31 December, 2012

விஜய், விஜயகாந்த், பவர்ஸ்டார் / 2012 -ன் Top 10 பிரபலங்கள்


2012-ல் நம் பதிவுலகில் ஆயிரக்கணக்காக பதிவுகள் வெளிவந்திருக்கும். நானே 143 பதிவுகள் போட்டிருக்கே பாருங்களேன். ஒவ்வொறுவரும் தன்னுடைய படைப்புகளை மற்றவர்கள் ரசிக்கும் படி அழகாக தொகுத்து கொடுத்திருந்தனர். சில பொது தலைப்புகளில் மற்றும் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி அதிக பதிவுகள் வெளிவந்திருந்தது.


அப்படி 2012-ம் ஆண்டில் எந்த தலைப்புக்கு அல்லது எந்த விஷயத்துக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்து அதிக பதிவுகள் வந்தது என்று சிறந்த 10 அம்சங்களை இங்கு தொகுத்திருக்கிறேன். இவைகள் வரிசைப்படுத்தப்படவில்லை. அவைகள்.

*****************************************



இந்தவருடம் அதிகஅளவில் அனைத்து பதிவர்களும் பகிர்ந்துக்கொண்ட செய்திகளில் முதல் இடம் வகிப்பது இந்த மின்தடை குறித்த பதிவுகள்தான்.

கவிதை, கட்டுரை, கண்டன பதிவுகள், கேலி சித்திரங்கள், பேஸ்புக்கில் தகவல்கள் என அதிகமானோர் இந்த மின்தடையை பதிவிட்டார்கள்.

*****************************************
 
இந்த வருடமும் விஜயகாந்த் பற்றிய அதிரடி பதிவுகள் வந்தது. சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றம், தன்னுடைய கட்சி அமைச்சர்கள் அதிமுக வுக்கு ஆதரவான செயல்பாடு போன்ற விவகாரங்களில் விஜயகாந்த் பரபரப்பாக காணப்பட்டார்.

*****************************************
 அம்மாவை பற்றி சொல்லவே தேவையில்லை.
இந்த வருடம் முழுவதும் அம்மா மற்றிய பதிவுகள் அதிகஅளவில் வந்து பதிவுலகை கலக்கியது.

*****************************************

விஜய் இந்த வருடமும் அதிக பதிவுகளில் இடம் பிடித்து அதிக பதிவர்களுக்கு அதிக அளவில் ஹிட்ஸ் எடுக்க உதவினார். நண்பன் படம் அது குறித்த விமர்சனம், துப்பாக்கி படம் விமர்சனம், முஸ்லீம் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு என அஜித்தை விட விஜய் இந்த வருடம் அதிக பதிவுகளில் இடம்பிடித்தார்.

*****************************************

ஆகஸ்ட் மாதம் ‌சென்னையில் நடைப்பெற்ற  பிரமாண்ட பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி முடிவு செய்ததில் இருந்து அதன் காணொளிகளை வெளிட்ட வரை அது குறித்து எண்ணற்ற பதிவுகள் பதிவுலகால் பகிரப்பட்டது. அதுவும் பரபரப்பு தலைப்புளுடன்.

*****************************************

பவர் ஸ்டார் இந்த வருடமும் பதிவுலகால் அதிக அளலில் கவனிக்கப்பட்டார். அவருடைய கைது, திரைப்படங்கள், போன்றவை அதிக அளவில் இடம்பிடித்தது. இன்னும் தலைப்பில் பவர்ஸ்டார் என்று பதிவிட்டால் ஹிட்ஸ் அள்ளும் என்று நிறைய பதிவர்களுக்கு தெரியும்.

*****************************************
இந்த ஆண்டு இருமுறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதிதேர்வு, VAO, TNPSC, போன்ற ‌தேர்வுகள் குறித்த பதிவுகளும் அதுகுறித்த செய்திகளும் அதிக இடத்தை பிடித்திருந்தது.

*****************************************

படம் துவங்கியல் இருந்து பரபரப்பு தகவல்களை கொண்டதாக இந்த விஸ்வரூப தகவல்கள் இருந்து வருகிறது.

*****************************************

அன்னீய முதலீடு குறித்த வால்-மார்ட் குறித்த பதிவுகளும் அதிக அளவில் இடம் பிடித்தது.

*****************************************

 ‌எல்லாவருடமும் போல் இந்த வருடமும் அதிக பதிவுகளில் இடம்பிடித்தவர் அறிக்கை அறிஞர் நம்ம கலைஞர்.

*****************************************

வேறு ஏதாவது அதிக அளவில் பதிவுகளாக வந்திருந்தால் தங்களுடைய கருத்தாக பதிவுசெய்யுங்கள்.

7 comments:

  1. 148 தந்ததற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...

      தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

      Delete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க...

      தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்....

      Delete
  3. மிக்க நன்றிங்க...

    தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - 148 பதிவுகள் - பெரும்பாலும் படித்து மறுமொழி போட்டிருப்பேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!