02 December, 2012

அசைவற்று நின்ற சர்ச்சிலும்...! பன்னிக்குட்டி ராமசாமி புகைப்படமும்...!

 
ஒரு வரலாற்று நகைச்சுவை சம்பவம்.
 
இரண்டாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்த சமயம். அப்பொழுது ஒரு நாள் இரவு பி.பி.சி.யின் தேசிய ஒலிப்பரப்பில் சர்ச்சில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்ச்சில் பி.பி.சி. நிலையத்திற்கு புறப்படும் நேரத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. போரின் காரணமாக குண்டு மழை பொழிவதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

சாலைக்கு விரைந்து வந்த சர்ச்சில் வழியில் வந்த ஒரு டாக்சியை நிறுத்தி பி.பி.சி. நிலையத்திற்குப் போக வேண்டும் என்று கூப்பிட்டார்.

அதற்கு டாக்ஸி டிரைவர் டாக்சி வராது சார். இன்னும் சிறிது நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதைக் கேட்பதற்காகத்தான் நான் அவசர அவசரமாக வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன், என்றார்.

அதைக் கேட்ட சர்ச்சிலுக்குப் பெருமை பிடிபடவில்லை. தனது பேச்சுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் அந்த டாக்சி டிரைவருக்கு அன்பளிப்பு கொடுக்க நினைத்தார். உடனே தன் கோட் பைக்குள் கையைவிட்டு பத்து பவுண்ட் நோட்டு ஒன்றை எடுத்தார்.

வெளியே இருட்டு சூ‌ழ்ந்திருந்ததால் அவர்தான் சர்ச்சில் என்பதை அறியாத அந்த டாக்சி டிரைவர், சர்ச்சில் பணத்தை எடுத்ததைக் கவனித்ததும் அவர் கையிலிருந்த பணத்தை பிடிங்கியவாறு நீங்க வந்து உட்காருங்க சார். சர்ச்சில் பேசினால் பேசிக்கொண்டு போகட்டும். நான் உங்களைக் கொண்டு போய் பி்.பி.சி. நிலையத்தில் விட்டு விடுகிறேன், என்றார்.

சர்ச்சில் ஒரு நிமிடம் அப்படியே அசைவற்று நின்று விட்டார்.
 
***********************************************
 
 
அடுக்குமொழியில் கவிதையோ
அற்புதமாய் அறிவுரையோ
பலவடிவில் பஞ்ச் டயலாக்கோ
தற்போது சொல்ல போவதில்லை...
 
மனித குலம் வளர
மரம் வளர்ப்போம்...

******************************************************
 
funny-scraps-3

இதை பன்னிக்குட்டி ராமசாமியின் புகைப்படம்-ன்னு ஒருத்தர் சொன்னார்...
உங்களுக்கு தெரிஞ்ச அடையாளம் சரியா இருக்கான்னு பார்த்துக்கங்க....

13 comments:

  1. நன்னி...
    அது பன்னியோட இளமைக்கால போட்டோதான்... நன்னி

    ReplyDelete
    Replies
    1. படுகவர்ச்சியாக இருக்காருங்க..

      அடையாளம் காட்டியதற்கு நன்றி அண்ணே..!

      Delete
  2. ஹா ஹா ஹா !!

    நண்பரே! நகைச்சுவையாக அருமையான கருத்தை சொல்லிருக்கிங்க, "கிளாப்ஸ்" வாழ்த்துகள்.

    அந்த படம் யாருடையது என்று எனக்கு தெரியாது நண்பரே, ஆனால் சினிமா நகைச்சுவை நடிகர் போட்டோபோல் இருக்கிறது.

    ReplyDelete
  3. ரெண்டாவது படம் சூப்பர்

    ReplyDelete
  4. ஏம்பா இப்படி படமெல்லாம் போட்டு பயமுறுத்தறே? சர்ச்சில் நகைச்சுவை அருமை!

    ReplyDelete
  5. பணத்தை கண்டவுடனே ரிவர்ஸ் ஆன டாக்ஸி டிரைவர்..சிரிக்க வைத்த நகைச்சுவை. மரம் படம் அழகு! தாத்தா படம் அலறல்!

    ReplyDelete
  6. நல்ல கதை. தன்னுடைய படத்தை உறுதி செய்ய அவர் வர வேண்டும், எங்கே காணோம்!!

    ReplyDelete
  7. படமும் சம்பவமும் சூப்பர் + கலக்கல்

    ReplyDelete
  8. இவர் பன்னிகுட்டி ராமசாமியா?தலையாட்டி தங்கசாமியா?!

    ReplyDelete
  9. ராமசாமி அண்ணே படம் என வந்தா வழக்கம் போல ஏமாதீட்டீரே

    ReplyDelete
  10. அன்பின் சௌந்தர் - சர்ச்சில் பாவம் - நன்று நன்று - நகைச்சுவை நன்று - மனித மரம் படமும் கருத்தும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!