12 April, 2013

இதற்கும் அவளே தான் காரணம்...?




ஒவ்‌வொறு இரவும்
கனவுகளாலே நிறைகிறது...
 

கனவுகள் நினைவில் நிற்பதில்லை
விடியும் வரை...



சோலையாக இருக்கும்
சாலையாக இருக்கும்...
சிலசமயம் சோகமானதாக இருக்கும்
சொர்கமாகவும் இருக்கும்...


இப்படியாய் ஒவ்வொறு கனவும்

அழகிய வேடங்களை பூண்டு வருகிறது
தினம்... தினம்...


விடிந்தவுடன் முடிந்துவிடுகிறது
இரவில் வரும் கனவுகள்...


கற்பனைக்கு எட்டாத காட்சிகள்
திகைப்பூட்டும் சம்பவங்கள்
காதல் பரவசங்கள் - ஆனால்
ஏதும் நினைவில் நிற்பதில்லை இறுதியில்...!


இதில் ஒன்று மட்டுமே உண்மை
என் எல்லா கனவுகளிலும்
நீயே நிறைந்திருக்கிறாய்..!

தங்கள் வருகைக்கு நன்றி...!

7 comments:

  1. அருமை அருமை
    இறுதி வரிகள் மனம் கவர்ந்தது
    கனவுகளும் கவிதைகளும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை... இனிமை என்றும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //இதில் ஒன்று மட்டுமே உண்மை
    என் எல்லா கனவுகளிலும்
    நீயே நிறைந்திருக்கிறாய்..!//

    அருமை தோழரே.

    ReplyDelete
  4. காதல் நிறைந்த கவிதை

    ReplyDelete
  5. //இதில் ஒன்று மட்டுமே உண்மைஎன் எல்லா கனவுகளிலும்
    நீயே நிறைந்திருக்கிறாய்..!//
    அருமை! அருமை! இதுவன்றோ காதல்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!