08 March, 2013

வண்ணங்களால் எண்ணங்கள் செய்கிறேன்...! இது தாய்குலங்களுக்காக...!

வானம் தாண்டியும்
சிறகு விரியுங்கள்
உங்கள் உயரங்களை தடுக்க 
எந்த வானத்தாலும் முடியாது...

பாதங்களில் பயணிக்கும்
வேர்கள் அறுத்து புறப்படுங்கள்
நின்று பூத்து காய்ந்து போக
மரங்களல்ல நீங்கள்...!

 *********************************

பூக்களை கெர்டுத்து உங்களுக்கு
வாழ்த்துசொல்ல முடியாது...

பூவைக்கே பூகொடுத்து வாழ்த்தினால்
பூக்கள் சிரிக்கும் எனைப்பார்த்து...!

 *********************************

மலர்வனங்களும்
மகிழ்விக்கும் உன்னை...!

இந்த உலகளின் உயிர்களுக்கு
நீ அன்னை...!

*************************

கால்களின் விலங்குகளுக்கு 
இனி விலக்கு அளியுங்கள்...
 
கைகளின் சங்கிலிகளுக்கு 
இனி முடிவு கட்டுங்கள்...
கண்களின் கடிவாளங்களை 
அவிழ்த்தெரிந்துவிட்டு நடைபோடுங்கள்...

நாளை உலகை சுமக்கும்
உன்னத பொறுப்பு உங்களிடமே...!
 *********************************
பெண்கள் பேசும் ஓவியங்கள்...

 *********************************

 
 வண்ணங்களினால் எண்ணங்கள் செய்கிறேன்
இந்த உலகிற்கு வசந்தங்கள் தரும்
இனிய வண்ணத்துபூச்சிகளுக்கு...!

 *********************************

தாய்குலங்களின்
தாய் இவள்..!
 
அன்பு என்ற குழந்தைக்கு 
நிரந்தர அன்னை இவள்...!
 
பெண்ணினத்தில் போற்றவேண்டிய 
பொக்கிஷம் இவள்...!

உலகம் என்ற ஓடையில் நீந்திய
பொறுமையின் பொருள் இவள்..!

உன்னைபோற்றி பெருமைபடுகிறோம்
உன்னை நினைத்து உலகைபார்க்கிறோம்.....

 *********************************

 
பெண்மையை போற்றுவோம்...!

மார்ச் 8
உலக மகளிர் தினம்...!

7 comments:

  1. அருமை! பெண்மை போற்றுவோம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. கவிதைகள் நன்று சௌந்தர்.
    முதல் கவிதையில் சிறகு என்பதற்கு விறகு என்று உள்ளது. சரி செய்யவும்.transliteration மூலம் பதிவிட்டால் இதுபோல் நம்மையும் அறியாமல் தவறு ஏற்பட்டு விடுகிறது.

    ReplyDelete
  3. பூவைக்கே பூகொடுத்து வாழ்த்தினால்
    பூக்கள் சிரிக்கும் எனைப்பார்த்து...!
    >>
    எப்படியும் உங்க பொழைப்பு சிரிப்பாதான் சிரிக்க போகுது??!! இதுல பூ கொடுத்துட்டே சிரிக்க வெச்சிடுங்க நல்ல பேராவது மிஞ்சும்

    ReplyDelete

  4. இனிய மகளிர் தினம் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  5. இன்றல்ல... என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!