26 December, 2012

வடிவேலுவின் இளமைக்காலம்... அதிர்ச்சி பின்னணி...! மனம் திறக்கிறார் வடிவேலு....

அரசியலுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய வைகைப்புயல் வடிவேலு முதல்முறையாக தன் மனதை புழுங்கிக்கொண்டிருக்கும் இளமைக்கால வாழ்க்கையில் சினிமாவுக்கு முன் செய்த வேலைகளைப் சொல்கிறார். 

“காலேஜெல்லாம் போய் படிக்கணும்.... பெரிய வேலைக்கு போகணும்னு சின்ன வயசில ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன், ஆனா பள்ளி படிப்பையே முழுசா என்னால படிக்க முடியல. அதற்கு காரணம் எங்களுடைய குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம். 

நாங்க உழைச்சாத்தான் எல்லோரும் சாப்பிடமுடியும்ங்கிற ஏழை குடும்பம் மட்டுமல்ல, பெரிய குடும்பமாகவும் இருந்ததால் அப்பா ஒருத்தர் வருமானத்தில் வாழ முடியாத நிலை. அதனால நானும், என்னுடைய சகோதரர்கள் மூவரும் சின்ன வயசிலேயே வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். 


ஒரு கண்ணாடிக் கடையிலேயே தினக்கூலி வேலைக்கு சேர்ந்தோம். கண்ணாடிகளை எல்லாம் குறிப்பிட்ட அளவில் அறுக்கிற வேலை. எங்கப்பாவும் அந்த கண்ணாடிக் கடையில்தான் வேலை பார்த்தாரு. ஆனா எங்கள வேற ஒரு கடையில சேத்து விட்டாரு. ‘கண்ணாடி வேலை ரெம்ப கஷ்டமான வேலை, தன் கண் முன்னால பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாது’ ன்னு அவருக்கு நினைப்பு.

கண்ணாடிய அறுக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ‘சர்க்கஸ்’-ல கரணம் தப்பினா மரணம்”னு செர்ல்ற மாதிரி. இதில் கத்தி வெட்டு, லேசா தப்பினா ரணம் தான். 

கண்ணாடி சில்லு குத்தியதால நானும் என் சகோதர்களும் நிறைய தடவ ரத்தம் சிந்தியிருக்கோம். என் உடம்பில் கூட நிறைய வடுக்கள் இன்னும் இருக்கு. கண்ணாடி கடை வேலையில் கிடைச்ச மொத்த சம்பளம் எவ்வளவுன்னு சொல்லலியே



2 ‘குரோஸ்’ கண்ணாடி (240 துண்டு) அறுத்தா 40 ரூபா. நாங்க நாலு வேரும் காலையில ஏழு மணிக்கு வேலைக்குப்போயிட்டு வீடு திரும்ப அவ்வளவு உழைச்சாத்தான் 2 குரோஸ் அறுக்க முடியும். 

வழக்கமா வேலை முடிஞ்சிதான் எல்லாரும் சம்பளம் தருவாங்க. நாங்க காலையிலேயே ‘அட்வான்ஸ்’ மாதிரி பத்து ரூபாயோ, இருபது ரூபாயோ வாங்கி வீட்டில் குடுத்திடுவோம். அந்த பணத்தை வச்சித்தான் அரிசி வாங்கி உலை கொதிக்கணும்.

சில சமயங்கள்ல ‘காட்போர்ட்’ அறுத்து கண்ணாடியப் பொருத்தர வேலையும் தருவாங்க. ‘காட்போர்டு’ அறுத்து அதோட தூளு மூக்கு வழிய உடம்பில் போய் என்னோட தம்பி ஒருத்தன் நிரந்தர ஆஸ்துமா நோயாளி அயிட்டான். 
ஒரு வருஷம் இல்ல, ரெண்டு வருஷம் இல்ல. பதிமூணு வருஷம் கண்ணாடி கடையில நாங்க வேலை பார்த்திருக்கோம். ஒரு நாள் வேலைக்கு போகலைன்னா, அடுப்பில் பூனை தான் படுத்து உறங்கும்.

உடம்பில் நோவுன்னாக் கூட மாத்திரை சாப்பிட்டுட்டு மாங்கு மாங்குன்னு கண்ணாடிய அறுப்போம். இன்னைக்கு நான் நல்ல நெலமையில இருக்கிறேன். என்னைக்கும் மதுரையில நான் பார்த்த கண்ணாடி வேலையை மறக்கவே மாட்டேன்.” 

என்று தான் நடிக்க வரும் முன் பார்த்த கடைசி வேலையைப் பத்தி சொல்லுகிறார் வடிவேலு.

10 comments:

  1. சினிமா வரலாற்றில் அரசியலில் ஈடுபட்டதால் இந்த அளவுக்கு மொத்தமாக ஓரங்கட்டப் பட்ட முன்னணி நடிகர் இதற்க்கு முன் இருந்திருப்பாரா என்று சந்தேகமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அரசியலில் ஈடுபட்டதால் இவர் ஓரங்கட்டப்படவில்லை மாறாக அரசியலை பயன்படுத்தி தனி நபர் தாக்குதலில் இறங்கியதால் தான் இவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

      Delete
  2. என்னமோ..ஓரங்கட்டப்பட்டார் விடுங்கள்..

    ReplyDelete
  3. ம்ம்..நல்ல காமெடி நடிகர்..அதோடு இருந்து இருக்கலாம்..

    ReplyDelete
  4. திறமையான நகைச்சுவை கலைஞர் ஒருவரை தனது தனிப்பட்ட (அரசியல்) கருத்து வேறுபாட்டிற்காக ஓரங்கட்டியது தமிழ் திரை உலகத்திற்குத்தான் நட்டம். வடிவேலு இடத்தை யாராலும் நிறப்ப முடியாது. இன்றைய கூத்தாடி ஆட்சி முடிந்த பிறகாவது இவர் மறுபடியும் நம் அனைவரையும் சிரிக்க வைக்க வருவார் என நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. athukulla ivar address irukathu .ammava kokka

      Delete
  5. இன்றும் வடிவேலுவின் வசனத்தை நாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அன்ப்ன் சௌந்தர் - வடிவேலு திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் - மீண்டும் பறப்பார் - காலம் கை கொடுக்க வேண்டும் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!