்தை. தற்போது தமிழகத்தில் மின்தடை கிட்டதட்ட 14 முதல் 16 மணிவரை நிறுத்தப்படுகிறது. இதில் அதிகம் பாதிப்பது ஏழைகளும், குறு சிறு விவசாயிகள், தொழிற்சாலைகள் தான். ஆனால் இந்த மின்தடையால் மேல்தட்டுமக்கள் பாதித்ததுமாதிரி தெரியவில்லை.

அரசு மேல்தட்டு மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்.

மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் இப்போது மக்களுக்கு பல்வேறு உபதேசங்களைச் செய்ய ஆரம்பித்துள்ளது மின்வாரியம். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று மக்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்துள்ளனர். மின்வாரியத்தின் இந்த பலே யோசனைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் நம்மால் முடிந்த சில பல யோசனைகளை மின்வாரியத்திற்குத் தெரிவிப்போம்.. இதுவும் கூட கரண்ட்டை மிச்சப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில்...

 how save power some tips tneb
- போர்லேண்டர் உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கும் இந்த அட்வைஸை விரிவுபடுத்தலாம். தேவைப்பட்டால் தனிச் சட்டமே கூட கொண்டு வரலாம். காரணம், பொதுமக்களை விட அதிக அளவில் ஏசியில் புழங்குவது இவர்கள்தான்.
- 2 மாதங்களுக்கு தமிழகத்தில் எங்குமே அரசியல் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம்.


- தலைவா வா, தங்கத் தமிழே வா என்ற ரேஞ்சுக்கு ஆங்காங்க மின்னும் விளக்கொளியில் அலங்காரம் செய்து தட்டி வைப்பது, போர்டு வைப்பது இத்யாதி இத்யாதி விவகாரங்களை 2 மாதங்களுக்கு தடை செய்து உத்தரவிடலாம்.

- அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான டியூப் லைட்டுகள், சீரியல் செட்டுகள், விளக்கொளியில் ஜொலிக்கும் கட் அவுட்கள் ஆகியவற்றுக்கு 2 மாதத்திற்கு வேண்டுமானால் தடை விதிக்கலாம்.

- முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கு மட்டும், அவர்கள் குடியிருக்கும் தெருவுக்கு மட்டும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை ஒரு இரண்டு மாதத்திற்குத் தடை விதித்துப் பார்க்கலாம்.

- அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ஏசி மெஷினே பொருத்தக் கூடாது என்று கூட உத்தரவிடலாம். எல்லாம் 2 மாசத்துக்குத்தானே...!


- இந்த 2 மாத ஏசி நிறுத்தம், அயர்ன் பாக்ஸ் நிறுத்தம், இன்டக்ஷன் ஸ்டவ் நிறுத்தம், வாட்டர் ஹீட்டர் நிறுத்தம் ஆகிய உத்தரவுகளை அமைச்சர்கள் அளவிலும் கூட விரிவுபடுத்தி தமிழக மக்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கலாம்.

- பிறகு ஆடம்பரமாக நடத்தப்படும் கட்சிக்காரர்கள் கல்யாணங்களின்போது பெருமளவில் விளக்குகளைப் போட்டு கட் அவுட் வைப்பது, தலைவர்களின் சீரியல் செட் கட் அவுட் வைப்பது, சாலை நெடுகிலும் டியூப் லைட்டுகளைக் கட்டுவது போன்றவற்றையும் கூட 2 மாதத்திற்குத் தடுத்துப் பார்க்கலாம். முடிந்தால் கல்யாணமே பண்ணாதீங்க, 2 மாதத்திற்கு என்று கூட அட்வைஸ் கொடுத்துப் பார்க்கலாம். நன்றி தட்ஸ் தமிழ்

இப்படி பல்வேறு வகையிலும் கூட மின்சாரத்தை நாம் சிக்கணமாக சேமித்து தமிழக மக்களுக்கு விரிவான முறையில் வழங்க முடியும். மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்தும் யோசித்தால் நல்லது!

விரைவான விரிவான நடைமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் நல்லதொரு மின்விநியோகம் நடைப்பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

12 comments:

  1. மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன?

    சிங்கள் பேஸ்ல கைவைக்கலாம் - திரீ பேஸ்ல கைவைத்தா என்னா ஆகும்னு - நல்லா கொடுக்குறீங்களே ரோசனை ச்சே யோசனை

    ReplyDelete
  2. என்னது ரெண்டு மாசத்துக்கு கல்யாணம் பண்ண கூடாதா ? இது சரியில்லை அண்ணே ..
    நடக்குற காரியமா ?

    ReplyDelete
  3. அப்படியே வழிமொழிகிறேன் ..இதை முதல் அமைச்சரின் இல்லத்திலிருந்தே ஆரம்பிக்கலாம்...

    ReplyDelete
  4. நல்ல யோசைனைகள் தான்... நடக்குமா... ?...?...?...

    ReplyDelete
  5. ஏனப்பா வருசத்துக்கு மூணு சிலிண்டர் தான் தரானுங்க. இண்டெக்சன் கட் பண்ணா சோத்துக்கு என்ன செய்றது? உருப்படியான யோசனை சொல்லுயா... ரேஷன் கடைல சூர்ய மின்சாரம் தயாரிக்கற எந்திரம் குடுக்க சொல்லுங்கைய்யா...

    ReplyDelete
  6. ஆஹா! ஆஹா! அருமை, இப்படி செய்தால் என்ன? அரசியல்வாதிகள் வீடுகளிலும் கரண்ட்டு கட் , மின்சாரம் தமிழ்நாட்டிற்கு நிரந்திரமாக கிடைக்கும்வரை இப்படி ஒரு சட்டம் வந்தால் எப்படியாவது அண்டை மாநிலங்களில் காசு கொடுத்தாவது வாங்கிடுவார்கள்.

    ReplyDelete
  7. நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
    கருத்தெல்லாம் சொல்றீங்க...

    ஆஹா! இதை இப்பதான் படித்தேன். நீங்களும் நல்லவங்கதானே, எனது வலைப்பதிவில்
    VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி?
    என்ற பதிவு போட்டிருக்கேன்,
    http://semmalai.blogspot.com/2012/09/semmalai.blogspot.com.html
    கருத்து சொல்லுவீங்களா???

    ReplyDelete
  8. என்னத்தை செஞ்சு...!

    ReplyDelete
  9. அன்பின் சௌந்தர் - அருமையான ஆலோசனைகள் - கடைப்பிடிக்கலாமே - மின் வாரியம் செய்யுமா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. நல்ல யோசனைகளை சொல்லியிருக்கீங்க..!

    ReplyDelete
  11. நல்ல சிந்தனையை சொல்லியிருக்கீங்க சகோ......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!