15 May, 2013

புவியிர்ப்பு விசைக்கு விதிவிலக்கான பெண்...! குழப்பத்தில் உலகம்...!




ல்லை மட்டுமே எடுத்து வந்தார்கள்
நீ சென்றிருந்தால்
நிலவையும் அல்லவா கொண்டு வந்திருப்பாய்..!


ணு பிளவும்.. அணு இணைப்பும்... பற்றியே 
இன்னும் புரியவில்லை எனக்கு...
அப்படியிருக்க எப்படி தெரிந்துக்கொள்வது
அதைவிட குழப்பமான 
உன்னைப்பற்றி..!

ந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல்
என்னை அந்தரத்தில் நடக்க வைத்தள் நீ...!
யாருக்கும் தெரியாது நீயும் நானும்
புவிஈர்ப்பு விசைக்கு விதிவிலக்கென்று...

திராளியைக்கூட மன்னிக்கத் தோன்றுகிறது
உன்னிடம் பார்வையாலும் மௌனத்தாலும்
வதைப்பட்டபின்..!

லிகளை தாங்கிக்கொள்ளும் வலிமை 
என் மனதுக்கு இருந்தாலும்
காயப்படுத்தும் உன் நினைவுகளுக்கு எதிராக
வலிமையாற்றுப் போகிறது அது...!


ல்லா பிரச்சனைகளுக்கும்
இருக்கிறது தீர்வு... ஆனால்
நம்மை...
காதல் கடலில் இருந்து
இல்லற கரைசேர்க்கதான்

யாருக்கும் இல்லை நேரம்...

கவிதை கரு : சமூகம்
படங்கள் : கூகுள்


13 comments:

  1. ரொம்ப புடிச்சிருக்கு..

    ReplyDelete
  2. நல்லாருக்குண்ணா!

    ReplyDelete
  3. அருமை... இணைத்த படம் பிரமாதம்...

    ReplyDelete
  4. படமும் வரிகளிலும் அழகு.

    ReplyDelete
  5. எல்லா பிரச்சனைகளுக்கும்
    இருக்கிறது தீர்வு... ஆனால்
    நம்மை...
    காதல் கடலில் இருந்து
    இல்லற கரைசேர்க்கதான்
    யாருக்கும் இல்லை நேரம்...

    வருந்தத் தக்க நிலைதான்!

    ReplyDelete
  6. அணு பிளவும்.. அணு இணைப்பும்... பற்றியே
    இன்னும் புரியவில்லை எனக்கு... //நல்ல கேள்வி?

    ReplyDelete
  7. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. படமும் பாடல்களும் அருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!