29 March, 2013

பார்த்துட்டு... படிச்சிட்டு... சிரிச்சிட்டு போங்க...!



நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா????????? ,
 
****************************************

 
 அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

****************************************

 
 பேய் இருக்குன்னா நம்புற நீங்க, கடவுள் இருக்காருன்னா ஏன் நம்ப மாட்டேங்குறீங்க???

என் மனைவிகிட்டேயிருந்து என்னை காப்பாத்த யாரும் இல்லையே...

****************************************

 
 ரசத்துல நான் புளியே போட மறந்துட்டேன்... எப்படி அப்படியே சாப்பிடறீங்க ?

நீ சமையல் பண்ண ஆரம்பிச்சபோதே எனக்கு வயித்துல புளியைக் கரைக்க ஆரம்பிச்சிடிச்சு

****************************************

 
 கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

****************************************


டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .

இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?

ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.
****************************************


(தொகுத்தவைகள்)
பார்த்துட்டு... படிச்சிட்டு... சிரிச்சிட்டு போக வந்த உங்களுக்கு நன்றி...!

17 comments:

  1. அசத்தல்...

    இந்த படங்கள் எல்லாம் எப்படீங்க கிடைக்குது...?

    உங்களின் தேடலுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அப்படி இப்படின்னு புடிக்கிறதுதான் தலைவரே...

      தஙகள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  2. நல்லா சிரிச்சாச்சு... படங்கள் எல்லாக் கலக்கல் ..

    ReplyDelete
    Replies
    1. நல்லா சிரிச்சிங்களா...

      நன்றி கிரேஸ்...

      Delete
  3. பார்த்து படித்து ரசித்துச் சிரித்தேன்
    குறிப்பாக புளி ஜோக்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. படங்கள் வெகுவாக கவர்ந்தது.

    ReplyDelete
  5. முடியல .............
    படங்கள் வெகு அருமை

    ReplyDelete
  6. பாத்தாச்சு;படிச்சாச்சு;சிரிச்சாச்சு!
    காந்திக்கும் நேருவுக்குமே ஒற்றுமை இல்லையே!!:)

    ReplyDelete
  7. அருமை... அருமை.. படித்தேன் ரசித்தேன் முகபுத்தகத்தில் பகிர்ந்தேன்...... நன்றி..

    ReplyDelete
  8. அடப்பாவி போலீசு, இதெல்லாம் அதர பழசுய்யா அவ்வ்வ்வ்....ஆனாலும் படங்கள் அழகு...!

    ReplyDelete
  9. அத்தனை படங்களுமே வியக்க வைத்தன நண்பா! ஜோக்குகள் சில முன்பே கேட்டவைதான். எனினும் இப்பவும் வாய்விட்டுச் சிரிக்க முடிஞ்சது!

    ReplyDelete
  10. வியப்பூட்டும் படங்கள். நன்றி

    ReplyDelete
  11. படங்கள் அருமை. அதேபோலவே காமெடிகளும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!