18 October, 2012

இவைகள் உண்மையில் சாத்தியமா..?


உன்னிடம் நான்
நிறையப் பேசவேண்டும்
ஒரே வார்த்தையில்...!

உன்னைப் பற்றி
அதிகமாய் கவிதை பாடவேண்டும்
ஒற்றை வரியில்...!

உனக்காக நான்
இந்த பூமியை வென்று விட வேண்டும்
ஒரே நெடிக்குள்..!

உன்னையே எனக்குள்
சேமித்து வைக்க வேண்டும்
ஒருதுளி உயிராய்..!

உன் நினைவுகள் விட்டு
விலகாமல் பயணிக்க வேண்டும்
ஒவ்வொறு அடி தூரத்திற்கும்...!

உன்னை என்னுள்
நான் முழுமையாய் சுமக்க வேண்டும்
ஒரு மயிலிறகாய்...!

நான் உன்னை பிரியாமல்
இந்த பூமியில் வாழ்ந்திட வேண்டும்
ஒரு யுகம் முடிய..!

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...!

16 comments:

  1. புடம்போட்டு வைத்த
    எண்ணங்கள் எல்லாம்
    இங்கே அழகிய
    கவி வரிகளாய்.....

    ReplyDelete
  2. உன்னை என்னுள்
    நான் முழுமையாய் சுமக்க வேண்டும்
    ஒரு மயிலிறகாய்...!



    ஒவ்வொரு காதல் நெஞ்சங்களின் ஆசையாக இருப்பதை பதிவு செய்துவிட்டீர்கள்.

    அருமை நண்பரே...

    ReplyDelete
  3. சாத்தியமாகும்...
    உண்மைக் காதலில்

    ReplyDelete
  4. அருமை வரிகள்...

    ஒரு யுகம் போதுமா...?

    ReplyDelete
  5. மிக மிக அழகான கவிதை வரிகள்...பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. //உன்னிடம் நான்
    நிறையப் பேசவேண்டும்
    ஒரே வார்த்தையில்...!//

    அழகான வரிகள்! அதிகம் ரசிக்க வைத்தது!

    ReplyDelete
  7. கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்!

    ReplyDelete
  8. ம்ம்ம்ம் ....அருமை கவிஞரே

    ReplyDelete
  9. உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் போலிருக்கிறது.......

    கவிதையைப் பாரட்டத்தான்!

    படத்துக்கேற்ற கவிதை!

    கவிதைக்கேற்ற படம்!

    ReplyDelete

  10. வரிதோறும் காதல் வடிகிறது!

    ReplyDelete
  11. அன்பின் சௌந்தர்

    கவிதை அருமை - சிந்தனை அருமை - சாத்தியமே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. உனக்காக நான்
    இந்த பூமியை வென்று விட வேண்டும்
    ஒரே நொடிக்குள்! \\

    நல்லாருக்கு.

    ReplyDelete
  13. ஒருமையான சிந்தனை.. அழகான உணர்வின் வெளிப்பாடு நண்பரே..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!