23 May, 2013

உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்த எளிய வழிகள்...!


உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை.


சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். 
உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பது இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி செய்து வந்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.

* அனைத்து வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இதுவும் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியான உடற்பயிற்சி தான்.


* தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், முதலில் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னால் எழ வேண்டும். அப்போது கால்களையும் முன்னோக்கி தூக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் படிப்படியாக குறையும்.


* தரையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகள் இரண்டையும் தரையில் பதித்து, கால் கட்டை விரல்கள் இரண்டையும் தரையில் ஊன்றி போலன்ஸ் செய்து உடலை மேலே தூக்கிக் கொண்டு, பின் மெதுவாக முன்புறமாக மூக்கு தரையில் தொட்டு படி குனிந்து, பின் மீண்டும் உடலே மேலே தூக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் மார்புகள் நன்கு வலிமை பெறும்..


* ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியே தான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.


* இதுவும் ஒரு சிறுவயது விளையாட்டு தான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம்.


* டேபிள் அல்லது கட்டிலில் கைகளை ஊற்றி, முன்னும் பின்னும் எழ வேண்டும். மற்றொன்று, கால்களை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, கைகளை தரையில் வைத்துக் கொண்டு, மேலும் கீழம் எழ வேண்டும். இவ்வாறு சிறு பயிற்சிகளை செய்து வந்தால் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.  

முயற்சித்துப்பாருங்கள்...!

13 comments:

  1. மிகவும் அருமையான தகவல்கள், நானும் முயல்கின்றேன். :)

    ReplyDelete
  2. நல்ல முறைகள்..

    எத்தனை பேர் தொடரப் போகிறார்களோ :))

    ReplyDelete
  3. சோம்பலை விடுத்து செய்யணுமே....

    ReplyDelete
  4. எடையை குறைக்கலாம்ன்னு இருக்குற நேரத்துல போட்டிருக்கீங்க. நல்ல ரிசல்ட் தெரிஞ்சா ஆரணில ஒரு பாராட்டு விழா நடத்துறேன் சகோ!

    ReplyDelete
  5. உடல் பயிற்சி குறிப்புக்கள் எளிமையானவை! அருமையானவை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. இதெல்லாம் கடப்பாறையை முழுங்கிட்டு சுக்கு கஷாயம் குடிக்கிற வேலை......... ஹா.......ஹா............ஹா..........

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்கள். நானும் இன்றிலிருந்து தொடங்குகின்றேன். நன்றி

    ReplyDelete
  8. வீட்டு வேலை கூட பெரிய எக்ஸ்ர்சைஸ்தாங்க.. ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் சோம்பல் படாம உழைச்சா அப்புறமேது உடல் பருமன்?

    ReplyDelete
  9. படிக்கும் பொழுது ஈஸியாகத்தான் இருக்கிறது....

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!