16 February, 2013

ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தை சந்திக்கிறார் வடிவேலு

சினிமாவுலகில் உச்சத்தில் இருந்த வடிவேலுக்கு தேர்தல் சூறாவளி பெரும் பாதிப்பை தந்தது. தற்போது கொஞ்சக்கொஞ்சமாய் வெளிவந்திருக்கும் வடிவேலு தன்னுடைய மகளின் திருமணத்தை முன்னிருத்தி அனைத்து கட்சியினருடனும் சுமூகமாக செல்ல தீர்மானித்திருக்கிறார்.

அதனால் மகளின் திருமணத்துக்கு அரசியல் பேதமின்றி ஜெயலலிதா உள்பட அனைவருக்குமே அழைப்பிதழ் வைக்க நடிகர் வடிவேலு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் வடிவேலு அவர்களின் மூத்த மகளுக்கு வரும் ஏப்ரல் 7-ம் தேதி மண்மனம் மாராத மதுரையில் திருமணம் நடக்கிறது. திருமண வேலைகளில் மும்முரமாக உள்ளார் வடிவேலு. 
மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சடிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. வடிவேலு இப்போது அரசியல் பற்றி பேசுவதில்லை என்றாலும், அவர் சார்ந்திருக்கும் திமுக தலைவர்களை அழைத்தால் மீண்டும் தேவையற்ற சர்ச்சைகள் வரும். எனவே அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாராம். 

இறுதியாய் திமுக மட்டும் இல்லாது அதிமுக சார்ந்த பிரபலங்களுக்கும் மற்றும் அனைத்து அரசியல் தலைவர்களுக்குமே அழைப்பிதழ் தருவதென முடிவு செய்துள்ளாராம். திருமணம் முடிந்த பிறகு பல புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கப் போகிறாராம் வடிவேலு.

அதுசரி அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பத்திரிக்கை கொடுக்க நினைக்கும் வடிவேலு மதுரையை சார்ந்தவரும் தே.மு.தி.க. வின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பத்திரிக்கை வைப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.

7 comments:

  1. பாவம் அவரும் அந்து அவலாகி வெந்து வேலாகிவிட்டார்

    ReplyDelete
  2. கல்யாணம் சிறப்புறவும் வடிவேலு மீண்டும் வரவும் வாழ்த்துவோம்

    ReplyDelete
  3. வடிவேலுவின் வரவினை வாழ்த்துவோம்

    ReplyDelete
  4. //விஜயகாந்தை சந்தித்து பத்திரிக்கை வைப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி//
    அரசியலில் யாரும் நிரந்தர எதிரிஇல்லை .
    நிச்சயம் சந்திப்பார் .

    ReplyDelete
  5. விஜயகாந்தை சந்திக்கிறார் வடிவேலு என்று தலைப்பு வைத்துவிட்டு விஜயகாந்தை சந்தித்து பத்திரிக்கை கொடுப்பாரா என்று நீங்களே கேட்டு இருக்கிறீர்கள். இடன் மூலம் எதாவது ஒரு கவனிக்க வைக்கும் தலைப்பு வேண்டும் உள்ளே மேட்டர் கூட குறைய இருக்கலாம் என்பதா?

    ReplyDelete
  6. அன்பின் சௌந்தர்

    அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை - நிரந்தர நண்பர்களும் இல்லை - நிச்சயம் வடிவேல் அனைவரையும் அன்புடன் அழைப்பார். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!