11 December, 2012

“சின்னப்பயல“ பாரதியும்... உலக அழிவை தடுக்கும் வழிமுறையும்..!

 

பாரதியார் இளம் வயதிலேயே கவித்திறம் பெற்று விளங்கினார். அவரது திறமையைக் கண்ட சான்றோர் பாரதி என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள்.

காந்திமதி நாயகம் என்பவருக்கு அது பிடிக்கவில்லை. எப்படியாவது பாரதியை இழிவுப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு சமயம் “பாரதி  சின்னப்பயல்” என்ற ஈற்றடியைக் கொடுத்து ஒரு வெண்பா இயற்றச் சொன்னார்.

வெண்பா என்பது கடினமானது. சுலபத்தில் இயற்ற முடியாது. அப்படியே இயற்றினாலும் “பாரதி சின்னப்பயல்” என்று தானே முடிக்க வேண்டும் என்று கருதினார்.

பாரதி சற்றும் மலைக்காது வெண்பாவை இயற்றினார். ஈற்றடியை “காந்திமதி நாயகத்தைப் பார்அதி சின்னப்பயல்” என்று முடித்தார். பாரதியாரை இழிவுப்படுத்தக் கருதிய காந்திமதி நாயகம் தாமே இழிவுற்று தலை கவிழ்ந்தார்.

தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நடவடிக்கையையும் வாழ்வியலோடும் நாட்டோம் தொடர்பு படுத்தியே வாழ்ந்தவன் பாரதி. பசித்தபோது கூட நாட்டைப்பாடியவன் இந்த பாரில் அவனுக்கு நிகர் அவனேதான். பாரதியருடைய 131-வது பிறந்தநாளில் அவருடைய பெருமைகளையும் அவனுடைய படைப்புகளையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.

 ************************************************

 
இந்த உலகத்தின் அழிவு
மந்திரத்திலோ, ஜாதகத்திலே அல்லது
வேறு எந்த சக்தியாலும் நடக்கபோவதில்லை....

மரத்தின் அழிவால் தவிர...

நிலமெங்கும் மரம் வளர்போம்... 
உலகை அழிவில் இருந்து காப்போம்...

*************************************


இதற்கும் ஏதாவது கருத்து சொல்லனுமா..?

8 comments:

  1. பாரதி பிறந்த நாளில் ஒரு நல்லப் பதிவு

    ReplyDelete
  2. இன்று ஒரு நாளாவது பாரதியை நினைப்போம்!

    ReplyDelete
  3. பாரதி பாரதிதான்...
    உலக அழிவு மரம் + தண்ணீருக்காகவும் இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது

    ReplyDelete
  4. நான் இப்போதெல்லாம் பாரதியார் நூல்களை படித்துவருகிறேன். அருமையான கருத்துகளை அழகா சொல்லிருக்கார். அவரது பிறந்தநாளை நினைவிற்கு கொண்டுவந்ததற்கு நன்றி நண்பரே!

    மரம் வளர்ப்பதற்குள் வருகிற 21 ல் உலகம் அழிந்துவிட்டால் என்ன செய்வது????
    :-)

    ReplyDelete
  5. பாரதி பிறந்த நாளில் பாரினை மாற்றிப் புதுக்கும் மார்க்கம் அறிந்து மாற்றி உலகை புதியாய் புதுக்க உள்ளம் நினைப்போம்

    ReplyDelete
  6. பார்தி பற்றிய நினைவும்! மரம் வளர்க்க சொன்னதும் மிகவும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  7. பாரதியின் பிறந்த நாளில் ந்லலொதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. பாரதி ஒரு சகாப்தம்....

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!