07 March, 2013

8-வயசு சிறுமி இப்படியா பேசுறது..? காலையிலேயே கண்ணைக்கட்டுதே...!

எட்டு வயது சிறுமி வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக சமையலறைக்குச் சென்று தாயிடம் கேட்டாள்.

ஏம்மா நான் ஒரு சூனியக்காரி மாதிரி பயங்கரமாவா இருக்கேன்?

அம்மா: இல்லையே கண்ணு...!

மகள்: அப்போ என் கண்ணாவது ஆந்தை மாதிரி பெரிய்ய கண்ணா இருக்கா?

அம்மா: இல்லடா தங்கம்...!

மகள்: அம்மா என் மூக்கு தட்டையாவா இருக்கு?

அம்மா: இல்லையேடா...!

மகள்: அட்லீஸ்ட் கொழுத்த பன்றி மாதிரியாவது நான் இருக்கேனா?

அம்மா: இல்லம்மா ஏன் இதெல்லாம் கேக்குறாய்? நீ சும்மா ஹீரோயின் மாதிரி ஸ்லிம்மா தானே இருக்காய்...!

மகள்: அப்போ ஏம்மா எல்லாரும் என்னப் பாத்து நீ உங்க "அம்மா" மாதிரியே இருக்கேம்மானு சொல்றாங்க ?

அம்மா: ??????????????????????
***************************************

ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்கள் வேண்டு வது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.
 
பாகிஸ்தானி தன் முதுகில் இரு தலையணை கட்டச் சொன்னான்;

பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.

மூன்றாவது இந்தியன்., ஷேக் சொன்னார்” எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்’

இந்தியன் கேட்டான் ”எனக்கு 30-க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”

ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்..”அடுத்தது”…

”இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில் கட்டுங்கள்!”

இது எப்புடி இருக்கு?! (நகைச்சுவைக்காக யாரும் தப்பா எடுத்துக்காதீங்க) பேஸ்புக்கில் படித்தது...!

10 comments:

  1. காலையிலேயே சிரிக்கவைத்த கேள்விகள் அற்புதம்

    ReplyDelete
  2. ஹா.. ஹா..! அதிலும் இந்தியன் எதிலும் யோசிப்பான் யோசிக்க வைப்பான்.. நகைச்சுவையா இருந்தாலும் இரண்டாவது இன்னும் ஹா.. ஹா..!

    ReplyDelete
  3. கண்ணுல தண்ணி வர சிரிச்சேன்...

    ReplyDelete
  4. இரண்டாவது தெரியும்..முதல்கதை இப்போதான் படித்தேன் அருமை .. செம காமெடி

    ReplyDelete
  5. முதல் ஜோக் இப்போது தான் படித்தேன்! ரெண்டாவது ஜோக் பேஸ்புக்கில் படித்து நானும் பகிர்ந்து கொண்டது! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு! இதுவும்(நகைச்சுவைக்காக யாரும் தப்பா எடுத்துக்காதீங்க)

    ReplyDelete
  7. அன்பின் சௌந்தர் - இரண்டுமே அருமை - நகைச்சுவையின் உச்சம் - அம்மா போல் இருப்பதும் பாகிஸ்தானியரை முதுகில் கட்டுவதும் . நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. முதக் ஜோக் ரொம்ப சூப்பர். எதிர்பார்க்கவே இல்ல அந்த முடிவு.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!