28 November, 2012

என்னுடைய இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்புமா..?



லைக்கணம் கொண்டோரெல்லாம்
தரணியில் நிலையாது

அழிந்துத்தான் போகவேண்டும்
“ஒரு தீக்குச்சியைப்போல...”

சித்த வயிற்றுக்கு ஈயாமல்
பதுக்கப்பட்ட செல்வங்கள் யாவும்
கொள்ளைத்தான் போகும்
“ஒரு தேன் கூடு போல...”


லகின் ஒவ்வொறு நொடியிலும்
வாழ்க்கையை ரசித்து வாழாத யாவரும்
சிதைந்துத்தான் போக வேண்டும்
“ஒரு நீர்குமிழி போல...”
 

ன் மனமென்ற தோட்டத்தில்
சுயநல விதையை விதைத்தோரெல்லாம்
கலைந்து தான் போகவேண்டும்
“ஒரு வெண்மேகம் போல...”


பிறருக்கு தீதென்று அறிந்தும்
கூடாத ஒரு செயலை செய்வோரெல்லாம்
நாளை பொசுங்கித்தான் போக வேண்டும்
“ஒரு விட்டில்பூச்சி போல...”


னிதத்தில் இருந்து தெய்வத்திற்கு

மாறவேண்டிய பரபரப்பெல்லாம் ‌வேண்டாம்
மனித குணத்தோடு வாழ்வோம்....
“ஒன்றும் அறியாத ஒரு குழந்தை போல...”



16 comments:

  1. Replies
    1. என்னன்னே பண்றது... சமீபத்தில் நாம எது சொன்னாலும் பிரச்சனையை கிளப்பிடறாங்களே...

      Delete
  2. கருத்துகள் கவர்ந்தன..

    ReplyDelete
  3. ஒவ்வொன்றையும் சொன்ன விதம் மிகவும் அருமை...

    சிறப்பாக முடித்துள்ளீர்கள்... குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று தானே...

    ReplyDelete
  4. மனித குணத்தோடு வாழ்வோம்இதைவிட தெளிவா வேறு என்ன தான் சொல்ல முடியும்.

    ReplyDelete
  5. சூப்பர் நண்பரே. குறிப்பாக தேன் கூடு மேட்டர் அருமை.

    ReplyDelete
  6. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்
    ஆனாலும் தேனீக்களின் உவமைப்படுத்தல் சற்று சிந்திக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  7. //மனித குணத்தோடு வாழ்வோம்....
    “ஒன்றும் அறியாத ஒரு குழந்தை போல...”//

    கலக்கிட்டீங்க கவிஞரே!

    ReplyDelete
  8. சிறப்பான படைப்பாக்கம் அண்ணே ... ஆனா இதுக்கும் இப்படியொரு தலைப்பா? நல்லா இருக்கு ஆசிரியர் அண்ணா

    ReplyDelete
  9. சௌந்தர் கவிதை அருமை. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் தேன் கூடு பற்றியது தான். பிறருக்கு தான் உதவப் போகிறது என்று தெரியாமல் என்ன ஒரு சுறுசுறுப்பாய் பணி புரிகின்றன இந்த தேனீக்கள் .அருமை

    ReplyDelete

  10. அனைத்தும் ஆழகு!பொருள் பொதிந்த வரிகள்! சௌந்தர்!

    ReplyDelete
  11. மனிசரெல்லாம் குழந்தைகளாக இருந்தாள உலகில் அமைதியாக நாம வாழலாம்
    வாழ்த்துக்கள் சகோதரம்

    ReplyDelete
  12. அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - உவமைகள் தேர்ந்தெடுக்கப் ப்ட்டு அவ்ற்றினை 4 வரிகளில் விளக்கிய கவிதைகள் அருமை. அத்தனையும் நன்று. குழந்தை, விட்டில் பூச்சி, வெண்மேகம், நீர்க்குமிழி, தேன்கூடு, தீக்குச்சி - அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!