07 September, 2012

நாங்கெல்லாம் அப்பவே அப்படி..! நித்தியானந்தா Vs சிரிப்பானந்தா

தோழி 1 : இன்னைக்கு எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் சண்டை...

தோழி 2 : கோபத்தில சாப்பிடாம போயிட்டாரா..?

தோழி 1 : இல்லை..! சமைக்காம போயிட்டாரு...!

**********************************************

முத்து : என் பையன் முதல் வகுப்பில் பாஸ் பண்ணிட்டான்..

சித்து : அப்புறம் என்ன படிக்க வைக்க போற..?

முத்து : இரண்டாம் வகுப்பு தான்...!

**********************************************
நோயாளி : சிஸ்டர்... பிளட் (Blood) பற்றின புத்தகம் ஏதாவது இருந்தா கெர்டுங்க..!

சிஸ்டர் : எதுக்குங்க..?

நோயாளி : எனக்கு நாளைக்கு பிளட் டெஸ்ட்ன்னு டாக்டர் சொன்னார்.. அதுக்காக ஏதாவது படிச்சி வைக்கத்தான்..!

நிருபர் : உங்க புதுப்படத்துக்கு ”டீ கடை” ன்னு பெயர் வச்சியிருக்கீங்களாமே?

டைரக்டர் : ஆமாம், படத்துல முக்கியமான நாட்டு நடப்பு, அரசியல் விவகாரங்களை நிறைய சொல்றோம்.. அதான்..

**********************************************
மாமியார் : அம்மாடி..! நல்ல புத்தகம் ‌கொடுத்தே போ...! சிரிச்சி சிரிச்சி பாதி உசுரே போயிடிச்சி..!

மருமகள்: அப்படின்னா இன்னும் ஒரு முறை படிங்க அத்தை...!

**********************************************

உங்க தூக்க மாத்திர பிஸினஸ் எப்படி இருக்குது...

 இப்ப தூங்குது..!

**********************************************


அய்யோ ..! தலைப்பை பார்த்து இந்த பிளாக்கை படிக்க வந்தேன்ல...
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...!

40 comments:

  1. //அய்யோ ..! தலைப்பை பார்த்து இந்த பிளாக்கை படிக்க வந்தேன்ல...
    எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...!//

    முட்டிக்கக் காரைத் தேடிக்கிட்டிருக்கேன்!
    ஆனாலும் ஜோக்ஸ் நல்லாவே இருக்கு!

    ReplyDelete
  2. ப்ளட் டெஸ்ட் ஜோக்தான் புதுசு. மத்ததெல்லாம் படிச்ச மாதிரிதான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அப்படியே அடிச்சு விடுறதுதான்...

      Delete
  3. ஹா... ஹா.. .உங்களுக்கு மட்டும் இந்த படங்கள் எல்லாம் எங்கே கிடைக்குது...?

    ReplyDelete
    Replies
    1. அப்படியே வலையிலே வலைய ைவீசுவோம்...
      அப்படியே சிக்கறதுதான்...

      Delete


  4. பல் வகை நகைச்சுவை! படமோ தனிச் சுவை!

    ReplyDelete
  5. மாமியார் மருமகள் ஜோக் சூப்பர் நண்பரே!

    ReplyDelete
  6. நகைச்சுவைகள் சூப்பர்.

    ReplyDelete
  7. அய்யோ ..! தலைப்பை பார்த்து இந்த பிளாக்கை படிக்க வந்தேன்ல...
    எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...!

    ReplyDelete
  8. இருங்க முதலில் தலைப்புக்கு என்றே தனி சென்சார் வேண்டும் என்று போராட்டம் நடத்திட்டு வாறன் ..

    நகைச்சுவை அருமை என்பதை தெரிவித்து கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது.. மக்களை கவர்வதற்காக இப்படி தலைப்பு..

      இனி இதுபோல் வைக்க மாட்டேன்..

      Delete
  9. இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
    வந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
    மறக்காம ஓட்டும்!
    http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html

    ReplyDelete
  10. ஜோக்கும் சூப்பர்..படங்களும் சூப்பர்

    ReplyDelete
  11. ரசிக்க வைத்த படங்கள்! சிரிக்கவைத்த நகைச்சுவை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    காசியும் ராமேஸ்வரமும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
    உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

    ReplyDelete
  12. நாங்கெல்லாம் அப்ப இருந்தே சினிமா பார்க்கிறோம். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', எங்க வீட்டு மகாலக்ஷ்மி', மாமியார் மெச்சிய மருமகள்' என்று கதைக்கேற்ற தலைப்புடன் படங்கள் வந்தன. 'டீ கடை'யும் நல்லாதான் இருக்கு.
    ஜோக் எல்லாம் அருமை. எனக்கு இன்னமும் வேணும்.

    சகாதேவன்

    ReplyDelete
  13. //நாங்கெல்லாம் அப்பவே அப்படி..! நித்தியானந்தா Vs சிரிப்பானந்தா //

    அண்ணே இப்ப எல்லாம் நீங்க பதிவு போட்டா தலைப்ப்பு எல்லாம் பார்க்கிறதே இல்ல.. வாண்டடா உள்ளே நுளைறது தான்.. வாசித்து விட்டு தலைப்பை பார்த்தல் மொட்டை தலை முழங்கால் தான்..

    பப்ளிக் அலெர்ட் ஆக முதல் இந்த ராணுவ ரகசியத மாத்திடுங்க அண்ணே.. ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக மாத்திடுறேன் நண்பரே...

      Delete
  14. ஐயோ....இதுவரை படித்திடாததுகள்..கேட்டுடாதுகள்...
    சிரிச்சேன் ரசிச்சேன்..

    ReplyDelete
  15. ஜோக்குகளும் படங்களும் அருமை

    ReplyDelete
  16. ஜோக்ஸ் நல்லா இருந்தது.. நட்பான ஆலோசனை: தலைப்புகளை பதிவுக்கு related ஆக வையுங்களேன்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிகாக நண்பரே...

      பதிவுக்கு கொஞ்சம் வசிகரம் சேர்க்கவே
      தலைப்புதான் சம்மந்தம்இல்லாம் இருக்குமே தவிர கவிதை வீதியில் பதிவுகள் எப்போதும் தரமானதாகத்தான் இருக்கும்...

      இனி இதுபோல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்...

      Delete
  17. அன்பின் சௌந்தர் - ஜோக்ஸ் அத்தனையும் பிரமாதம் - சிரிச்சேன் ( படிச்ச்சா சிரிக்கணூமா - இரசிக்கனுமா - சலிச்சுக்கணூமா - தெரில ) -

    கடைசில சுவத்துல முட்டிக்கிட்டேன் - தலைப்பப் பாத்து வரல - இருந்தாலும் .....


    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..!

      Delete
  18. நகைச் சுவையும் அருமை , படங்களும் அருமை

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!