01 May, 2013

எதிர் நீச்சல் - திரை விமர்சனம் / ethir neechal - tamil movie review

ஒவ்‌வொறு மனிதர்களுக்குள்ளும் வெளியே சொல்லமுடியாத ஒரு நெருடல்கள் ஒளிந்துக்கொண்டிருக்கும். அது வாழும் இடம், வாழும் முறை, வேலைவாய்ப்பு, காதல், தன்னைசுற்றியுள்ளவர்கள், தன்னுடைய குடும்பத்தில் உள்ள குறை போன்றவை....  இவைகள் நம்மை பொது இடத்தில் சுதந்திரமாக இருக்கவிடாது. ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும். அதே போல் தான் ஒவ்வொறு மனிதருக்கும் வைக்கும் பெயர்... 

கிராமங்களில் பார்த்தால் அவர்களின் குழந்தைக்கு வைக்கும் பெயர் அவர்களுடைய குலதெய்வத்தினுடையதாகவும், தன்னுடைய முன்‌னோர்களுடையதாகவும் இருக்கும் இப்படி பழைய பெயர்களை வைக்கும்போது அவர்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்து  ‌பெயரில் அப்படி ஒன்றும் இல்லை அவரவர் செய்யும் சாதனையில்தான் இருக்கிறது வாழ்க்கை என்பதை காட்டி கைதட்டல் வாங்கும் படம்தான் எதிர் நீச்சல்.


பல வருடங்களாக குழந்தை இல்லாமல் பிறக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது அம்மா சுகபிரசவம் நடந்தால் குலதெய்வத்தில் பெயரை வைப்பதாக வேண்டிக்கொள்கிறார். அதன்படி அவருக்கு  “குஞ்சிதபாதசாமி” என்று பெயர் வைக்கிறார்கள். அந்த பெயரால் வீடு, பள்ளி, கல்லூரி, நண்பர்கள் என எல்லா இடங்களில் கிண்டலடிக்கப்படுகிறார் சிவகார்த்திகேயன். (எல்லோரும் அவரை குஞ்சி ஏன்றே அழைக்கிறார்கள்)

இந்த பெயரரை மாற்றிவிடவேண்டியதுதான் என்று முடிவெடுக்கும்போது அவரது குடம்பத்தில் ஏதாவது அபசகுணங்கள் ஏற்படுகிறது. ‌அதனால் அந்த பெயரை மாற்றாமல் இருந்து விடுகிறார். 

கடைசியில் காதலுக்கே இந்த பெயர் பிரச்சனையாகவரும் போது மனம் நொடிந்துபோகிறார் நாயகன். தற்போது தனக்குதான் யாரும் இல்லையே பெயரைமாற்றினால் என்ன என முடிவெடுக்கிறார்.




ஒரு நியூமராலாஜியை (மனோபாலா) சந்தித்து தன்னுடைய பெயரை “‘ஹாரீஸ்“ என்று மாற்றிக்கொள்வது மட்டுமில்லாமல் தன்னுடை வீடு, வேலை, ஏரியா என அத்தனையையும் மாற்றி ஹாரீஸாக மாறுகிறார்.

இங்குதான் பள்ளி ஆசிரியராக வரும் நாயகி ப்ரியா ஆனந்தை சந்தித்து காதலாகிறது. இப்படி சுபமாக போகும் காதலில் நாயகிக்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய பெயரை மறைத்தது தெரியவர அதை எப்படி சமாளிக்கிறார் என்பதையும், அந்த பெயர் பிரபலமாக என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார் என்பதும் மீதிக்கதை.

படம் முழுக்க நகைச்சுவை கலந்திருக்கிறது. இடைவேளை வரை அவருடைய பெயரால் அவர்படும் அவஸ்தைகளை ரசிக்கும்படியாக படமாக்கியிருப்பது அழகு.


சிவகார்த்திகேயன் மிகக்குறைந்த காலத்தில் எல்லா காட்சிகளுக்கும் தைத்தட்டல் வாங்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது பராட்டுதலுக்குரியது. அவரது நடிப்பு ஒரு வித்தியாசமான பாணியில் ரசிக்கும்படியிருக்கிறது. காதலியின் பின்னால் சுற்றும்போதும், காதலை சொல்லும்போதும், காதலை வளர்க்கும்போதும் அந்த காதலில் ஜெயிக்க அவர் முயற்சிக்கும்போதும் அசத்தல் என்று சொல்லலாம்.

பாடல்கள் அத்தனையும் அழகாக வந்திருக்கிறது. “3“ படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத் இந்தபடத்துக்காகவும் கண்டிப்பாக பேசப்படுவார். பின்னணி இசையும் கைத்தட்டும்படி இருக்கிறது.

நாயகி ப்ரியா ஆனந்த அழகான நடிப்பால் அசத்தியிருக்கிறார். மற்றொறு வலிமையான கதாபாத்திரத்தில் நந்திதாவும் அழகாக நடித்திருக்கிறார்கள்.  மேலும் படத்தில் ஜெயபிரகாஷ், மனோபாலா, மதன்பாப் என தன்னுடைய பாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்கள். 


சிவகார்த்திகேயனுக்கு நண்பராகவரும் (அவரது பெயர் தெரியவில்லை) டெய்லர் இருவரும் செர்ந்து செய்யும் அட்டகாசம் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்திவிடுகிறது.


இடைவேளை வரை நகைச்சுவையாக நகரும் கதை பிற்பாதியில் தன்னுடைய பெயரை பிரபலபடுத்த சிவகார்த்திகேயன்  சென்னை மராத்தான் போட்டியில் கலந்துக்கொள்கிறார். அந்த போட்டியில் இரை வெற்றியடைசெய்ய கோச்சாக இருப்பவர் நந்திதா (அவருக்கும் ஒரு பிளாஷ்போக் இருக்குங்க அதை இங்கு சொன்ன நல்லாயிருக்காது அதை கண்டிப்பாக படத்தை பார்த்து தெரிஞ்சிக்கங்க)

படத்தில் இடைவேளை முடிந்ததும் ஆட்டத்துக்குவருகிறார் தனுஷ். ஒயின்ஷாப்பில் கண்டிப்பாக காதலில் தொற்வர்கள் இருப்பார்கள் அவர்களுக்காக யாரும் சப்போர்ட்டுக்கு வருவார்கள் என்று சொல்லி ஆடும் அவரது நடனம் உண்மையில் அருமை. அந்த பாடல் ரசிகர்களையும் உற்சாகப்படுவது மட்டுமின்றி படத்துக்கும் வலிமை சேர்க்கிறது.

பெயரில் என்ன இருக்கிறது. நம்முடைய முயற்சியும் வெற்றிகளுமே ஒரு பெயரை அடையாளப்படுத்தும். நமக்கும் பெற்றோர்கள் வைக்கும் பெயர் என்பது சாதாரணமானது அல்ல அது ஒரு பரம்பரையில் அடையாளம், அது ஒரு வம்சத்தில் ஞாபகம் என்று நியாயப்படுத்தி படத்தை முடிக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார்.

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து கைத்தட்டி சிரித்து ரசிக்கும்படியான படமாக இருக்கிறது எதிர்நீச்சல்.


நானும் வேடந்தங்கல் கரனும் சேர்ந்து திருவள்ளூர் லட்சுமி திரையரங்கில் இப்படத்தை பார்த்தோம்...

15 comments:

  1. எப்படியோ நல்லதொரு விசயத்தை நியாயப்படுத்தி உள்ளார் இயக்குனர் என்பதில் சந்தோசம்...

    சுடச்சுட இணைய முதல் விமர்சனம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தலைவரே... படத்துக்குபோயி விமர்சனம் எழுதி ரொம்ம நாளாச்சி அதான் காலையிலே படத்துக்கு போயிட்டோம்...

      நல்லது

      Delete
  2. சூடான விமர்சனம்.... கண்டிப்பா பாக்கலாம்னு சொல்லிட்டீங்க.... போயிருவோம்..

    ReplyDelete
  3. பெயரில் என்ன இருக்கிறது செயலில் அல்லவா காட்டவேண்டும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. இதைதாங்க படமா எடுத்திருக்காங்க...

      கருத்துக்கு நன்றி

      Delete
  4. என் அப்பா பெயரும் குஞ்சிதபாதம் தான் ...

    ReplyDelete
    Replies
    1. கிராமத்துல பேர சுருககி அழைத்தாலும் பிரச்சனை இல்லை...

      ஆனால் நகரத்தில் தற்போதைய வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினம்தான்...

      மகனே உனக்கு வச்சிருக்கனும் அந்த பேரை...

      Delete
  5. சிவகார்த்திகேயா நீலாம் நல்லா வருவையா ....தலைப்பு பாடல் சிங்கையில் செம ஹிட்டு ...

    பஸ்ஸ கொழுத்துங்கடா!

    ReplyDelete
  6. எனக்கு என்னமோ சிவாவை பிடிக்கவில்லை அதனால படம் பார்த்த தான்

    ReplyDelete
  7. எதிர்நீச்சல் என்றதும் அன்றைய பாலச்சந்தர் படம் தான்
    நினைவுக்கு வந்தது....
    அருமையான விமர்சனம் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  8. நல்ல விமர்சனம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!