17 November, 2012

சர்ச்சை மன்னன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம்


அவரது மறைவால் சிவசேனைத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.

மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வந்தனர். நேற்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

இன்று காலையிலும் இதே நிலை நீடித்தது. மாலை 3.30 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் அவரது வீட்டு வாசலில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இந்த செய்தி வெளியில் இருந்த சிவசேனா கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பரிமாறப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.

பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் மாராட்டிய மாநிலமெங்கும் பதட்ட நிலை தொடர்கிறது.


வாழ்க்கை வரலாறு...

பாலா சாஹேப் டாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால் கேஷவ் டாக்கரே மராட்டி: बाळासाहेब केशव ठाकरे(1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி பிறந்தவர். இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மஹாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.


ஆரம்ப கால வாழ்க்கையும் தொழிலும்

பாலா சாஹேப் டாக்கரே (மாதம் இரு முறை வெளிவரும் பத்திரிகையான பிரபோதன் அல்லது "ஞானோபதேசம்" என்று பொருள்படும் பத்திரிகையில் தாம் எழுதிய கட்டுரைகளால், பாலகட் மத்தியப் பிரதேசத்தில், பிரபோதாங்கர் டாக்கரே என்றும் அறியப்பட்ட) கேஷவ் சீதாராம் டாக்கரே என்பவரின் மகனாகக் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கேஷவ் டாக்கரே ஒரு முற்போக்கு சமூக சேவகர் மற்றும் எழுத்தாளராக விளங்கினார். அவர் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகப் பணியாற்றி (ஒன்றிணைந்த மஹாராஷ்டிரா இயக்கம் என்றே நேரடியாகப் பொருள்படுவதான) சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால்|சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால் என்னும் இயக்கத்தின் மூலம் 1950ஆம் ஆண்டுகளில் மராத்திய மொழி பேசும் மாநிலமாக மஹாராஷ்டிரா உருவாவதிலும், அதன் தலைநகராக மும்பய் அமைவதிலும் முக்கியப் பங்காற்றினார்.


பாலா சாஹேப் டாக்கரே தமது தொழில் வாழ்க்கையை மும்பய் நகரில் 1950ஆம் ஆண்டுகளில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்னும் ஒரு பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராகத் துவங்கினார். அவரது கேலிச் சித்திரங்கள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஞாயிறு பதிப்புகளிலும் வெளியாயின. 1960ஆம் வருடம் அவர் மர்மிக் என்னும் கேலிச்சித்திர வார இதழ் ஒன்றைத் தனது சகோதரருடன் இணைந்து துவக்கினார். குறிப்பாக குஜராத்தியர் மற்றும் தென்னிந்தியக் கூலி வேலையாட்களை இலக்காக்கி, மும்பயில் மராத்தியர்-அல்லாதவர்களின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான பிரசாரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

1966ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி, அவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் (மராத்தியர்கள் என்றழைக்கப்படும்) பிறப்புரிமையாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நோக்கத்துடன் சிவ சேனாவைத் துவக்கினார். சிவ சேனாவின் ஆரம்ப கால நோக்கமானது தென்னிந்தியர்கள், குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள் போன்று வேறு மாநிலங்களிலிருந்து வந்த குடியேறிகளுக்கு எதிராக மராத்தியர்கள் பணிககாப்பு பெறுவதை உறுதி செய்வதாகவே இருந்தது.

அரசியல் ரீதியாக, சேனா பொதுவுடமைக் கட்சிக்கு எதிரானதாக விளங்கி, மும்பயின் பிரதான வர்த்தகத் தொழிலாளர் சங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியப் பொதுவுடமைக் கட்சியிடமிருந்து பறித்து, பெரும்பாலும் குஜராத்தி மற்றும் மார்வாடி வணிகத் தலைவர்களிடமிருந்து காப்புப் பணம் வசூல் செய்வதாகவே இருந்தது. பின்னர், இது பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி-சிவ சேனா கூட்டணி 1995ஆம் வருடம் மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1995 முதல் 1999வது வருடம் வரை அரசு புரிந்த காலகட்டத்தில் டாக்கரேயை "தொலைவிலிருந்து இயக்குபவர்" என்று அடைபெயர் இட்டு அழைத்தனர். இதன் காரணம் அவர் அரசின் கோட்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு பெரும்பங்கு ஏற்றதேயாகும்.


சிவ சேனா கட்சி, மராத்தி மனூக்களுக்கு (சாமானிய மராத்தியர்கள்) மும்பய் நகரில் பொதுத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் உதவியதாக டாக்கரே கோருகிறார். சிவ சேனா அரசு புரிந்த கால கட்டத்தில், தனது அடிப்படை சித்தாந்தமான 'மண்ணின் மைந்தர்கள்' என்னும் கருத்தாக்கத்துக்கு மாறாக, மராத்திய இளைஞர்கள் பெரும்பாலானோரின் முக்கியப் பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளான பொதுவுடமைக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. (தகவல்கள் விக்கி பீடியா..)

இஸ்லாமியர்களுக்கு எதிராக,  வடஇந்தியர்களுக்கு எதிராக, அப்துல் கலாம் மற்றும் காதலர் தினம், என பல்வேறு நிகழ்வுகளுக்கும், அதிகபடியான போராட்டங்கள் கருத்துகள் என இந்தியாவில் அதிக சர்ச்சைகளை கிளப்பியவர் இவராகத்தான் இருக்க முடியும். அவர் இந்த உலகை விட்டு மறைந்தார் அவர் ஆத்மா சாந்தியடை வேண்டுகிறேன்.

8 comments:

  1. எனது அஞ்சலிகள்

    ReplyDelete
  2. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  3. எனது ஆழ்ந்த இறங்கல்களும்.

    ReplyDelete
  4. பிரிந்த ஆன்மா அமைதி அடையட்டும்

    ReplyDelete
  5. தாக்கரே பெயருக்கேற்றவாறு தனது அதிரடிப் பேச்சால் யாராக இருந்தாலும் அஞ்சாது தாக்கியவர் ஆயிற்றே.

    ReplyDelete
  6. மகாராஷ்ட்ர மாநிலத்தின் சரித்திரத்தில் ஒரு நீங்கா இடம் பிடித்தவர்

    ReplyDelete
  7. தங்கள் பதிவு தாக்கரே பற்றி அறிய உதவியது!

    ReplyDelete
  8. பால்தாக்ரே இந்த நாட்டுக்காகவும் நாட்டுமக்களுககவும் என்ன செய்தார் பிரிவினை வாதத்தையும் ஹிந்து முஸ்லிம் கலவரத்தையும் மூட்டிய ஒருவனுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் பண்ணுதே, இது இந்திய ஜனயகத்தின் மேல் ஒரு நீக்கா கரையை ஏற்படுத்திவிட்டனர் ஆட்சியாளர்கள், இந்த நாட்டிற்காக தன் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு கொடுக்கும் ஆரசு மரியாதையை இப்படி பொரிக்கிகளுக்கும், ரௌடிகளுக்கும் இந்தியாவின் தேசிய கொடிஅறைகம்பாத்தில் பறக்கும் அளவிற்கு இந்த ஆட்சியாளர் களின் மதி கீழ்த்தரமாக போய்விட்டதே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!